இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் நினைவூட்டல்களைப் பயன்படுத்தத் தொடங்குதல்

நீங்கள் கண்காணிக்க வேண்டிய அனைத்தையும் நினைவில்கொள்ள “நினைவூட்டல்கள்” செயலி உதவுகிறது. நீங்கள் நினைவூட்டல்களை அமைக்கலாம், மளிகைப் பட்டியல்களை உருவாக்கலாம், திட்டங்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்களை உருவாக்கலாம், செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல்களில் பணிகளை ஒழுங்கமைக்கலாம்.

நினைவூட்டல்கள் பட்டியலில் புதிய பணி சேர்க்கப்படுவதைக் காட்டும் “நினைவூட்டல்கள்” செயலி.

நினைவூட்டலை அமைத்தல்

நீங்கள் எதையாவது நினைவில்கொள்ள வேண்டியிருக்கும்போது டைப் செய்யவும், டிக்டேட் செய்யவும் அல்லது Siriஐக் கேட்கவும்.

“நினைவூட்டல்கள்” செயலி, தயாரிப்பு மற்றும் கடல் உணவு போன்ற வகைகளில் உள்ள ஐட்டங்களைக் கொண்ட மளிகைப் பட்டியலைக் காட்டுகிறது.

மளிகைப் பட்டியலை உருவாக்குதல்

ஐட்டங்களைத் தன்னியக்கப் பிரிவுகளாக வரிசைப்படுத்தும் மளிகைப் பட்டியல் மூலம் உங்கள் ஷாப்பிங்கை எளிதாக்கவும். வழக்கமான பட்டியலை மளிகைப் பொருள பட்டியலாக மாற்ற, “மேலும்” பட்டன் > பட்டியல் தகவலைக் காட்டு > பட்டியல் வகை என்பதைத் தட்டிய பிறகு “மளிகைப் பொருட்கள்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

“நினைவூட்டல்கள்” செயலி, கீழே பகிர்வதற்கான விருப்பங்களுடன் மளிகைப் பட்டியலைக் காட்டுகிறது.

பட்டியலில் கூட்டுப்பணியாற்றுதல்

ஒரு பட்டியலில் வேலை செய்ய நபர்களை அழைக்க, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, பிறகு பகிர்வு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

பல பட்டியல்களைக் காட்டும் “நினைவூட்டல்கள்” செயலி மற்றும் கீழே உள்ள குறிச்சொல் உலாவி.

உங்கள் நினைவூட்டல்களை ஒழுங்கமைத்தல்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப புதிய பட்டியல்களை நீங்கள் உருவாக்கலாம், குறிச்சொற்களுடன் வகைப்படுத்தலாம், ஸ்மார்ட் பட்டியல்களுடன் உங்கள் நினைவூட்டல்களை நிர்வகிக்கலாம்.

குறிப்பு: நீங்கள் iCloudஇல் புதுப்பிக்கப்பட்ட நினைவூட்டல்களைப் பயன்படுத்தும்போது இந்த வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ள நினைவூட்டல்கள் அம்சங்கள் அனைத்தும் கிடைக்கும். மற்ற கணக்குகளைப் பயன்படுத்தும்போது சில அம்சங்கள் கிடைக்கவில்லை.

மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமா?

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.