iPhoneஇல் கால்குலேட்டர் செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

கால்குலேட்டர் செயலியில் உள்ள அடிப்படை அல்லது அறிவியல் பயன்முறையைப் பயன்படுத்தி கணிதத் தீர்வுகளைக் கண்டறியலாம், யூனிட்களை மாற்றலாம் அல்லது கணிதக் குறிப்புகளைப் பயன்படுத்தி கணக்குக் கேள்விகளைக் கையால் எழுதலாம் மற்றும் கிராஃப்களை உருவாக்கலாம்.

மெமரி, மடங்கு, மடக்கை மற்றும் முக்கோணவியல் செயல்பாடுகளைக் கொண்ட அறிவியல் கால்குலேட்டர் ஒரு iPhoneஇல் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பணிக்கான கால்குலேட்டரைத் தேர்வுசெய்தல்

அடிப்படைக் கணக்குகளுக்குத் தீர்வுகாணலாம் அல்லது அறிவியல் கால்குலேட்டருக்கு மாறி பின்னங்கள், அடுக்குகள், வர்க்கமூலங்கள், மடங்குகள், மடக்கைகள், முக்கோணவியல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட கணக்கீடுகளைச் செய்யலாம். “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “அடிப்படை” அல்லது “அறிவியல்” என்பதைத் தட்டி உங்கள் கணிதக் கோவையை உள்ளிடவும்.

iPhoneஇல் உள்ள அடிப்படை கால்குலேட்டரில் நாணய மாற்றம் காட்டப்பட்டுள்ளது.

யூனிட்களை எளிதாக மாற்றுதல்

மைலில் இருந்து மில்லிமீட்டருக்கு மாற்ற வேண்டுமா? யென்னில் இருந்து யூரோக்களுக்கு மாற்ற வேண்டுமா? “அலகு மாற்றம்” பயன்முறை மூலம் நீளம், எடை, ஆற்றல், அழுத்தம், வேகம், நாணயம் மற்றும் பலவற்றின் யூனிட்களை மாற்றலாம். “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, மாற்று என்பதை ஆன் செய்து, யூனிட்கள் அல்லது நாணயங்களைத் தேர்வுசெய்ய “யூனிட்” பட்டன்-ஐத் தட்டவும்.

iPhoneஇல் உள்ள கால்குலேட்டர் செயலியில் கணிதக் குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன. அதில் 3 மாறிகள் கொண்ட இரண்டு சமன்பாடுகளும் அவற்றுடன் தொடர்புடைய முப்பரிமாண வரைபடங்களும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்துக் காட்டப்பட்டுள்ளன.

கணிதக் கோவைகளை கிராஃப்களாக வரைதல்

கணிதக் குறிப்புகளில் கணிதக்கோவைகளுக்குத் தீர்வு காணலாம், மாறிகளைப் பதிலீடு செய்யலாம், கிராஃப்களை வரையலாம். “பயன்முறையை மாற்று” பட்டன்-ஐத் தட்டி, “கணிதக் குறிப்புகள்” என்பதைத் தட்டி, இரண்டு அல்லது மூன்று மாறிகள் கொண்ட சமன்பாட்டை எழுதவும். உங்கள் கிராஃபை வடிவமைக்க, சமன்பாட்டிலுள்ள “சமன்” குறியீட்டைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.