இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள Mailஇல் “அனுப்பியதைச் செயல்தவிர்” அம்சம் மூலம் மின்னஞ்சலைச் செயல்தவிர்த்தல்

நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக்கொண்டு Mail செயலியில் அனுப்பிய மின்னஞ்சலைத் திரும்பப் பெற முடியும். அனுப்பிய அனைத்து மின்னஞ்சல்களையும் செயல்தவிர்க்க சிறிது நேரம் ஒதுக்குவதற்கான தாமதத்தையும் அமைக்கலாம்.

ஒரு இன்பாக்ஸில் மின்னஞ்சல்களின் பட்டியல் காட்டப்பட்டுள்ளது. “அனுப்பியதைச் செயல்தவிர்” பட்டன் (சமீபத்தில் அனுப்பிய மெசேஜை ரத்துசெய்ய) திரையின் கீழ்ப்பகுதியின் நடுவில் இருக்கும்.

அனுப்பிய மின்னஞ்சலைச் செயல்தவிர்த்தல்

ஒரு மின்னஞ்சலை அனுப்பிய பிறகு அதைச் செயல்தவிர்க்க 10 விநாடிகள் அவகாசம் உங்களுக்கு இருக்கும்.

அனுப்பிய மின்னஞ்சலை ரத்துசெய்ய இன்பாக்ஸின் மேலே உள்ள “அனுப்பியதைச் செயல்தவிர்” என்பதைத் தட்டவும்.

மின்னஞ்சல்கள் சென்று சேர்வதைத் தாமதப்படுத்துதல்

அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்கான தாமதத்தை அமைப்பதன் மூலம், அவற்றைச் செயல்தவிர்ப்பதற்கு நீங்கள் சற்று அவகாசம் வழங்க முடியும்.

அமைப்புகள்  > செயலிகள் > Mail என்பதற்குச் சென்று, “அனுப்பியதைச் செயல்தவிர்ப்பதற்கான தாமதம்” என்பதைத் தட்டி, அனுப்பப்படும் மின்னஞ்சல் மெசேஜ்களைத் தாமதப்படுத்துவதற்கான ஒரு கால அளவைத் தேர்வுசெய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.