இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளுக்கு iPhone சாதனத்தில் Apple Payஐப் பயன்படுத்துதல்

iPhoneஇல் உள்ள வாலெட் செயலியில் நீங்கள் சேமித்துள்ள தகுதியுள்ள கார்டுகள் மூலம் கடைகள், உணவகங்கள் மற்றும் பல இடங்களில் பாதுகாப்பான, கான்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகளைச் செய்ய Apple Payஐப் பயன்படுத்தலாம்.

குறிப்பு: Apple Pay மற்றும் அதன் அம்சங்கள் குறிப்பிட்ட சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கும். Apple Payஐ ஆதரிக்கும் நாடுகள் மற்றும் வட்டாரங்கள் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

வாலெட் திரையில் காட்டப்படும் கிரெடிட் கார்டு. “ரீடரை அருகில் பிடித்துக் கொள்ளவும்” என்பது கார்டுக்குக் கீழே உள்ளது.

Apple Payஐ ஏற்றுக்கொள்ளும் இடங்களைக் கண்டறிதல்

பின்வருபவை போன்ற கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் குறியீடுகளை நீங்கள் பார்க்கும் இடத்தில் Apple Payஐப் பயன்படுத்தலாம்:

கான்டாக்ட்லெஸ் ரீடர்களில் குறியீடுகள்.

குறிப்பு: Apple Payஐ ஏற்பதுடன், உங்கள் பேமெண்ட் கார்டையும் பேமெண்ட் நெட்வொர்க்கையும் வணிகர் ஏற்க வேண்டும்.

பிற நாடுகள் மற்றும் வட்டாரங்களில், பலவகையான கான்டாக்ட்லெஸ் பேமெண்ட் குறியீடுகளை நீங்கள் பார்க்கலாம். Apple Payஐ எங்கே பயன்படுத்துவது எனத் தெரிந்துகொள்ளுதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

iPhone சாதனத்தில் Face ID உடன் உங்கள் இயல்புநிலை கார்டு மூலம் பணம் செலுத்துதல்

  1. பக்கவாட்டு பட்டனை இருமுறை கிளிக் செய்யவும்.

  2. உங்கள் இயல்புநிலை கார்டு தோன்றும் போது Face ID அல்லது உங்கள் பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.

    உதவிக்குறிப்பு: Apple Card போன்ற இணைக்கப்பட்ட கணக்கு மூலம், நீங்கள் கார்டைத் தட்டி கணக்கு பேலன்ஸ் மற்றும் மீதமுள்ள கிரெடிட்டை விரைவாகப் பார்க்கலாம். நீங்கள் பணம் செலுத்தத் தயாரானதும் கார்டை மீண்டும் தட்டவும்.

  3. திரையில் “முடிந்தது” அல்லது செக்மார்க்கைப் பார்க்கும் வரை, உங்கள் iPhoneஇன் மேல்பகுதியை கார்டு ரீடருக்கு அருகில் பிடித்துக் கொள்ளவும்.

iPhone சாதனத்தில் Touch ID உடன் உங்கள் இயல்புநிலை கார்டு மூலம் பணம் செலுத்துதல்

  1. முகப்பு பட்டனை இருமுறை கிளிக் செய்து, Touch ID மீது உங்கள் விரலை வைக்கவும்.

    உதவிக்குறிப்பு: Apple Card போன்ற இணைக்கப்பட்ட கணக்கு மூலம், நீங்கள் கார்டைத் தட்டி கணக்கு பேலன்ஸ் மற்றும் மீதமுள்ள கிரெடிட்டை விரைவாகப் பார்க்கலாம். நீங்கள் பணம் செலுத்தத் தயாரானதும் கார்டை மீண்டும் தட்டவும்.

  2. திரையில் “முடிந்தது” அல்லது செக்மார்க்கைப் பார்க்கும் வரை, உங்கள் iPhoneஇன் மேல்பகுதியை கார்டு ரீடருக்கு அருகில் பிடித்துக் கொள்ளவும்.

உங்கள் இயல்புநிலை கார்டுக்குப் பதிலாக வேறு கார்டு மூலம் பணம் செலுத்துதல்

  1. உங்கள் இயல்புநிலை கார்டு காட்டப்படும்போது, திரையின் கீழ்புறம் உள்ள கார்டுகளைத் தட்டி, வேறொரு கார்டைத் தேர்வுசெய்யவும்.

    உதவிக்குறிப்பு: உங்கள் கார்டு கணக்கின் பேலன்ஸ் அல்லது கிடைக்கக்கூடிய கிரெடிட்டை (ஆதரிக்கப்பட்டால்) விரைவாகப் பார்க்க, கார்டைத் தட்டவும். நீங்கள் பணம் செலுத்தத் தயாரானதும் கார்டை மீண்டும் தட்டவும்.

  2. Face ID, Touch ID அல்லது உங்கள் பாஸ்கோடு மூலம் அங்கீகரிக்கவும்.

  3. திரையில் “முடிந்தது” அல்லது செக்மார்க்கைப் பார்க்கும் வரை, உங்கள் iPhoneஇன் மேல்பகுதியை கார்டு ரீடருக்கு அருகில் பிடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: நீங்கள் இருப்பிடச் சேவைகளை ஆன் செய்திருந்தால், மோசடிகளைத் தடுக்க உதவும் வகையில் பணம் செலுத்தும் நேரத்தில் உங்கள் iPhoneஇன் இருப்பிடம் Appleக்கும் கார்டு வழங்குநருக்கும் அனுப்பப்படலாம். நீங்கள் பகிரும் இருப்பிடத் தகவலைக் கட்டுப்படுத்துதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.