இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

Bluetooth ஆக்சஸரியில் உங்கள் iPhoneஇல் இருந்து ஆடியோவை பிளே செய்தல்

உங்கள் iPhoneஐ Bluetooth ஆக்சஸரியுடன் இணைத்த பிறகு உங்கள் iPhoneஇல் இருந்து வரும் ஆடியோவை ஆக்சஸரியில் பிளே செய்யலாம், கட்டுப்படுத்தலாம்.

Bluetooth ஆடியோ ஆக்சஸரியில் உங்கள் iPhoneஇல் இருந்து ஆடியோவை பிளே செய்தல்

  1. உங்கள் iPhoneஇல் இசை, பாட்காஸ்ட்கள் போன்ற ஆடியோ செயலியைத் திறந்து ஓர் ஐட்டத்தை பிளே செய்யவும்.

  2. “பிளேபேக் சாதனம்” பட்டன்-ஐத் தட்டி உங்கள் Bluetooth ஆக்சஸரியைத் தட்டவும்.

    ஆடியோ பிளே செய்யப்படும்போது, பூட்டுத் திரை அல்லது கட்டுப்பாட்டு மையத்தில் பிளேபேக் சாதனத்தை மாற்றலாம்.

  3. ஆடியோவை இடைநிறுத்த அல்லது பிளே செய்ய, ஒலியளவைச் சரிசெய்ய, டிராக்குகளை மாற்ற மற்றும் பலவற்றைச் செய்ய உங்கள் iPhoneஇல் உள்ள கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

Bluetooth ஆக்சஸரியை வரம்பிற்கு வெளியே நகர்த்தினால், உங்கள் iPhone பிளேபேக் சாதனமாக மாறும்.

குறிப்பு: iPhone மூலம் ஹெட்ஃபோன்களில் கேட்கும்போது உரத்த ஒலியில் இருந்து உங்கள் செவித் திறனைப் பாதுகாப்பது பற்றிய தகவல்களுக்கு, iPhoneஇல் உள்ள “உடல்நலம்” செயலியில் செவிதிறன் அம்சங்களைப் பயன்படுத்துதல் பிரிவைப் பார்க்கவும்.

மூன்றாம் தரப்பு Bluetooth ஆக்சஸரிகள் மற்றும் சாதனங்களின் ஆடியோ துல்லியத்தை மேம்படுத்துதல்

உங்கள் iPhoneஇல் Bluetooth சாதன வகையை (ஹெட்ஃபோன், ஸ்பீக்கர், கார் ஸ்டீரியோ போன்றவை) குறிப்பிடுவதன் மூலம் மூன்றாம் தரப்பு Bluetooth சாதனங்களின் ஒலியை மேம்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > Bluetooth என்பதற்குச் சென்று ஆக்சஸரி அல்லது சாதனத்தின் பெயருக்கு அடுத்துள்ள “கிடைக்கக்கூடிய செயல்கள்” பட்டன்-ஐத் தட்டவும்.

  2. “சாதன வகை” என்பதைத் தட்டி, சாதனத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.