iPhoneஇல் உங்களைத் தொடர்புகொள்ள முடியாதபடி தொடர்புகளைத் தடுத்தல்

iPhoneஇல் ஃபோன், மெசேஜஸ், FaceTime ஆகிய செயலிகளில் உங்களைத் தொடர்புகொள்ள முடியாதபடி தொடர்புகளை எளிதாகத் தடுக்கலாம்.

தொடர்பைத் தடுத்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “தனியுரிமை & பாதுகாப்பு” என்பதைத் தட்டி, “தடுக்கப்பட்ட தொடர்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “தடுக்கப்பட்ட தொடர்பைச் சேர்” என்பதைத் தட்டி, தடுக்க வேண்டிய தொடர்பைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்பைத் தடுப்பு நீக்குதல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “தனியுரிமை & பாதுகாப்பு” என்பதைத் தட்டி, “தடுக்கப்பட்ட தொடர்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. தடுக்கப்பட்ட தொடர்பைத் தேர்ந்தெடுத்து, கீழே ஸ்க்ரால் செய்து “தொடர்பைத் தடுப்புநீக்கு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.