இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் செவித்திறனுக்கான அணுகல்தன்மை அம்சங்கள்

நீங்கள் சிறப்பாகக் கேட்கவும், ஒலியே கேட்காமல் தொடர்பில் இருக்கவும் உதவும் வகையில் உள்ளமைக்கப்பட்ட கருவிகளுடன் iPhone வடிவமைக்கப்பட்டுள்ளது.

செவித்திறனுக்கான அணுகல்தன்மை அம்சங்களைக் கண்டறிய, அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதற்குச் சென்று “செவித்திறன்”என்ற பிரிவுக்கு ஸ்க்ரால் செய்யவும்.

ஒலிக்கான மாற்றுகளைப் பயன்படுத்துதல்

பேசப்படும் ஆடியோவின் நிகழ்நேர கேப்ஷன்களைப் பெறுதல்

“நேரலை கேப்ஷன்கள்” மூலம், எந்தவொரு செயலியிலிருந்தும், உங்களைச் சுற்றியுள்ள நேரடி உரையாடல்களிலிருந்தும் ஆடியோவின் டிரான்ஸ்கிரிப்ஷனைப் பெறலாம்.

பேசப்படும் ஆடியோவின் நேரலை கேப்ஷன்களைப் பெறுதல்

வசனங்களையும் கேப்ஷன்களையும் பிரத்தியேகமாக்குதல்

வசனங்கள் தோன்றும் விதத்தை மாற்றலாம். இல்லையெனில், அடிப்படை வசனங்களுக்குப் பதிலாக, கிடைக்கும்போது காட்சி விளக்கங்களையும் SDHஐயும் பயன்படுத்தலாம்.

வசனங்களையும் கேப்ஷன்களையும் காட்சிப்படுத்துதல்

யாராவது உங்கள் பெயரைச் சொன்னால் அறிவிப்பைப் பெறுதல்

“பெயர் அறிதல்” அம்சம் மூலம் உங்கள் பெயர் சொல்லப்படுவதை iPhone கவனித்து, அதை அடையாளம் காணும்போது உங்களுக்குத் தெரிவிக்கும்.

உங்கள் பெயரைக் கண்டறிதல்

உங்களைச் சுற்றியுள்ள ஒலிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்

“ஒலியறிதல்” அம்சம் மூலம் காலிங்பெல், சைரன் போன்ற ஒலிகளை iPhone கவனித்து, அவற்றை அடையாளம் காணும்போது உங்களுக்குத் தெரிவிக்கும்.

ஒலிகளை அடையாளம் காணுதல்

இசையை உளமார ரசித்தல்

ஒரு பாடலின் ஆடியோவுடன் ஒத்திசைக்கப்பட்டுள்ள தட்டல்கள், டெக்ஸ்ட்சர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அதிர்வுகளாக இசையை அனுபவிக்க முடியும்.

அதிர்வுகளாகவும் பிற ஹேப்டிக்ஸாகவும் இசையை பிளே செய்தல்

Siriஇல் டைப் செய்தல்

உங்கள் Siri கோரிக்கைகளைக் கூறுவதற்குப் பதிலாக அவற்றை டைப் செய்யலாம்.

Siri அணுகல்தன்மை அமைப்புகளை மாற்றுதல்

நிகழ்நேர உரை (RTT) அழைப்புகளைச் செய்தல்

ஃபோன் அழைப்பில் டைப் செய்தவதன் மூலம் தொடர்புகொள்ளலாம். நீங்கள் பேசிக் கொண்டு இருக்கும் நபரால் நீங்கள் டைப்செய்யும்போதே உங்கள் மெசேஜைப் பார்க்க முடியும்.

RTT மற்றும் TTYஐ அமைத்துப் பயன்படுத்துதல்

அறிவிப்புகளைப் பெறும்போது iPhone லைட் சிமிட்டுதல்

உங்களால் விழிப்பூட்டல்களைக் கேட்க முடியாவிட்டால், பார்க்கும் வகையிலான அறிவிப்புகளைப் பெறலாம்.

அறிவிப்புகளுக்கு iPhone திரை அல்லது இண்டிகேட்டர் லைட்டை ஃபிளாஷ் செய்தல்

ஆடியோ மெசேஜ்கள், HomePod இன்டர்காம் மெசேஜ்கள், பாட்காஸ்ட்கள் ஆகியவற்றின் டிரான்ஸ்கிரிப்ஷன்களையும் நீங்கள் பெறலாம்.

செவித்திறன் உதவிக் கருவிகளைப் பயன்படுத்துதல் மற்றும் ஆடியோவைச் சரிசெய்தல்

செவித்திறன் கருவிகள்

Made for iPhone (MFi) செவித்திறன் உதவிகள் அல்லது சவுண்டு புராசஸர்கள் உள்ள iPhoneஐ இணைத்து அவற்றின் அமைப்புகளை மாற்றலாம்.

செவித்திறன் கருவிகளைப் பயன்படுத்துதல்

நேரலையில் கேட்டல்

iPhone மைக்ரோஃபோனில் இருந்து உங்கள் MFi செவித்திறன் கருவிகள் அல்லது AirPodsக்கு ஒலியை ஸ்ட்ரீம் செய்யலாம்.

“நேரலையில் கேட்டல்” அம்சம் உள்ள தொலைநிலை மைக்ரோஃபோனாக iPhoneஐப் பயன்படுத்துதல்

ஆடியோ சமநிலை

ஸ்டீரியோ ஆடியோ மோனாவாக பிளே செய்யலாம், இடது-வலது ஸ்டீரியோயின் சமநிலையைச் சரிசெய்யலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

ஆடியோ அமைப்புகளைச் சரிசெய்தல்

AirPods

உங்கள் iPhone உடன் இணைக்கப்பட்டுள்ள AirPods மற்றும் பிற Apple ஹெட்ஃபோன்களுக்கான அணுகல்தன்மை விருப்பங்களை அமைக்கலாம்.

AirPodsக்கான அணுகல்தன்மை அமைப்புகளை சரிசெய்தல்

பின்னணி ஒலிகள்

நீங்கள் கவனம் செலுத்த அல்லது ஓய்வெடுக்க உதவும் வகையில், கடல் அலைகள் அல்லது மழை போன்ற சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை iPhoneஇல் பிளே செய்யலாம்.

பின்னணி ஒலிகளை பிளே செய்தல்

உங்கள் MFi செவித்திறன் கருவிகளில் அறிவிப்புகளையும் அழைப்புகளையும் Siri தெரிவிக்கும் வகையிலும் நீங்கள் அமைக்கலாம்.

உதவிக்குறிப்பு: ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அல்லது கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அணுகல்தன்மை அம்சங்களையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்தலாம். அணுகல்தன்மைச் சுருக்கவழி மூலம் அம்சங்களை விரைவாகத் திறத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.