இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone டிஸ்ப்ளேவை நீண்டநேரம் ஆனில் வைத்திருத்தல்

உங்கள் iPhone டிஸ்ப்ளேவை நீங்கள் பார்க்கும்போது அது ஆனிலேயே இருக்கும், ஆனால் நீங்கள் அதைப் பார்க்காத போது அது மங்கலாகி லாக் செய்யப்படும் (உங்கள் பாதுகாப்பிற்காக). டிஸ்ப்ளே நீண்ட நேரத்திற்கு ஆனில் இருக்க வேண்டுமெனில் (எடுத்துக்காட்டாக, மேப்ஸில் வழிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது), iPhone திரை எவ்வளவு நேரத்திற்குப் பிறகு மங்கலாக்கப்பட அல்லது லாக் செய்யப்பட வேண்டும் என்பதை நீங்கள் மாற்றலாம்.

iPhone எப்போது தானாக லாக் செய்யப்பட வேண்டும் என்பதை மாற்றுதல்

தானாகவே லாக் செய்ய iPhone எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அமைக்கலாம்.

அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு > தானாகப் பூட்டுதல் என்பதற்குச் சென்று நேர அளவைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: தானாகப் பூட்டுதல் அம்சத்தைத் தாமதப்படுத்தினாலோ தடுத்தாலோ ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கக்கூடும்.

“டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” அமைப்பின் மூலம் உங்கள் பூட்டுத் திரையை ஆனில் வைத்தல்

ஆதரிக்கப்படும் மாடல்களில், உங்கள் iPhone லாக் செய்யப்பட்டிருந்தாலும் உங்கள் பூட்டுத் திரை தெரியும் வகையில் அதை மங்கலாகக் காட்சிப்படுத்துவதற்கு “டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” அமைப்பு அனுமதிக்கிறது. மங்கலான திரையைப் பார்ப்பதன் மூலம், அறிவிப்புகள், தேதி மற்றும் நேரம் போன்ற அத்தியாவசியத் தகவல்களையும், உங்கள் விட்ஜெட்களில் உள்ள தகவல்களையும் நீங்கள் பார்க்கலாம்.

iPhone தலைகீழாகவோ அதன் திரை மறைக்கப்படும் வகையிலோ இருந்தால், இணைக்கப்பட்டிருக்கும் Apple Watchக்கு அருகில் இல்லையென்றால், CarPlay அமர்வு தொடங்கப்பட்டால், கன்டினியுட்டி கேமரா பயன்பாட்டில் இருந்தால், குறைந்த ஆற்றல் பயன்முறை ஆனில் இருந்தால், ஸ்லீப் ஃபோகஸ் ஆனில் இருந்தால் அல்லது உங்களின் வழக்கமான உறக்கநேரத்தில் டிஸ்ப்ளே தானாகவே ஆஃப் செய்யப்படும்.

இயல்பாகவே “டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” அமைப்பு ஆனில் இருக்கும். அதை ஆஃப் செய்ய, அமைப்புகள்  > டிஸ்ப்ளே & ஒளிர்வு என்பதற்குச் சென்று, “டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” என்பதை ஆஃப் செய்யவும்.

உதவிக்குறிப்பு: “டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” அம்சம் ஆன் செய்யப்படும்போது, உங்கள் பூட்டுத் திரையில் உங்கள் வால்பேப்பர் அல்லது அறிவிப்புகள் காட்டப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். அமைப்புகள் > டிஸ்ப்ளே & ஒளிர்வு > “டிஸ்ப்ளேவை எப்போதும் ஆனில் வை” என்பதற்குச் சென்று, “வால்பேப்பரைக் காட்டு” அல்லது “அறிவிப்புகளைக் காட்டு” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.