iPhoneஇல் Apple Games செயலியைப் பயன்படுத்தத் தொடங்குதல்

Apple Games செயலி என்பது நீங்கள் ரசித்து விளையாடும் கேம்களுக்கும், அவற்றைச் சேர்ந்து விளையாடக்கூடிய நண்பர்களுக்குமான ஒரு மைய இடமாகும். Apple Games மூலம் உங்கள் கேம் லைப்ரரி, உங்கள் கேம்கள் மற்றும் நண்பர்களின் செயல்பாடுகள், தனிப்பயனாக்கிய பரிந்துரைகள் ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

Game Center மற்றும் App Store இரண்டிலும் ஒரே Apple கணக்கு மூலம் உள்நுழையுங்கள். அதன் பிறகு, Apple Games செயலியைப் பயன்படுத்தி நீங்கள் விளையாடும் கேம்களில் புதிதாக என்னென்ன உள்ளன என்பதைப் பார்க்கலாம், புதிய கேம்களைக் கண்டறியலாம், நண்பர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்கலாம்.

Apple Games செயலியில் உள்ள முகப்புத் தாவலில் தொடர்ந்து விளையாடுவதற்கான கேம்களும் புதிய வெளியீடுகளும் காட்டப்பட்டுள்ளன.

புதிய கேம்களைக் கண்டறிதல்

உங்கள் முன்னுரிமைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பரிந்துரைகளைக் கண்டறியலாம், உங்கள் நண்பர்கள் எந்தெந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். முகப்பைத் தட்டி, மேலும் அறிய கேமைத் தட்டவும், பிறகு பதிவிறக்கவும். ஒருவேளை கேம் ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்தால் உடனே விளையாடத் தொடங்கவும்.

Apple Games செயலியின் “நண்பர்கள்” தாவலில், செயலில் உள்ள கேம் சவால், லீடர்போர்டு, முன்னேற்ற பேட்ஜ்கள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.

நண்பர்களுடன் விளையாடுதல்

உலகெங்கிலும் உள்ள நண்பர்கள் அல்லது பிளேயர்களுடன் இணைந்து விளையாடலாம், போட்டியிடலாம். “நண்பர்கள்” என்பதைத் தட்டி, “நண்பர்களுக்குச் சவால்விடுங்கள்” என்பதைத் தட்டவும்.

Apple Games செயலியின் லைப்ரரி தாவலில் Apple Arcade, கேம் நிகழ்வுகள், சாதனைகள் ஆகியவற்றிற்கான பிரிவுகளும், சமீபத்தில் விளையாடிய மற்றும் பதிவிறக்கிய கேம்களின் ஸ்க்ரால் செய்யக்கூடிய பட்டியலும் காட்டப்பட்டுள்ளன.

உங்கள் லைப்ரரியை நிர்வகித்தல்

நீங்கள் பதிவிறக்கிய கேம்களை அணுகவும், சாதனைகளைக் கண்காணிக்கவும், உங்கள் சேகரிப்புகளை ஃபில்டர் செய்யவும் “லைப்ரரி” என்பதைத் தட்டவும்.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.