இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் “இடம் அறி” செயலியில் சாதனத் தரவை அழித்தல்

iPhone, iPad, iPod touch, Apple Watch அல்லது Mac தரவை அழிக்க “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தலாம். ஒரு சாதனத்தின் தரவைத் தொலைவிலிருந்தே அழிக்க வேண்டுமெனில், தொலைந்து போவதற்கு முன்பு அந்தச் சாதனத்தில் எனது [சாதனம்]ஐக் கண்டறி அம்சத்தை (“இடம் அறி” அம்சம்) நீங்கள் ஆன் செய்திருக்க வேண்டும்.

“இடம் அறி” செயலியில் ஒரு சாதனத்தின் தரவை அழிக்கும்போது என்ன நடக்கும்?

  • உங்கள் Apple கணக்கின் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

  • “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தி ஒரு சாதனத்தின் தரவைத் தொலைவிலிருந்தே அழித்தாலும், சாதனத்தின் ஆக்டிவேஷன் லாக் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அதை மீண்டும் ஆக்டிவேட் செய்ய உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டு தேவை.

  • iOS 15, iPadOS 15 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகள் நிறுவப்பட்ட சாதனத்தின் தரவுகளை அழிக்கிறீர்கள் என்றால், அந்தச் சாதனத்தைக் கண்டறிய அல்லது அதில் ஒலியை பிளே செய்ய “இடம் அறி” செயலியை நீங்கள் பயன்படுத்தலாம். பிற பதிப்புகளில், சாதனத்தை உங்களால் கண்டறியவோ அல்லது அதில் ஒலியை பிளே செய்யவோ முடியாது. முன்பு பயன்படுத்திய Wi-Fi நெட்வொர்க்கிற்கு அருகில் இருந்தால், உங்கள் Mac அல்லது Apple Watchஐ நீங்கள் தொடர்ந்து கண்டறியலாம்.

சாதனத் தரவை அழித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சாதனங்கள்” என்பதைத் தட்டி, தரவை அழிக்க விரும்பும் சாதனத்தின் பெயரைத் தட்டவும்.

  3. “இந்தச் சாதனத் தரவுகளை அழி” என்பதைத் தட்டி, “தொடர்க” என்பதைத் தட்டவும்.

    Mac சாதனமாக இருந்தால், அதை லாக் செய்ய பாஸ்கோடை உள்ளிடவும் (அதை அன்லாக் செய்ய பாஸ்கோடைப் பயன்படுத்த வேண்டும்).

  4. சாதனம் தொலைந்துவிட்டால், ஃபோன் எண் அல்லது மெசேஜை உள்ளிடுமாறு உங்களிடம் கேட்கப்படலாம். சாதனம் தொலைந்துவிட்டது என்பதையும், உங்களை எப்படித் தொடர்புகொள்ளலாம் என்பதையும் நீங்கள் அதன் மூலம் தெரிவிக்கலாம். சாதனத்தின் பூட்டுத் திரையில் எண்ணும் மெசேஜும் காட்டப்படும்.

  5. “அழி” என்பதைத் தட்டவும்.

  6. உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டை உள்ளிட்டு, “அழி” என்பதை மீண்டும் தட்டவும்.

உங்கள் சாதனம் ஆஃப்லைனில் இருந்தால், அழித்தல் நிலுவையிலுள்ளது எனக் காட்டப்படும். Wi-Fi அல்லது மொபைல் நெட்வொர்க்குடன் அடுத்த முறை இணைக்கப்படும்போது, தொலைவிலிருந்தே அழித்தல் செயல்முறை தொடங்கும்.

அழித்தலை ரத்துசெய்தல்

ஆஃப்லைனில் இருக்கும் ஒரு சாதனத்தின் தரவை அழிக்கும்படி கோரிக்கை விடுத்து, சாதனம் மீண்டும் ஆன்லைனிற்கு வருவதற்கு முன்பாக நீங்கள் அதைக் கண்டறிந்துவிட்டால், தரவை அழிப்பதற்கான கோரிக்கையை ரத்துசெய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சாதனங்கள்” என்பதைத் தட்டி, தரவை அழிப்பதை ரத்துசெய்ய விரும்பும் சாதனத்தின் பெயரைத் தட்டவும்.

  3. “அழிப்பதை ரத்துசெய்” என்பதைத் தட்டி, உங்கள் Apple கணக்கு பாஸ்வேர்டை உள்ளிடவும்.

உங்கள் iPhone தொலைந்துவிட்டது என்றால், iCloud.com தளத்தில் சாதனங்களைக் கண்டறிதல் என்ற பக்கத்தைப் பயன்படுத்தி நீங்கள் அதன் தரவுகளை அழிக்கலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.