இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் வானிலையைச் சரிபார்த்தல்

நீங்கள் தற்போது இருக்கும் இருப்பிடத்தின் வானிலையைப் பார்க்கவும். இனிவரும் மணிநேர மற்றும் 10-நாள் முன்னறிவிப்பைப் பார்க்கலாம், மோசமான வானிலை பற்றிய தகவல்கள் மற்றும் பலவற்றைப் பார்க்கலாம்.

“வானிலை” செயலியில் மேலிருந்து கீழாக இவை காட்டப்பட்டுள்ளன: இருப்பிடம், தற்போதைய வெப்பநிலை, ஒருநாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை, மணிநேர முன்னறிவிப்பு, 10-நாள் முன்னறிவிப்பின் முதல் சில நாட்கள். கீழே மையத்தில் உள்ள புள்ளிகளின் வரிசை, இருப்பிடப் பட்டியலில் உள்ள பிற இருப்பிடங்களைக் குறிக்கிறது. கீழ் வலது மூலையில் “இருப்பிடப் பட்டியல்” பட்டனும், கீழ் இடது மூலையில் “மேப்பைக் காட்டு” பட்டனும் உள்ளன.

குறிப்பு: மோசமான வானிலை குறித்த எச்சரிக்கைகள், காற்றின் தரம், அடுத்த மணிநேர மழைப்பொழிவு மற்றும் செய்திகள் போன்ற வானிலை செயலியின் சில அம்சங்கள் எல்லா நாடுகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைக்காது. வானிலை செயலிக்கான தரவு ஆதாரங்கள் குறித்து அறிய வானிலை செயலியில் “அம்சங்கள் கிடைக்கும் தன்மை” மற்றும் “தரவு ஆதாரங்கள்” என்ற Apple ஆதரவு கட்டுரையைப் பார்க்கவும்.

தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவை

நீங்கள் தற்போதுள்ள இருப்பிடத்திற்கான முன்னறிவிப்பைப் பெற, வானிலை செயலி இருப்பிடச் சேவைகளைப் பயன்படுத்துகிறது. முன்னறிவிப்பின் துல்லியத்தை அதிகரிக்க “துல்லியமான இருப்பிடம்” என்பதை ஆன் செய்யலாம்.

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > இருப்பிடச் சேவைகள் > வானிலை என்பதற்குச் செல்லவும்.

  2. “துல்லியமான இருப்பிடம்” என்பதை ஆன் செய்யவும்.

உள்ளூர் முன்னறிவிப்பு மற்றும் காலநிலையை அறிந்துகொள்ளுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வானிலை செயலிக்குச் செல்லவும்.

    உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கான விவரங்கள் காட்டப்படும். வானிலை ஐகான்களை அறிந்துகொள்ளுதல் என்பதைப் பார்க்கவும்.

    நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் இடத்திற்கான விவரங்கள் காட்டப்படவில்லை என்றால், “இருப்பிடப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டி, “எனது இருப்பிடம்” என்பதையோ வேறொரு இடத்தையோ தட்டவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • ஒரு மணிநேரத்திற்கான முன்னறிவிப்பில் வெவ்வேறு நேரங்களைப் பார்த்தல்: மணிநேர டிஸ்ப்ளேவை இடது அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.

      குறிப்பு: அந்த இடத்திற்கான காற்றின் தர அளவீடு குறிப்பிட்ட அளவை எட்டும்போது காற்றின் தர நிலை ஒவ்வொரு மணிநேர முன்னறிவிப்புக்கும் மேலே தோன்றும். சில இடங்களில், காற்றின் தர அளவீடு எப்போதும் மணிநேர முன்னறிவிப்புக்கு மேலே தோன்றும்.

    • பொழிவு, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைப் பார்த்தல்: “ஒரு மணிநேரத்திற்கான முன்னறிவிப்பு” அம்சத்தைத் தட்டி, காட்டப்படும் வானிலை நிலவரத்தை மாற்ற “நிலவர வரைபடம்” பட்டன்-ஐத் தட்டவும்.

      உதவிக்குறிப்பு: அடுத்தடுத்த நாட்களுக்கும் அதே தகவலைப் பார்க்க இடதுபக்கம் ஸ்வைப் செய்யவும்.

    • கூடுதல் வானிலை விவரங்களைப் பார்த்தல்: ஒவ்வொரு இடத்திற்குமான “வானிலை” பக்கத்தில் தீவிர வானிலை அபாயங்கள் ஏற்படும்போதான எச்சரிக்கைகள், வானிலைச் செய்திகள், காற்றின் தரம், UV இண்டெக்ஸ், காற்று, தெரிவுநிலை, நிலவின் நிலைகள் (வளர்பிறை-தேய்பிறை போன்றவை) மற்றும் பலவற்றின் விரிவான தகவல்கள் காட்டப்படும்.

      பொழிவுகள் அல்லது குறிப்பிட்ட தீவிர வானிலை அபாயங்கள் பற்றிய அறிவிப்புகளைப் பெற, வானிலை அறிவிப்புகளை நிர்வகித்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

      உதவிக்குறிப்பு: முன்பு பதிவுசெய்த வெப்பநிலை அல்லது பொழிவு அளவீடுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது இன்றைய நிலவரம் எப்படி உள்ளது என்பது பற்றிய கூடுதல் தகவல்களைப் பார்க்க “சராசரி வானிலை விவரம்” என்பதைத் தட்டவும்.

      வானிலை செயலியில், மேல்பகுயியில் தற்போதைய இடமும், கீழ்ப்பகுதியில் தற்போதைய வெப்பநிலையியும் வானிலை நிலவரங்களும் காட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள திரையில் UV இண்டெக்ஸ், காற்று, பொழிவு போன்ற வானிலை நிலவரங்கள் காட்டப்பட்டுள்ளன.

வானிலை யூனிட்டுகளைப் பிரத்தியேகமாக்குதல்

வானிலைத் தரவுகளில் பயன்படுத்தப்படும் யூனிட்களை நீங்கள் மாற்றலாம். இதில் வெப்பநிலைக்கான ஃபாரன்ஹீட் அல்லது செல்சியஸ், ஒரு மணிநேரத்திற்கான மைல்கள், ஒரு மணிநேரத்திற்கு கிலோமீட்டர்கள், காற்றுக்கான நாட்ஸ் அல்லது பியூஃபோர்ட் ஆகியவை அடங்கும்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வானிலை செயலிக்குச் செல்லவும்.

  2. “இருப்பிடப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “யூனிட்கள்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வெப்பநிலை அலகுகளை மாற்ற: ஃபாரன்ஹீட், செல்சியஸ் அல்லது “சிஸ்டம் அமைப்பைப் பயன்படுத்து” என்பதைத் தட்டவும்.

    • காற்று, மழைப்பொழிவு, அழுத்தம் அல்லது தொலைவுக்கான யூனிட்களை மாற்ற: நடப்பு அளவீட்டு யூனிட்டுக்கு அருகில் உள்ள ஆக்‌ஷன் பட்டன் மெனு-ஐத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

வானிலை குறித்து புகார் அனுப்புதல்

வானிலை செயலியில் காட்டப்பட்டுள்ளவற்றுடன் உங்கள் இருப்பிடத்தின் வானிலை பொருந்தவில்லை எனில் நீங்கள் அதைப் புகாரளிக்கலாம்.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வானிலை செயலிக்குச் செல்லவும்.

  2. “இருப்பிடப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “சிக்கலைப் புகாரளிக்கவும்” என்பதைத் தட்டவும்.

  3. உங்கள் இருப்பிடத்தில் உள்ள வானிலை குறித்து சிறப்பாக விவரிக்கும் விருப்பங்களைத் தட்டி, “சமர்ப்பி” என்பதைத் தட்டவும்.

Apple உடன் நீங்கள் பகிரும் தகவல்கள் உங்கள் Apple கணக்குடன் தொடர்புபடுத்தப்படவில்லை.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.