இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் ஸ்கிரீன் டைம் மூலம் நேர அட்டவணைகளை அமைத்தல்

திரை நேரம் நீங்கள் iPhoneஐ எப்போது, எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நிர்வகிக்க உதவுகிறது. உங்களுக்குச் சிறப்பாகச் செயல்படும் அட்டவணைகளை உருவாக்கலாம் மற்றும் வரம்புகளை அமைக்கலாம். உங்கள் திரை நேர அட்டவணையைப் பிரத்தியேகமாக்க சில வழிகள் இங்கே காட்டப்பட்டுள்ளன:

  • செயல்படா நேரத்தைத் திட்டமிடுதல்: இரவு உணவின்போது அல்லது உறக்க நேரத்தின்போது பெரும்பாலான செயலிகள் கிடைக்காத குறிப்பிட்ட நேரங்களை அமைப்பதன் மூலம் உங்கள் திரையில் இருந்து வழக்கமான இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

  • செயலிப் பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைத்தல்: தினசரி நேர வரம்புகளை அமைப்பதன் மூலம் செயலிகளில் நீங்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்தலாம்.

  • குறிப்பிட்ட செயலிகள் மற்றும் தொடர்புகளை அனுமதித்தல்: செயல்படா நேரத்தின்போது நேர வரம்புகளை அடைந்த பிறகும் தொடர்ந்து கிடைக்கும் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்வுசெய்யலாம்.

திட்டமிடப்பட்ட செயல்படா நேரத்தின்போது செயலிகளைத் தடுக்க முடியும் என்பதால், வரம்புகள் எட்டப்பட்டதும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது.

ஸ்கிரீனில் இருந்து விலகியிருக்க வேண்டிய நேரத்தைத் திட்டமிடுதல்

உங்கள் சாதனங்களிலிருந்து நேரத்தை ஒதுக்க விரும்பும்போது, காலத்திற்கான செயலிகளையும் அறிவிப்புகளையும் தடுக்கவும். செயல்படா நேரத்தின்போது, நீங்கள் அனுமதிக்கத் தேர்ந்தெடுக்கும் அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் செயலிகள் மட்டுமே கிடைக்கும். குறிப்பிட்ட செயலிகளையும் தொடர்புகளையும் எவ்வாறு அனுமதிப்பது எனத் தெரிந்துகொள்ள, குறிப்பிட்ட தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை அனுமதித்தல் அல்லது தடுத்தல் மற்றும் அனைத்து நேரங்களிலும் அனுமதிக்கும் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்வுசெய்தல் கட்டுரைகளைப் பார்க்கவும்.

குறிப்பு: இயல்பாகவே, ஸ்கிரீன் டைம் வரம்புகள் அடைந்தவுடன் புறக்கணிக்கப்படலாம். வரம்புகள் புறக்கணிக்கப்படுவதைத் தடுப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள, திட்டமிடப்பட்ட செயல்படா நேரத்தின்போது செயலிகளைத் தடுத்தல் என்பதைப் பார்க்கவும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கான செயல்பாடா நேரத்தை ஆன் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. செயலியையும் இணையதளச் செயல்பாட்டையும் தட்டி, நீங்கள் ஏற்கெனவே செய்யவில்லை என்றால் செயலியையும் இணையதளச் செயல்பாட்டையும் ஆன் செய்யவும்.

  4. “செயல்படா நேரம்” என்பதைத் தட்டி, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • “நாளை வரை செயல்படா நேரத்தை ஆன் செய்” என்பதைத் தட்டவும்.

    • முன்கூட்டியே செயல்படா நேரத்தைத் திட்டமிடுவதற்கு, “திட்டமிடப்பட்டது” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் செயல்படா நேரத்தைத் திட்டமிடும்போது, செயல்படா நேரம் தொடங்குவதற்கு முன்பு 5 நிமிட நினைவூட்டல் அனுப்பப்படும். திட்டமிடப்பட்ட செயல்படா நேரம் தொடக்கம் வரை நீங்கள் நினைவூட்டலைப் புறக்கணிக்கலாம் அல்லது செயல்படா நேரத்தை ஆன் செய்யலாம்.

  5. ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்து அல்லது நாட்களைத் பிரத்தியேகப்படுத்தி, தொடக்கம் மற்றும் முடிவு நேரங்களை அமைக்கவும்.

    குறிப்பு: “நாட்களைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, வார இறுதி நாட்கள் போன்ற வாரத்தின் வெவ்வேறு நாட்களுக்கான அட்டவணைகளை அமைக்கலாம்.

திட்டமிடப்பட்டதை ஆஃப் செய்வதன் மூலம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செயல்படா நேரத்திற்கான திட்டமிடுதலை ஆஃப் செய்யலாம்.

திட்டமிடப்பட்ட செயல்படா நேரத்தின்போது செயலிகளைத் தடுத்தல்

நீங்கள் உங்களுக்காகவோ உங்கள் சிறாருக்காகவோ திரை நேர பாஸ்கோடை அமைத்தால், செயலிகள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டுமா அல்லது ஓய்வு நேரத்தில் மங்கலாகக் காட்டப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்காக இந்த அம்சத்தை ஆன் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. செயல்படா நேரத்தைத் தட்டி, “செயல்படா நேரத்தில் தடு” என்பதை ஆன் செய்யவும்.

“செயல்படா நேரத்தில் தடு” ஆன் செய்யப்பட்டிருந்தால், செயல்படா நேரத்தின்போது கட்டுப்படுத்தப்பட்ட செயலிகளைத் திறக்க முடியாது. அவை மணல் கடிகார ஐகானுடன் மங்கலாகக் காட்டப்படும். “செயல்படா நேரத்தில் தடு” ஆஃப் செய்யப்பட்டிருந்தால், செயல்படா நேரம் குறித்த நினைவூட்டல் காட்டப்படும், ஆனால் செயலிகளைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

செயலி பயன்பாட்டிற்கான வரம்புகளை அமைத்தல்

செயலிகளின் வகைக்கும் (உதாரணமாக, கேம்கள் அல்லது சமூக நெட்வொர்க்கிங்) தனிப்பட்ட செயலிகளுக்கும் நேர வரம்பை அமைக்கவும்.

  1. iPhoneஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கான செயலி வரம்புகளை அமைக்க விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. “செயலி வரம்புகள்” என்பதைத் தட்டி, “வரம்பைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலி வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

    தனிப்பட்ட செயலிகளுக்கான வரம்புகளை அமைக்க, அந்தப் பிரிவில் உள்ள அனைத்துச் செயலிகளையும் பார்க்க வகைப் பெயரைத் தட்டி, நீங்கள் வரம்பிட விரும்பும் செயலிகளைத் தேர்ந்தெடுக்கவும். பல பிரிவுகளையோ செயலிகளையோ நீங்கள் தேர்ந்தெடுத்தால், நீங்கள் அமைக்கும் நேர வரம்பு அவை அனைத்திற்கும் பொருந்தும்.

  5. மேல் வலதுபுறத்தில் உள்ள “அடுத்து” என்பதைத் தட்டி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை அமைக்கவும்.

    ஒவ்வொரு நாளுக்கும் குறிப்பிட்ட நேரத்தைச் அமைக்க, “நாட்களைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, குறிப்பிட்ட நாட்களுக்கான வரம்புகளை அமைக்கவும்.

  6. வரம்புகளை அமைத்த பிறகு “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

அனைத்து நேரங்களிலும் அனுமதிக்கும் செயலிகளையும் தொடர்புகளையும் தேர்வுசெய்தல்

செயல்படா நேரத்திலும் கூட, அனைத்து நேரங்களிலும் (உதாரணமாக, அவசரகாலத்திலும்) நீங்கள் பயன்படுத்தும் செயலிகளையும் தொடர்புகொள்ளக்கூடிய தொடர்புகளையும் குறிப்பிடவும்.

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “ஸ்கிரீன் டைம்” என்பதைத் தட்டவும்.

    உங்கள் சிறாருக்கு இந்த அம்சத்தை ஆன் செய்ய விரும்பினால், உங்கள் சிறாரின் பெயரைத் தட்டவும்.

  3. “எப்போதும்” என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் தகவல்தொடர்பை அனுமதிக்க விரும்பும் தொடர்புகளைக் குறிப்பிட, “தொடர்புகள்” என்பதைத் தட்டவும்.

    தகவல்தொடர்பு வரம்புகளில் நீங்கள் தேர்ந்தெடுத்த விருப்பம் இங்கே காட்டப்படும். இந்த அமைப்பை குறிப்பிட்ட தொடர்புகள் என்பதற்கு மாற்றி, பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்:

    • எனது தொடர்புகளில் இருந்து தேர்வுசெய்: குறிப்பிட்ட தொடர்புகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் தகவல்தொடர்பு செய்ய அனுமதிக்கலாம்.

    • புதிய தொடர்பைச் சேர்: ஒரு புதிய தொடர்பைச் சேர்த்து, அவர்களுடனான தகவல்தொடர்புகளை அனுமதிக்கலாம்.

  5. மேல் இடதுபுறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டி, "அனுமதித்த செயலிகள்" என்பதற்குக் கீழே உள்ள “அகற்று” பட்டன் அல்லது "செயலிகளைத் தேர்வுசெய்க" என்பதற்குக் கீழே உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. மேல் இடதுபுறத்தில் உள்ள “பின்செல்” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.