இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

அறிவிப்புகளுக்கு iPhone திரை அல்லது இண்டிகேட்டர் லைட்டை ஃபிளாஷ் செய்தல்

நீங்கள் அறிவிப்பைப் பெறும்போது iPhone இண்டிகேட்டர் லைட், திரை அல்லது இரண்டும் ஒளிரும்படி அமைக்கலாம். உள்வரும் அழைப்புகள் அல்லது பிற விழிப்பூட்டல்களை அறிவிக்கும் ஒலிகளை உங்களால் கேட்க முடியாவிட்டாலும் அல்லது இரைச்சல் மிகுந்த சூழலில் கேட்கக்கூடிய விழிப்பூட்டல்களை நீங்கள் தவறவிட்டாலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

கேமரா லென்ஸுக்கு அருகில் iPhoneஇன் பின்புறத்தில் அமைந்துள்ள ஒளி-உமிழும் டையோட்தான் (LED) இண்டிகேட்டர் லைட்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. அணுகல்தன்மை என்பதைத் தட்டி, “ஆடியோ & விஷுவல்” என்பதைத் தட்டி, “விழிப்பூட்டல்களுக்கான ஃபிளாஷ்” என்பதைத் தட்டி, பிறகு “விழிப்பூட்டல்களுக்கான ஃபிளாஷ்” என்பதை ஆன் செய்யவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • LED ஃபிளாஷ்: iPhoneஇன் பின்புறத்தில் உள்ள இண்டிகேட்டர் லைட் ஒளிரும்.

    • திரை: iPhone திரை ஒளிரும்.

    • இரண்டும்: iPhone இண்டிகேட்டர் லைட்டும் iPhone திரையும் ஒளிரும்.

  4. பின்வருவனவற்றில் ஒன்றை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்:

    • அன்லாக் செய்யப்படும்போது பிளாஷ் ஆகுதல்: iPhone அன்லாக் செய்யப்பட்டாலும் இண்டிகேட்டர் ஃபிளாஷ் ஆகும்.

    • அமைதிப் பயன்முறையில் ஃபிளாஷ் ஆகுதல்: iPhone அமைதிப் பயன்முறையில் இருந்தாலும் இண்டிகேட்டர் லைட் ஃபிளாஷ் ஆகும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.