இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் மெசேஜ் அறிவிப்புகளை நிறுத்துதல், ஒலிமுடக்குதல் மற்றும் மாற்றுதல்

நீங்கள் பெறும் மெசேஜ்களைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா என்பதையும், அறிவிப்புகள் எப்படிக் காட்டப்பட வேண்டும் அல்லது ஒலிக்க வேண்டும் என்பதையும் நீங்கள் மாற்றலாம். உதாரணமாக, ஒரு சந்திப்பிலோ பிற அமைதியான இடங்களிலோ இருக்கும்போது அறிவிப்பு ஒலிகளால் உங்களுக்குக் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க, மெசேஜ் அறிவிப்புகளை நீங்கள் ஆஃப் செய்யலாம். சில தொடர்புகளுக்கென்று பிரத்தியேக ஒலியை அமைக்கலாம். எனவே அவர்களிடமிருந்து மெசேஜ் வரும்போது யார் அனுப்பியுள்ளார் என்பதை உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

அமைப்புகளில் மெசேஜஸ் அறிவிப்புக்கான அமைப்புகள் காட்டப்பட்டுள்ளன.

அறிவிப்புகள் அனைத்தையும் நிறுத்துதல்

தொடர்ந்து மெசேஜ்களைப் பெறும்போது மெசேஜஸ் செயலியில் செயல்பாடு குறித்து அறிவிக்கப்படுவதை நிறுத்தலாம். நீங்கள் அவற்றைப் படிக்கத் தயாராக இருக்கும்பட்சத்தில், அறிவிப்புகள் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது நீங்கள் தவறவிட்ட மெசேஜ்களைப் பார்க்க மெசேஜஸ் செயலியைத் திறந்து, நீங்கள் தவறவிட்ட மெசேஜ்களை அதில் கண்டறியலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. “அறிவிப்புகளை அனுமதி” என்பதை ஆஃப் செய்யவும்.

குறிப்பு: அறிவிப்புகளை அமைதிப்படுத்தி உள்ளீர்கள் என்று தெரிவிக்கும் ஒரு குறிப்பை அனுப்புநர்கள் பெறுவர்.

பிறர் அனுப்பும் மெசேஜ்களைப் படித்துள்ளீர்கள் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த, படித்ததற்கான உறுதிப்படுத்தல் அம்சத்தை ஆன் செய்யலாம்.

நீங்கள் மீண்டும் அறிவிப்புகளைப் பெற விரும்பினால், “அறிவிப்புகளை அனுமதி” என்பதை ஆன் செய்யவும். நீங்கள் அவற்றிற்கான ஒலியைக் கேட்க விரும்பினால், ரிங்/சைலன்ட் ஸ்விட்ச் அமைதிப் பயன்முறையில் இல்லை என்பதையும், உங்கள் ஒலியளவு கேட்கக்கூடிய அளவில் இருப்பதை உறுதிசெய்யவும்.

பிற Apple செயலிகளிலிருந்தும் மூன்றாம் தரப்பு செயலிகளிலிருந்தும் அறிவிப்புகளை நிறுத்தலாம். அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

ஒருவருடன் உங்கள் ஃபோகஸ் நிலையைப் பகிர்வதை நிறுத்துதல்

உங்கள் ஃபோகஸ் அல்லது உறக்க அட்டவணை அறிவிப்புகளை இடைநிறுத்தும்போது, நீங்கள் மெசேஜ்களைப் பெறவில்லை என்பதைப் பிறருக்குத் தெரிவிக்க மெசேஜஸ் செயலியில் உங்கள் நிலை காட்டப்படும். தனிநபருடனான உரையாடல்களில் நீங்கள் இதை ஆஃப் செய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடலைத் தட்டி, உரையாடலின் மேல்பகுதியில் உள்ள தொடர்பின் ஐகானைத் தட்டவும்.

  3. “ஃபோகஸ் நிலையைப் பகிர்” என்பதை ஆஃப் செய்தல்.

அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் மெசேஜ்களுக்கான ஒலிகள் அல்லது அதிர்வுகளை ஒலிமுடக்குதல்

நீங்கள் மெசேஜை அனுப்பும்போது இயல்புநிலையாக ஸ்வூஷ் ஒலி பிளே ஆகும். மெசேஜைப் பெறும்போது ஒரு டோன் பிளே ஆகும். இந்த ஒலிகளைக் கேட்க விரும்பவில்லை என்றால், உங்கள் மெசேஜ் டோனை “எதுவுமில்லை” என்று அமைக்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டி, “மெசேஜஸ்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • ஒலிகளை முடக்குதல்: ஒலிகள் என்பதைத் தட்டி, “எதுவுமில்லை” என்பதைத் தட்டவும்.

    • அதிர்வுகளை ஆஃப் செய்தல்: ஒலிகள் என்பதைத் தட்டி, ஹேப்டிக்ஸ் என்பதைத் தட்டி (மேல் பகுதிக்கு அருகில் இருக்கும்), “எதுவுமில்லை” என்பதைத் தட்டவும்.

ரிங்/சைலன்ட் ஸ்விட்ச்சை நீங்கள் அமைதிப் பயன்முறையிலும் வைக்கலாம்.

குறிப்பு: “எதுவுமில்லை” மற்றும் “ரிங்/சைலன்ட்” ஸ்விட்ச் அமைப்பு நீங்கள் பெறும் அழைப்பு, செய்யும் அழைப்பு மற்றும் மெசேஜ் ஒலிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். (ஒன்றை மட்டும் ஒலிமுடக்க முடியாது.)

அறிவிப்புகளுக்கான இண்டிகேட்டர் லைட்டை ஃபிளாஷ் செய்தல் என்ற பக்கத்தையும் பார்க்கவும்.

அறிவிப்புகளுக்கான ஒலி மற்றும் அதிர்வை மாற்றுதல்

விழிப்பூட்டல்களுக்கான ஒலியளவை அமைக்கலாம், விழிப்பூட்டல்களுக்காக டோன் அல்லது ஒலியைத் தேர்வுசெய்யலாம் அல்லது அறிவிப்பு அதிர்வு பேட்டர்னை மாற்றலாம் (ஃபோன் அமைதியாக்கப்பட்டிருக்கும் போது).

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஒலிகள் & ஹேப்டிக்ஸ்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • அறிவிப்புகளுக்கான ஒலியளவைக் குறைத்தல் அல்லது அதிகரித்தல்: ஸ்லைடர் மூலம் ஒலியளவை மாற்றலாம்.

    • டோன் அல்லது ஒலியைத் தேர்வுசெய்தல்: “மெசேஜ் டோன்” என்பதைத் தட்டி, “விழிப்பூட்டல் டோன்கள்” என்பதன் கீழே உள்ள ஒலியைத் தட்டவும் (அல்லது டோனைப் பதிவிறக்க “டோன் ஸ்டோர்” என்பதைத் தட்டவும்).

    • அதிர்வு பேட்டர்னைத் தேர்வுசெய்தல்: “மெசேஜ் டோன்” என்பதைத் தட்டி, “ஹேப்டிக்ஸ்” என்பதைத் தட்டவும், பின்னர் ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் (அல்லது “புதிய அதிர்வை உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

    உதவிக்குறிப்பு: நீங்கள் தேர்வுசெய்யும் டோன் மற்றும் அதிர்வு பேட்டர்ன், மெசேஜஸ் செயலியிலும், அறிவிப்புகளை ஆன் செய்திருக்கும் பிற செயலிகளிலும் (Mail, ஃபோன் மற்றும் Apple அல்லது மூன்றாம் தரப்பின் பிற செயலிகள் போன்றவை) பயன்படுத்தப்படும். மெசேஜஸ் செயலிக்காக மட்டும் அவற்றை மாற்ற, அமைப்புகள்  > அறிவிப்புகள் > மெசேஜஸ் என்பதற்குச் சென்று, “ஒலிகள்” என்பதைத் தட்டவும்.

அமைப்புகள்  > அறிவிப்புகள் > மெசேஜஸ் > அறிவிப்புகளைப் பிரத்தியேகமாக்கு > “மீண்டும் விழிப்பூட்டல்களை வழங்கு” என்பதில் ஓர் அறிவிப்பு எத்தனை முறை உங்களுக்கு மீண்டும் காட்டப்பட வேண்டும் (வேண்டாம் என்பது முதல் 10 என்பது வரை) என்பதை நீங்கள் அமைக்கலாம்.

குறிப்பிட்ட நபர்களுக்கான அறிவிப்பு ஒலியை மாற்றுதல்

ஒரு குறிப்பிட்ட தொடர்பு நபரிடம் இருந்து மெசேஜைப் பெறும்போது, ஒரு குறிப்பிட்ட ஒலி அல்லது அதிர்வு பேட்டர்னை பிளே செய்யத் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. ஒரேயொரு நபருடனான உரையாடலைப் பொறுத்தவரை, உரையாடலின் மேலே உள்ள தொடர்பு ஐகானைத் தட்டவும்.

  3. “தகவல்” என்பதைத் தட்டி, மேல் வலது மூலையில் உள்ள “திருத்து” என்பதைத் தட்டி, “தொடர்புத் தகவலைத் திருத்து” என்பதைத் தட்டி, “மெசேஜ் டோன்” என்பதைத் தட்டவும்.

    “திருத்து” என்பது காட்டப்படவில்லை என்றால், “புதிய தொடர்பை உருவாக்கு” அல்லது “ஏற்கெனவே உள்ள தொடர்பில் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • டோன் அல்லது ஒலியைக் குறிப்பிடுதல்: “விழிப்பூட்டல் டோன்கள்” என்பதன் கீழே உள்ள ஒலியைத் தட்டவும் (அல்லது டோனைப் பதிவிறக்க “டோன் ஸ்டோர்” என்பதைத் தட்டவும்).

    • அதிர்வு பேட்டர்னைக் குறிப்பிடுதல்: ஹேப்டிக்ஸ் என்பதைத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் (அல்லது “புதிய அதிர்வை உருவாக்கு” என்பதைத் தட்டி நீங்களே புதிதாக உருவாக்கலாம்).

    • இந்த உரையாடலுக்கான அறிவிப்புகளை முடக்குதல்: ஹேப்டிக்ஸ், விழிப்பூட்டல் டோன்கள் ஆகிய இரண்டிற்கும் கீழே உள்ள “எதுவுமில்லை” என்பதைத் தட்டவும்.

ஃபோகஸ் பயன்முறையை ஓவர்ரைடு செய்வதற்கான விருப்பத்தை இந்தத் தொடர்பிற்கு வழங்க “எமர்ஜென்சி பைபாஸ்” அம்சத்தை ஆன் செய்யவும், எனவே அவரிடமிருந்து வரும் முக்கியமான மெசேஜ்களை நீங்கள் பெறலாம். உதாரணமாக, குடும்ப உறுப்பினர், பராமரிப்பாளர், சக ஊழியர் ஆகியோருக்காக நீங்கள் அதை ஆன் செய்யலாம்.

ஓர் உரையாடலின் அறிவிப்புகளை முடக்குதல்

ஓர் உரையாடலுக்கான அறிவிப்புகளைப் பெறுவதை நீங்கள் நிறுத்தலாம். இருந்தாலும் மெசேஜ்களை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள மெசேஜஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. உரையாடல் பட்டியலில், பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • உரையாடல் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, ஒலிமுடக்குவதற்கான பட்டன்-ஐத் தட்டவும்.

    • உரையாடலைத் தட்டி, உரையாடலின் மேலே உள்ள தொடர்பு அல்லது ஐகானைத் தட்டி, “விழிப்பூட்டல்களை மறை” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பு: அறிவிப்புகளை அமைதிப்படுத்தி உள்ளீர்கள் என்று தெரிவிக்கும் ஒரு குறிப்பை அனுப்புநர்கள் பெறுவர்.

ஓர் உரையாடலுக்கான மெசேஜ்களைப் பெறுவதை முற்றிலுமாக நிறுத்த, நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரையோ எண்ணையோ தடுக்கலாம் அல்லது குழு உரையாடலை விட்டு வெளியேறலாம்.

மெசேஜ்களை வாசிக்கச் செய்தல்

iPhone ஸ்பீக்கர், ஆதரிக்கப்படும் ஹெட்ஃபோன்கள் மற்றும் CarPlayஐப் பயன்படுத்தும்போது அவற்றில் Siri உங்களுக்கு மெசேஜ்களை வாசித்துக் காட்ட முடியும்.

பெறப்படும் மெசேஜ்களை MFi செவித்திறன் கருவிகளில் கேட்க, குறிப்பிட்ட செயலிகளுக்கான அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.