இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள “குறிப்புகள்” செயலியில் கணக்குகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்

குறிப்புகள் செயலியில் iCloud, எண்டர்பிரைஸ் மூலம் நிர்வகிக்கப்படும் iCloud, Microsoft Exchange, Google, Yahoo போன்ற பல கணக்குகளை நீங்கள் பயன்படுத்தலாம், மேலும் உங்கள் குறிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்துக்கொள்ளலாம். ஒரே கணக்குகளைப் பயன்படுத்தும் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் குறிப்புகள் சமீபத்திய நிலையில் இருக்கும். இந்தச் சாதனத்தில் மட்டும் நீங்கள் வைத்திருக்கும் குறிப்புகளுக்கு "எனது iPhoneஇல்" கணக்கையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

குறிப்பு: நீங்கள் iCloud மற்றும் “எனது iPhoneஇல்” கணக்கைப் பயன்படுத்தும்போது இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ள குறிப்புகள் அம்சங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற கணக்குகளைப் பயன்படுத்தும்போது சில அம்சங்கள் கிடைக்காது.

iCloud மூலம் உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் குறிப்புகளைச் சமீபத்திய நிலையில் வைத்திருத்தல்

உங்கள் iCloud குறிப்புகள் மற்றும் அவற்றில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் நீங்கள் Apple கணக்கில் உள்நுழைந்துள்ள iPhone, iPad, Mac ஆகியவற்றில் காட்டப்படும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் பெயரைத் தட்டி iCloud என்பதைத் தட்டவும்.

  3. குறிப்புகளை ஆன் செய்யவும்.

மற்ற கணக்குகளைச் சேர்த்தல்

Microsoft Exchange, Google, Yahoo போன்ற மற்ற கணக்குகளில் உங்கள் குறிப்புகளை நிர்வகிக்க “குறிப்புகள்” செயலியைப் பயன்படுத்தலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “குறிப்புகள் கணக்குகள்” என்பதைத் தட்டி, “கணக்கைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ஒரு கணக்கு வழங்குநரைத் தேர்வுசெய்து, உங்கள் கணக்குத் தகவல்களை உள்ளிடவும்.

    • உங்கள் கணக்கு வழங்குநர் பட்டியலிடப்படவில்லை எனில், “மற்றவை” என்பதைத் தட்டவும், “Mail கணக்கைச் சேர்” என்பதைத் தட்டி, உங்கள் மின்னஞ்சல் கணக்குத் தகவலை உள்ளிடவும், பிறகு அந்தக் கணக்கிற்கு “குறிப்புகளை” ஆன் செய்யவும்.

“எனது iPhoneஇல்” கணக்கை அமைத்தல்

இந்தக் கணக்கில் உள்ள குறிப்புகள் உங்கள் iPhoneஇல் மட்டுமே காட்டப்படும், மேலும் அவை iCloudஇல் உள்ள உங்கள் iPhone பேக்அப்களில் சேர்க்கப்படும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “எனது iPhoneஇல்” கணக்கை ஆன் செய்யவும்.

கணக்கை அகற்றுதல்

நீங்கள் ஒரு கணக்கை அகற்றும்போது அல்லது நீக்கும்போது, அந்தக் கணக்கில் உள்ள குறிப்புகள் உங்கள் iPhoneஇல் காட்டப்படாது. குறிப்புகள் உங்கள் இணையக் கணக்கிலும் (எடுத்துக்காட்டாக, iCloud.com அல்லது Google) நீங்கள் ஏற்கனவே அமைத்த பிற சாதனங்களிலும் அப்படியே இருக்கும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. செயலிகள் என்பதைத் தட்டி “குறிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. குறிப்புகள் கணக்குகளைத் தட்டி, நீங்கள் அகற்ற விரும்பும் கணக்கைத் தட்டவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • கணக்கில் குறிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்துதல்: குறிப்புகளை ஆஃப் செய்யவும்.

      Mail போன்ற பிற சேவைகளுக்கு நீங்கள் தொடர்ந்து இந்தக் கணக்கைப் பயன்படுத்தலாம்.

    • கணக்கில் உள்ள அனைத்துச் சேவைகளையும் பயன்படுத்துவதை நிறுத்துதல்: “வெளியேறு” (iCloud கணக்கிற்கு) என்பதைத் தட்டவும் அல்லது “கணக்கை நீக்கு” (பிற கணக்குகளுக்கு) என்பதைத் தட்டவும்.

      “வெளியேறு” அல்லது “கணக்கை நீக்கு” என்ற விருப்பம் காட்டப்படவில்லை எனில், உங்கள் கணக்கை உங்கள் நிறுவனம் நிர்வகிக்கக்கூடும். அகற்றுதல் குறித்த வழிமுறைகளுக்கு “நிர்வாகி” பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.