இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள ஜர்னலில் ஒரு பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுதல்

ஜர்னல் செயலியில் உங்கள் ஜர்னலிங் இலக்குகளைக் கண்காணித்து புதிய பழக்கவழக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

புள்ளிவிவரங்களுடன் ஜர்னலிங்கைக் கண்காணித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள ஜர்னல் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் தற்போதைய ஸ்ட்ரீக்கையும் (அதாவது, நீங்கள் தொடர்ச்சியாக ஜர்னலைப் பதிவுசெய்த நாட்கள் அல்லது வாரங்களின் எண்ணிக்கை) பிற புள்ளிவிவரங்களையும் பார்க்க ஜர்னல்களில் “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. மேலும் விவரங்களைப் பார்க்க, புள்ளிவிவரங்கள் என்பதைத் தட்டி, ஏதேனும் ஒரு டைலைத் தட்டவும்.

    ஜர்னல் செயலியின் திரையில் நடப்பு ஸ்ட்ரீக் மற்றும் எழுதிய வார்த்தைகளின் எண்ணிக்கை போன்ற அளவீடுகள் காட்டப்பட்டுள்ளன.

ஜர்னலிங் அட்டவணையை அமைத்தல்

ஜர்னலிங் அறிவிப்புகள் மூலம், நீங்கள் பின்னர் எழுத நினைவூட்டலை அமைக்கலாம்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள ஜர்னல் செயலிக்குச் செல்லவும்.

  2. புள்ளிவிவரங்களின் சுருக்கவிவரத்திற்கு மேலே உள்ள ஜர்னல் செயலியின் “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும். புள்ளிவிவரங்களின் சுருக்கவிவரத்தைப் பார்க்க, நீங்கள் ஜர்னல்களில் “பின்செல்” பட்டன்-ஐத் தட்ட வேண்டியிருக்கலாம்.

  3. வாராந்தர அட்டவணையை அமைக்க “பிரத்தியேகம்” என்பதைத் தட்டவும் அல்லது உங்கள் வழக்கம் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் அறிவிப்புகளைப் பெற ”ஸ்மார்ட்” என்பதைத் தட்டவும்.

ஜர்னல் விட்ஜெட்டைப் பயன்படுத்துதல்

உங்களின் தற்போதைய தொடர்ச்சியான எழுதுதல் முயற்சி அல்லது நாள் முழுவதும் மாறக்கூடிய எழுத்து அறிவுறுத்தல்களைக் கொண்ட விட்ஜெட்டை உங்கள் முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில் சேர்க்கவும், எனவே தற்போது நிகழ்பவற்றை நீங்கள் பிரதிபலிக்கலாம்.

  1. iPhone முகப்புத் திரை அல்லது பூட்டுத் திரையில், ஜர்னல் விட்ஜெட்டைச் சேர்க்கவும்.

  2. விட்ஜெட்டை மாற்ற, அதனைத் தொட்டுப் பிடித்து, “விட்ஜெட்டைத் திருத்து” என்பதைத் தட்டவும்.

  3. விட்ஜெட்டைத் தட்டி அதில் தோன்றும் வெவ்வேறு எழுதுதல் அறிவுறுத்தல்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும், புதிய பதிவைத் தொடங்கவும் அல்லது உங்கள் தற்போதைய தொடர்ச்சியான எழுதுதல் முயற்சி பற்றிய விவரங்களைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.