இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் உங்கள் தற்காலிக சேமிப்பு மற்றும் குக்கீகளை அழித்தல்

உங்கள் iPhone சாதனத்தில் உள்ள தற்காலிக சேமிப்பை அழிக்க, இதுவரை நீங்கள் உலாவியவற்றையும் தரவையும் அழிக்கலாம். இந்தச் செயல் உங்கள் iPhone சாதனத்தில் நீங்கள் இதுவரை பார்வையிட்ட இணையதளங்களின் தரவையும் சமீபத்திய தேடல்களையும் நீக்குகிறது. உங்கள் இருப்பிடத்தைப் பயன்படுத்த அல்லது உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்புவதற்காக இணையதளங்களுக்கு நீங்கள் வழங்கிய அனுமதிகளையும் குக்கீகளையும் இந்தச் செயல்முறை நீக்குகிறது.

குறிப்பு: Safariஇல் உள்ள உங்களின் இதுவரையான உலாவல் பதிவுகளை அழிப்பதன் மூலம் நீங்கள் பார்வையிட்ட இணையதளங்கள் அல்லது பிற செயலிகளில் உள்ள உங்களின் இதுவரையான பதிவுகள் மூலம் சுயாதீனமாக வைக்கப்பட்டுள்ள இதுவரையான எந்தவொரு உலாவல் பதிவையும் அழிக்க முடியாது.

இதுவரையான பதிவுகளை அழிப்பதற்கான மெனு. “இதுவரையான பதிவுகளை அழிப்பதற்கான கால அளவு” என்பதற்குக் கீழே, கடைசி மணிநேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அனைத்து சுயவிவரங்களும் “சுயவிவரத்திற்கான வரலாற்றை அழி” என்பதற்குக் கீழே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரையான பதிவுகளை அழிப்பதற்கான பட்டன் திரையின் கீழ்ப்பகுதியில் உள்ளது.
  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள Safari செயலிக்குச் செல்லவும்.

  2. “மேலும்” பட்டன்-ஐத் தட்டிய பிறகு "புக்மார்க்குகள்" என்பதைத் தட்டவும்.

    “தாவல்கள்” லே-அவுட் “கீழே” அல்லது “மேலே” என அமைக்கப்பட்டிருந்தால், “புக்மார்க்குகளைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டவும். Safari லே-அவுட்டை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

  3. "இதுவரையான பதிவுகள்" பட்டன்-ஐத் தட்டவும்.

  4. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அழி” என்பதைத் தட்டவும்.

  5. “இதுவரையான பதிவுகளை அழிப்பதற்கான கால அளவு” என்பதற்குக் கீழே, இதுவரை நீங்கள் உலாவியவற்றில் எவ்வளவு பகுதியை அழிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    குறிப்பு: நீங்கள் Safari சுயவிவரங்களை அமைத்திருந்தால், அந்தச் சுயவிவரத்தில் உள்ள இதுவரையான பதிவுகளை மட்டும் அழிக்க ஒரு சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது “அனைத்துச் சுயவிவரங்கள்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. “இதுவரையான பதிவுகளை அழி” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.