iPhoneஇல் உள்ள நினைவூட்டல்கள் செயலியில் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Apple Intelligence* மூலம், பிற செயலிகளில் உள்ள உரைகளில் இருந்து பரிந்துரைக்கப்படும் நினைவூட்டல்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, Safariஇல் ஆன்லைன் ரெசிபியில் இருந்து மளிகைப் பொருட்கள் அல்லது Mailஇல் உள்ள மின்னஞ்சலில் இருந்து நீங்கள் செய்யவேண்டியவை போன்ற பரிந்துரைகள். தொடர்புடைய நினைவூட்டல்களை “நினைவூட்டல்கள்” செயலி ஒரு பட்டியலுக்குள் தனித்தனிப் பிரிவுகளில் தானாகவே வகைப்படுத்தும்.

“நினைவூட்டல்கள்” செயலியில் உள்ள ஒரு பட்டியலில், நினைவூட்டல்கள் தானாகவே பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுக் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பு: சில iPhone மாடல்களிலும், குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களிலும் Apple Intelligence அம்சம் கிடைப்பதில்லை. கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக, நீங்கள் iOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்து கொள்ளவும்.

பரிந்துரைக்கப்படும் நினைவூட்டல்களைப் பெறுதல்

  1. பட்டியலில் நீங்கள் சேர்க்க விரும்பும் தகவலைத் திறக்கவும் (எ.கா. Safariஇல் ஒரு ரெசிபி அல்லது குறிப்புகள் செயலியில் மீட்டிங் குறிப்புகள்).

  2. “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “நினைவூட்டல்கள்” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: Apple Intelligence மதிப்பாய்வு செய்ய வேண்டிய குறிப்பிட்ட உரை அல்லது புல்லட்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். உரையைத் தேர்ந்தெடுத்து, “பகிர்” என்பதைத் தட்டி, “நினைவூட்டல்கள்” என்பதைத் தட்டவும்.

    பரிந்துரைக்கப்படும் நினைவூட்டல்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த உரைக்குக் கீழே காட்டப்படலாம்.

  3. நினைவூட்டல்கள் சேர்க்கப்படும் பட்டியலை மாற்ற, திரையின் மேலே உள்ள பாப்-அப் மெனுவைத் தட்டி, ஒரு பட்டியலைத் தேர்வுசெய்யவும்.

  4. பரிந்துரைக்கு அடுத்துள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி அதை உங்கள் பட்டியலில் சேர்க்கவும் அல்லது அனைத்துப் பரிந்துரைகளையும் சேர்க்க “அனைத்தையும் உள்ளடக்கு” என்பதைத் தட்டவும்.

  5. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

    நீங்கள் தேர்வுசெய்த பட்டியலில் உங்கள் நினைவூட்டல்கள் சேர்க்கப்படும்.

தானாக வகைப்படுத்துவதை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

“தானாக வகைப்படுத்து” அம்சத்தின் மூலம், தொடர்புடைய நினைவூட்டல்களை ஒரு பட்டியலுக்குள் தனித்தனிப் பிரிவுகளில் Apple Intelligence தானாகவே வகைப்படுத்தும்.

  1. iPhoneஇல் நினைவூட்டல்கள் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரு பட்டியலைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • தானாக வகைப்படுத்துவதை ஆன் செய்ய: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “தானாக வகைப்படுத்து” என்பதைத் தட்டவும்.

    • தானாக வகைப்படுத்துவதை ஆஃப் செய்ய: “தானாக வகைப்படுத்து” பட்டன்-ஐத் தட்டி, “ஆஃப் செய்” என்பதைத் தட்டி, பிரிவுகளை வைத்துக்கொள்ள வேண்டுமா அல்லது அகற்ற வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

      குறிப்பு: பிரிவுகளை அகற்றுவதால் நினைவூட்டல்கள் எதுவும் நீக்கப்படாது.

பிரிவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ள விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், “தானாக வகைப்படுத்து” என்பதை ஆஃப் செய்து பிரிவுகளை அகற்றிவிட்டு, அதை மீண்டும் ஆன் செய்யவும். இது உங்கள் பிரிவின் தலைப்புகளையும் ஒரு பட்டியலுக்குள் உள்ள ஒழுங்கமைப்பையும் மீட்டமைக்கும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.