இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள News செயலியில் குவார்டைல்ஸ் புதிர்களுக்குத் தீர்வுகாணுதல்

Apple News+ சந்தாதாரர்களுக்கு தினமும் ஒரு புதிய குவார்டைல்ஸ் புதிருக்கான அணுகல் கிடைக்கும். சொற்களை உருவாக்க, நான்கு வரிசை-ஐந்து நெடுவரிசையைக் கொண்ட கிரிட்களில் இருந்து இரண்டு முதல் நான்கு எழுத்துகளைக் கொண்ட டைல்களை விளையாடுபவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வார்த்தைக்கு நான்கு டைல்கள் வரை பயன்படுத்தலாம், மேலும் அதிக டைல்களைப் பயன்படுத்தும்போது அதிக புள்ளிகளைப் பெறலாம்.

நான்கு டைல்களால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை குவார்டைல் என்று அழைக்கப்படுகிறது, அதன் மதிப்பு 8 புள்ளிகள். ஐந்து குவார்டைல்களையும் நீங்கள் கண்டறிந்தால், கூடுதலாக 40 புள்ளிகளைப் பெறுவீர்கள்.

“நிபுணர்” நிலையை அடையத் தேவையான 100 புள்ளிகளைப் பெறுவதே இந்த கேமின் நோக்கம். “நிபுணர்” நிலையை அடைந்த பிறகும்கூட சொற்களை உருவாக்குவதையும் புள்ளிகளைச் சேகரிப்பதையும் நீங்கள் தொடரலாம்.

குறிப்பு: Apple News, Apple News+ மற்றும் புதிர்கள் அனைத்து நாடுகள் அல்லது வட்டாரங்களில் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும் தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

விளையாடுபவரின் ஸ்கோர், தரவரிசை, அடுத்த நிலைக்கு முன்னேறுதல் ஆகியவற்றைக் காட்டும் குவார்டைல்கள் புதிர். குவார்டைல்கள் கிரிட்டில் உள்ள டைல்களில் காணப்படும் வார்த்தைகள் பட்டியலில் காட்டப்பட்டுள்ளன.

குவார்டைல்ஸ் விளையாடுதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. குவார்டைல்ஸ் புதிரைத் திறக்கவும்.

  3. ஒரு வார்த்தையை உருவாக்க டைல்களைத் தட்டி, அதை உள்ளிட “உள்ளிடுக” பட்டன்-ஐத் தட்டவும்.

    உதாரணமாக, ஒரு புள்ளியைப் பெற, “pear” என்பதைத் தட்டி, “உள்ளிடுக” பட்டன்-ஐத் தட்டவும். 2 புள்ளிகளைப் பெற “ap” என்பதைத் தட்டி, “pear” என்பதைத் தட்டி “appear” என்ற வார்த்தையை உருவாக்கவும். 4 புள்ளிகளைப் பெற “ap,” “pear,” என்பவற்றுக்கு அடுத்து “ance” என்பதைத் தட்டவும். “disappearance” என்பதைக் கண்டறிந்து குவார்டைல்ஸை நிறைவுசெய்து 8 புள்ளிகளைப் பெறுங்கள்.

    “கண்டறியப்பட்ட சொற்கள்” பெட்டியில் முழுமையடைந்த சொற்கள் காட்டப்படும். நீங்கள் கண்டறியும் குவார்டைல்ஸ் நான்கு டைல்களைக் கொண்ட குழுக்களாக காட்டப்படும்.

    குவார்டைல்ஸ் புதிர்களில் அனைத்துச் சாத்தியமான சொற்களும் தகுதிபெறுவதில்லை. உதாரணமாக, தெளிவற்ற சொற்கள், தொழில்நுட்பச் சொற்கள், சிறப்புப் பெயர்ச்சொற்கள் மற்றும் அவதூறுச் சொற்கள் ஆகியவை சொற்களின் பட்டியலில் ஒருபோதும் காட்டப்படாது.

  4. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • உங்கள் டைல்களை மறுவரிசைப்படுத்த: மறுவரிசைப்படுத்த, டைல்களைத் தட்டிய பிறகு அவற்றை கிரிட்டுக்கு மேலே வைத்து, தொட்டு பிடித்து இழுக்கவும்.

    • அடுத்த நிலைக்கு நகர, எடுக்க வேண்டிய புள்ளிகளைப் பார்க்க: “அடுத்த நிலை” என்பதைத் தட்டவும்.

    • நீங்கள் பயன்படுத்த விரும்பாத டைல்களை அழிக்க: “அகற்று” பட்டன் என்பதைத் தட்டவும்.

    • எத்தனை சொற்கள் மீதமுள்ளன என்பதைப் பார்க்க: “நிபுணர்” நிலையை அடையும்போது, எத்தனைச் சொற்கள் கண்டறியப்படவில்லை என்பதை “கண்டறியப்பட்ட சொற்கள்” பெட்டி காட்டும்.

    • ஒவ்வொரு வார்த்தையின் புள்ளிகளைப் பார்க்க: “கண்டறியப்பட்ட சொற்கள்” பெட்டியில் உள்ள “விரிவாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

உதவிக்குறிப்பு: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, குவார்டைல்கள் டுடோரியலைப் பார்க்க, “எப்படி விளையாடுவது” என்பதைத் தட்டவும் அல்லது குவார்டைல்கள் புதிர் ஃபீடைத் திறக்க, “மேலும் புதிர்கள்” என்பதைத் தட்டவும்.

டைல்களை கலைத்துப் போடுதல் அல்லது குழுவாக்குதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. குவார்டைல்ஸ் புதிரைத் திறந்து, சொற்களைக் கண்டறியத் தொடங்கவும்.

  3. நீங்கள் கண்டறிந்த குவார்டைல்ஸ் கிரிட்டின் கீழ்ப்பகுதியில் ஆங்கர் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் அவற்றை கிரிட்டின் மேல்பகுதியில் ஆங்கர் செய்ய விரும்பினால், “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “கண்டறியப்பட்ட குவார்டைல்களை வரிசைப்படுத்து” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. கண்டறியப்பட்ட குவார்டைல்களில் இல்லாத டைல்களைக் கலைத்துப் போட “கலைத்து இயக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

  5. கிரிட்டில் உள்ள அனைத்து டைல்களையும் கலைத்துப் பார்ப்பதற்கு ஆங்கரிங்கை ஆஃப் செய்ய “வரிசை” பட்டன்-ஐத் தட்டி, “கலைத்து இயக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

அனைத்து சொற்களையும் வெளிப்படுத்துதல்

  1. உங்கள் iPhone சாதனத்தில் உள்ள News செயலிக்குச் செல்லவும்.

  2. குவார்டைல்ஸ் புதிரைத் திறக்கவும்.

  3. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “அனைத்துச் சொற்களையும் வெளிப்படுத்துதல்” என்பதைத் தட்டவும். நீங்கள் கண்டுபிடிக்காத சொற்கள் காட்டப்படும்.

    • “நிபுணர்” நிலையை அடைவதற்கு முன் அவற்றை வெளிப்படுத்தினால்: உங்கள் ஸ்கோர்போர்டு புள்ளிவிவரங்கள் மற்றும் ஸ்ட்ரீக்குகளில் புதிர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

    • “நிபுணர்” நிலையை அடைந்த பிறகு அவற்றை வெளிப்படுத்தினால்: உங்கள் புள்ளிவிவரங்கள் அல்லது ஸ்ட்ரீக்குகளில் மாற்றம் ஏற்படுவதில்லை.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.