இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் வானிலை அறிவிப்புகளை நிர்வகித்தல்

உங்கள் தற்போதைய இருப்பிடத்தில் மழைப்பொழிவு அல்லது சில தீவிர வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்படும்போது, அவை குறித்த அறிவிப்புகளைப் பெறலாம். உங்கள் பட்டியலில் நீங்கள் சேமித்துள்ள இருப்பிடங்களுக்கான அறிவிப்புகளையும் பெறலாம்.

குறிப்பு: வானிலை அறிவிப்புகள் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை.

துல்லியமான இருப்பிடத்தை ஆன் செய்தல்

“துல்லியமான இருப்பிடம்” என்பதை ஆன் செய்யும்போது, உங்கள் தற்போதைய இருப்பிடத்திற்கான இன்னும் துல்லியமான அறிவிப்புகளைப் பெறுவீர்கள்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “தனியுரிமை & பாதுகாப்பு” என்பதைத் தட்டி, “இருப்பிடச் சேவைகள்” என்பதைத் தட்டவும்.

  3. “வானிலை” என்பதைத் தட்டி “எப்போதும்” என்பதைத் தட்டவும்.

  4. “துல்லியமான இருப்பிடம்” என்பதை ஆன் செய்யவும்.

வானிலை அறிவிப்புகளைப் பெறுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள வானிலை செயலிக்குச் செல்லவும்.

  2. பட்டியல் காட்டப்பட, “இருப்பிடப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

    கேட்கப்பட்டால், வானிலை செயலியில் இருந்து அறிவிப்புகளை அனுமதிக்கவும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் தற்போதைய இருப்பிடத்தின் வானிலை குறித்த அறிவிப்பைப் பெறுதல்: “தற்போதைய இருப்பிடம்” என்பதற்குக் கீழே தீவிர வானிலை, அடுத்த ஒரு மணிநேரத்திற்கான பொழிவு ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை ஆன் செய்யவும்.

    • பிற இடங்களின் வானிலை குறித்த அறிவிப்பைப் பெறுதல்: “உங்களது இருப்பிடங்கள்” என்பதற்குக் கீழே ஓர் இருப்பிடத்தைத் தட்டி தீவிர வானிலை, அடுத்த ஒரு மணிநேரத்திற்கான பொழிவு ஆகியவற்றிற்கான அறிவிப்புகளை ஆன் செய்யவும்.

  5. “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

பரிந்துரைக்கப்படும் இருப்பிடத்திற்கான வானிலை அறிவிப்புகளைப் பெறுதல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “தனியுரிமை & பாதுகாப்பு” என்பதைத் தட்டி, “இருப்பிடச் சேவைகள்” என்பதைத் தட்டி, “சிஸ்டம் சேவைகள்” என்பதைத் தட்டவும்.

  3. “முக்கியமான இடங்கள் & வழிகள்” என்பதைத் தட்டி, “முக்கியமான இடங்கள் & வழிகள்” என்பதை ஆன் செய்யவும்.

  4. அமைப்புகளுக்குச் செல்ல “பின்செல்” பட்டன்-ஐ நான்கு முறை தட்டவும்.

  5. செயலிகள் என்பதைத் தட்டி, “வானிலை” என்பதைத் தட்டவும்.

  6. “இருப்பிடம்” என்பதைத் தட்டி, “எப்போதும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. “பின்செல்” பட்டன்-ஐத் தட்டி, “பரிந்துரைக்கப்பட்ட இருப்பிடங்கள்” என்பதை ஆன் செய்யவும் (இருப்பிடங்கள் என்பதற்குக் கீழே இருக்கும்).

  8. வானிலை செயலிக்குச் செல்லவும்.

  9. “இருப்பிடப் பட்டியல்” பட்டன்-ஐத் தட்டி, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  10. பரிந்துரைக்கப்பட்ட இடங்கள் என்பதற்குக் கீழே, தீவிர வானிலைக்கான அறிவிப்புகளை ஆன் செய்யவும்.

“ஸ்மார்ட் சுழற்றல்” மற்றும் “விட்ஜெட் பரிந்துரைகள்” அம்சங்கள் ஆன் செய்யப்பட்டிருந்து உங்களிடம் விட்ஜெட் ஸ்டேக் இருந்தால், வானிலை விட்ஜெட்கள் உங்களுக்கு முக்கியமான இடங்கள் மற்றும் நீங்கள் அடிக்கடி செல்லும் வழிகளில் உள்ள நிலவரங்களைக் காட்டலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.