iPhoneஇல் உள்ள இசை செயலியில் பாடல்களை மாற்றுதல்

பாடல்களைத் தடையின்றி மாற்ற AutoMix அல்லது கிராஸ்ஃபேடு அம்சத்தைப் பயன்படுத்தலாம்.

இசையின் டிரான்சிஷன்களை மாற்றுதல்

  1. iPhoneஇல் உள்ள அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “இசை” என்பதைத் தட்டவும்.

  3. “பாடல் மாறும் விதம்” என்பதைத் தட்டி, ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

AutoMix அறிமுகம்

நீங்கள் iOS 26 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பில் இயங்கும் சாதனத்தைப் பயன்படுத்தி Apple Music கேட்டலாகில் இருந்து இசையைக் கேட்டால், AutoMix அம்சம் ஒரு DJ செய்வதைப் போன்று சீரான வகையில் பாடல்களை டிரான்ஸிஷன் செய்யும்.

இசையைப் பொறுத்து சிறந்த டிரான்சிஷனை AutoMix அம்சம் தானாகவே தேர்ந்தெடுக்கும். உதாரணத்திற்கு, டிராக்கின் தொடக்கம் அல்லது முடிவில் உள்ள நிசப்தத்தை AutoMix அம்சம் அகற்றலாம், அதிக டிரான்ஸிஷன் தேவைப்படாத இடங்களில் எளிய முறையில் கிராஸ்ஃபேடு செய்யலாம்.

குறிப்பு: ஆல்பங்களும் சில வகைப்பிரிவுகளும் டிரான்ஸிஷன்கள் ஏதுமின்றி அப்படியே பிளே செய்யப்படும்.

AutoMix இயல்பாகவே ஆன் செய்யப்பட்டிருக்கும் என்றாலும், வரிசையிலோ அமைப்புகளிலோ அதை நீங்கள் ஆஃப் செய்யலாம்.

கிராஸ்ஃபேடு அம்சத்தை ஆன் செய்தல்

“இசை” செயலியில் முந்தைய பாடலின் இசை மறைந்துபோகும்போது அடுத்த பாடலிற்குச் செல்லும் வகையில் (ஒலியளவு படிப்படியாக அதிகரிக்கும்) நீங்கள் அமைக்கலாம். இது கிராஸ்ஃபேடிங் என்று அழைக்கப்படுகிறது.

  1. iPhoneஇல் உள்ள அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “செயலிகள்” என்பதைத் தட்டி “இசை” என்பதைத் தட்டவும்.

  3. “பாடல் மாறும் விதம்” என்பதைத் தட்டி அதை ஆன் செய்யவும்.

  4. “கிராஸ்ஃபேடு” என்பதைத் தட்டி, ஸ்லைடரை இழுத்து கிராஸ்ஃபேடின் நீளத்தைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.