இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் “இடம் அறி” செயலியில் AirTag அல்லது ஐட்டத்தைக் கண்டறிதல்

உங்கள் Apple கணக்கில் பதிவுசெய்துள்ள AirTag அல்லது மூன்றாம் தரப்பு ஐட்டம் தொலைந்துபோனால் அவற்றைக் கண்டறிய “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தலாம். உங்களிடம் iPhone 15 அல்லது அதற்குப் பிந்தைய மாடல் இருந்தால், அவற்றின் துல்லியமான இடத்தையும் நீங்கள் கண்டறியலாம்.

AirTag அல்லது மூன்றாம் தரப்பு ஐட்டத்தைப் பதிவுசெய்வது எப்படி என்று அறிக.

ஓர் ஐட்டத்தின் இருப்பிடத்தைக் கண்டறிதல்

திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, கண்டறிய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  • ஐட்டத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடிந்தால்: மேப்பில் காட்டப்படும், அது எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். ஐட்டத்தின் பெயருக்குக் கீழே இருப்பிடமும் டைம்ஸ்டாம்ப்பும் காட்டப்படும். “இடம் அறி” நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது ஐட்டத்தின் இருப்பிடம் புதுப்பிக்கப்படும்.

  • இருப்பிடத்தைக் கண்டறிய முடியாவிட்டால்: அது கடைசியாக எங்கு, எப்போது இருந்தது என்பது காட்டப்படும். அறிவிப்புகளுக்குக் கீழே, “கண்டறியப்படும்போது தெரிவித்தல்” என்பதை ஆன் செய்யவும். மீண்டும் கண்டறியப்படும்போது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

    முக்கியம்: “இடம் அறி” செயலிக்கு அறிவிப்புகளுக்கான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். iPhoneஇல் அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

ஒலியை பிளே செய்தல்

ஐட்டம் அருகில் இருந்தால், அதைக் கண்டறிய உங்களுக்கு உதவும் வகையில் அதில் ஒலியை பிளே செய்யலாம்.

குறிப்பு: ஐட்டத்தில் ஒலியை பிளே செய்ய முடியாது எனில், “ஒலியை பிளே செய்” பட்டன் உங்களுக்குக் காட்டப்படாது.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் ஒலியை பிளே செய்ய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. “ஒலியை பிளே செய்” என்பதைத் தட்டவும்.

    பிளே செய்தல் தானாகவே முடிவடைவதற்கு முன்பாக அதை நிறுத்த, “ஒலியை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

ஐட்டத்தின் இருப்பிடத்திற்கான வழிகளைப் பெறுதல்

ஓர் ஐட்டத்தின் தற்போதைய இருப்பிடம் அல்லது கடைசி இருப்பிடத்திற்கான வழிகளை மேப்ஸ் செயலியில் நீங்கள் பெறலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, இருப்பிடத்திற்கான வழிகளை அறிய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. மேப்ஸைத் திறக்க “வழிகள்” என்பதைத் தட்டவும்.

வழிகளைப் பெறுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

AirTagஇன் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிதல்

ஆதரிக்கப்படும் iPhone உங்களிடம் இருந்து, உங்கள் AirTagக்கு அருகில் நீங்கள் இருந்தால், AirTagஇன் துல்லியமான இருப்பிடத்தை நீங்கள் கண்டறியலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, “அருகிலுள்ள AirTag” என்பதைத் தட்டவும்.

  3. “கண்டறி” என்பதைத் தட்டவும்.

    கோல்டன் கேட் பூங்காவில் டேனியின் சாவி இருப்பது “இடம் அறி” செயலியின் திரையில் காட்டப்பட்டுள்ளது. அருகிலுள்ள AirTagஐக் கண்டறிய “கண்டறி” பட்டனைத் தட்டவும்.
  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • AirTagக்கு அருகில் நகர்தல்: AirTag ஐக் கண்டறிய அங்குமிங்கும் நகர்ந்து, திரையில் காட்டப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும். AirTag இருக்கும் திசையைக் காட்டும் அம்புக்குறி, தோராயமாக எவ்வளவு தூரத்தில் உள்ளது, வேறொரு தளத்தில் இருந்தால் அதுதொடர்பான குறிப்புகள் போன்றவை உங்களுக்குக் காட்டப்படலாம்.

    • ஒலியை பிளேசெய்தல்: AirTagஇல் ஒலியை பிளேசெய்ய “ஒலியை பிளேசெய்” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. நீங்கள் AirTagஐக் கண்டறிந்ததும், “மூடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.