இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள அறிவாற்றல் சார்ந்த அணுகல் அம்சங்கள்

iPhone உங்களின் அல்லது நீங்கள் அக்கறை கொள்ளும் ஒருவரின் அறிவாற்றல் தேவைகளுக்கு ஏற்ப உள்ளமைக்கப்பட்ட விருப்பங்களுடன் வருகிறது.

iPhoneஇல் உள்ள அணுகல் அம்சங்களைக் கண்டறிய, அமைப்புகள் > அணுகல்தன்மை என்பதற்குச் செல்லவும்.

நீங்கள் அக்கறை கொண்டுள்ள ஒருவருக்கு ஏற்ற வகையில் iPhoneஐ அமைத்தல்

iPhoneஐ எளிமையாக வைத்துக்கொள்ளுதல்

நீங்கள் அக்கறை கொண்டுள்ள ஒருவருக்கு அறிவாற்றல் குறைபாடு இருந்தால், எளிமைப்படுத்தப்பட்ட இடைமுகத்துடன் iPhoneஐ அமைக்கலாம். அவர்களுக்குச் சிறந்ததாக இருக்கும் முக்கிய அம்சங்களைத் தேர்வுசெய்து பிரத்தியேகப்படுத்தலாம்.

உதவிகரமான அணுகல் பயனர் வழிகாட்டி

ஒரு செயலியில் iPhoneஐ லாக் செய்தல்

உங்கள் iPhoneஐப் பயன்படுத்த பிள்ளையை அனுமதிக்கும்போது, ஒரே ஒரு செயலியில் அவர்களின் அணுகலைக் கட்டுப்படுத்துங்கள்.

வழிகாட்டப்பட்ட அணுகல் மூலம் ஒரு செயலியில் iPhoneஐ லாக் செய்தல்

திரை மூலம் உங்கள் புலன் உணர்வுகள் தூண்டப்படுவதையும் நீங்கள் குறைக்கலாம். உதாரணத்திற்கு, ஒளிரும் அல்லது ஃப்ளாஷ் ஆகும் லைட்களாகக் காட்டப்படும் உள்ளடக்கத்தைத் தானாகவே மங்கச் செய்தல், GIF போன்ற விரைவு அனிமேஷன் படங்களின் டிஸ்ப்ளேவை இடைநிறுத்துதல் ஆகியவற்றைச் செய்யலாம். திரையில் உள்ள இயக்கத்தை நிறுத்துதல் அல்லது குறைத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

நீங்கள் கவனம் செலுத்த உதவுவதற்கும், வார்த்தையை உள்ளிடுவதை எளிதாக்குவதற்கும், படிக்கும் அல்லது கேட்கும் விஷயங்களைப் பின்தொடர்வதற்கும் உதவும் பல கூடுதல் கருவிகளை iPhone வழங்குகிறது. ஃபோகஸ், டிக்டேஷன், வாசித்தல் & படித்தல், நேரலை கேப்ஷன்கள் போன்ற அம்சங்கள் இவற்றில் உங்களுக்கு உதவும்.

கூடுதல் தகவல்களுக்கு, Apple நினைவாற்றல் அணுகல்தன்மை தொடர்பான இணையதளத்தைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் அல்லது கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் நீங்கள் அடிக்கடிப் பயன்படுத்தும் அணுகல்தன்மை அம்சங்களையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்தலாம். அணுகல்தன்மைச் சுருக்கவழி மூலம் அம்சங்களை விரைவாகத் திறத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.