இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone கேமராவைப் பயன்படுத்தி சினிமேட்டிக் பயன்முறையில் வீடியோவைப் பதிவுசெய்தல்

சினிமேட்டிக் பயன்முறை டெப்த் ஆஃப் ஃபீல்டைப் பயன்படுத்துகிறது. இது அழகிய மங்கலான முன்புறத்தையும் பின்னணியையும் உருவாக்கும் போது உங்கள் வீடியோவின் சப்ஜெக்ட் கூர்மையாக இருக்கும். iPhone வீடியோவின் சப்ஜெக்ட்டைத் தானாகவே அடையாளம் கண்டறிந்து பதிவுசெய்வது முழுவதற்கும் அதன் மீது ஃபோகஸை வைக்கும். வேறு ஏதேனும் புதிய சப்ஜெக்ட் அடையாளம் காணப்பட்டால் iPhone தானாகவே ஃபோகஸ் பாயின்ட்டை அதன்மீது மாற்றிக்கொள்ளும். நீங்கள் பதிவுசெய்யும்போது ஃபோகஸ் செய்யப்படும் பகுதியை நேரடியாக மாற்றலாம் அல்லது ஃபோட்டோஸ் செயலியில் பிறகு மாற்றலாம்.

ஆதரிக்கப்படும் மாடல்களில் சினிமேட்டிக் பயன்முறை கிடைக்கிறது.

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள கேமரா செயலியைத் திறக்கவும்.

  2. “சினிமேட்டிக்” பயன்முறையைத் தேர்ந்தெடுக்க, திரையில் இடதுபுறமாக ஸ்வைப் செய்யவும்.

  3. பதிவுசெய்வதற்கு முன், பின்வரும் மாற்றங்களைச் செய்யலாம்:

    • இந்த மதிப்புகளை மாற்ற, “கேமரா கட்டுப்பாடுகள்” பட்டன்-ஐத் தட்டி, “Aperture” அல்லது “எக்ஸ்போஷர்” என்பதைத் தட்டவும்.

    • பெரிதாக்க, 1x-க்கு அடுத்துள்ள 2 அல்லது 3ஐத் தட்டவும் (ஆதரிக்கப்படும் மாடல்களில்).

    • ஆதரிக்கப்படும் மாடல்களில் அமைப்புகளை மாற்ற, திரையின் மூலையில் உள்ள தெளிவுத்திறன் மற்றும் fps மதிப்புகளைத் தட்டவும்.

  4. பதிவுசெய்வதைத் தொடங்க “பதிவுசெய்” பட்டனைத் தட்டவும் அல்லது “ஒலியளவு” பட்டனை அழுத்தவும்.

    • திரையில் உள்ள மஞ்சள் நிற ஃப்ரேம் ஃபோகஸில் உள்ள நபரைக் குறிக்கிறது. ஃபோகஸில் இல்லாத நபர் கண்டறியப்பட்டிருப்பதை சாம்பல் நிற ஃபிரேம் குறிக்கிறது. ஃபோகஸை மாற்ற சாம்பல் நிறப் பெட்டியைத் தட்டவும். ஃபோகஸை அந்த நபருக்கே லாக் செய்ய மீண்டும் தட்டவும்.

    • வீடியோவில் ஒரு நபர் இல்லையென்றால், ஃபோகஸ் செய்ய வேண்டிய பகுதியை அமைக்க திரையில் எதேனும் ஒரு இடத்தில் தட்டவும்.

    • ஒரே தூரத்தில் ஃபோகஸை லாக் செய்ய திரையைத் தொட்டுப் பிடிக்கவும்.

    • iPhone 15 Pro மாடல்கள், iPhone 16 Pro மாடல்கள், iPhone 17 Pro மாடல்கள் ஆகிய சாதனங்களில், பெரிதாக்கிப் பார்க்க 2ஐத் தட்டவும்.

      மேலும் துல்லியமான ஜூம் கட்டுப்பாட்டிற்கு, 1xஐத் தொட்டுப் பிடித்து, டயலை ஸ்லைடு செய்யவும்.

  5. பதிவுசெய்வதை நிறுத்த “பதிவுசெய்” பட்டனைத் தட்டவும் அல்லது “ஒலியளவு” பட்டனை அழுத்தவும்.

உதவிக்குறிப்பு: ஆதரிக்கப்படும் மாடல்களில் டெப்த் ஆஃப் ஃபீல்ட் எஃபெக்ட்டைச் சரிசெய்ய, கேமரா கட்டுப்பாட்டைப் பயன்படுத்தலாம். கேமரா கட்டுப்பாட்டு அமைப்புகளைத் தேர்ந்தெடுத்து சரிசெய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் வீடியோவை சினிமேட்டிக் பயன்முறையில் பதிவுசெய்த பிறகு, சினிமேட்டிக் எஃபெக்ட்டை அகற்றலாம் அல்லது மாற்றலாம். சினிமேட்டிக் பயன்முறை வீடியோக்களைத் திருத்து என்ற இணைப்பைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.