இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஐ பேக்-அப் செய்தல்

iCloud அல்லது உங்கள் கணினியைப் பயன்படுத்தி iPhoneஐ பேக்-அப் செய்யலாம். உங்களுக்கு எந்த முறை சிறந்தது என்பதைத் தீர்மானிக்க, iPhone, iPad, iPod touch ஆகியவற்றுக்கான பேக்-அப்கள் குறித்த விவரங்கள் என்ற பிரிவைப் பார்க்கவும்.

உதவிக்குறிப்பு: உங்கள் iPhoneஐ மாற்றினால், உங்கள் தகவல்களைப் புதிய சாதனத்திற்கு இடமாற்ற அதன் பேக்-அப்பைப் பயன்படுத்தலாம். பேக்-அப்பில் இருந்து அனைத்து உள்ளடக்கத்தையும் iPhoneக்கு மீட்டமைத்தல் பிரிவைப் பார்க்கவும்.

iCloudஐப் பயன்படுத்தி iPhoneஐ பேக்-அப் செய்தல்

iCloud உடன் வழக்கமாக ஒத்திசைக்கப்படாத தகவல்களையும் அமைப்புகளையும் உங்கள் சாதனத்தில் iCloud பேக்-அப்கள் சேமித்து வைக்கின்றன. இதில் சாதன அமைப்புகள், முகப்புத் திரை லே-அவுட், செயலி ஒழுங்கமைப்பு ஆகியவை அடங்கும். iCloud எதை பேக்-அப் செய்யும்? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloudஐத் தட்டி, “iCloud பேக்-அப்” என்பதைத் தட்டவும்.

  3. “இந்த iPhoneஐ பேக்-அப் செய்க” அம்சத்தை ஆன் செய்யவும்.

    உங்கள் iPhone பவரில் இணைக்கப்பட்டு, லாக் செய்யட்டு, Wi-Fiஇல் இணைக்கப்பட்டிருந்தால் iCloud தினமும் iPhoneஐ பேக்-அப் செய்யும்.

    குறிப்பு: 5Gஐ ஆதரிக்கும் மாடல்களில், மொபைல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி iPhoneஐ பேக்-அப் செய்வதற்கான விருப்பத்தை உங்கள் நெட்வொர்க் வழங்குநர் வழங்கக்கூடும். அமைப்புகள் > [உங்கள் பெயர்] > iCloud > iCloud பேக்-அப் என்பதற்குச் சென்று “மொபைல் சேவை இணைப்பில் பேக்-அப் செய்” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

  4. நீங்களாகவே பேக்-அப் செய்ய, “இப்போதே பேக்-அப் செய்” என்பதைத் தட்டவும்.

உங்கள் iPhoneஐ iCloudஇல் பேக்-அப் செய்ய உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், iCloudஇல் பேக்-அப் செய்ய முடியவில்லை என்றால் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

கிடைக்கக்கூடிய iCloud சேமிப்பிகத்தைப் பார்த்தல்

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloudஐத் தட்டவும்.

    திரையின் மேற்புறத்தில் iCloud சேமிப்பகத்தில் பயன்படுத்தப்பட்ட சேமிப்பிடத்தின் அளவும், iCloud சேமிப்பகத்தில் கிடைக்கக்கூடிய சேமிப்பிடத்தின் அளவும் காட்டப்படும்.

iCloud சேமிப்பகத்தை நிர்வகித்தல்

கடைசியாக பேக்-அப் செய்தது, அடுத்த பேக்-அப்பின் அளவு, பேக்-அப்பில் சேர்க்கப்பட்டுள்ள செயலிகள் போன்ற iCloud பேக்-அப்புகள் பற்றிய விவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

  1. iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, iCloudஐத் தட்டவும்.

  3. iCloud பேக்-அப் என்பதைத் தட்டி, உங்கள் iPhoneஐ (இந்த iPhone) தட்டவும்.

  4. பேக்-அப் அளவைக் குறைக்க, நீங்கள் இனி பேக்-அப் செய்ய விரும்பாத செயலிகளைத் தட்டவும்; iCloudஇல் இருந்து ஏற்கெனவே பேக்-அப் செய்யப்பட்ட செயலிகளின் தரவுகளும் நீக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு, உங்கள் iCloud சேமிப்பகத்தை நிர்வகித்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் Macஐப் பயன்படுத்தி iPhoneஐ பேக்-அப் செய்தல்

உங்கள் Macஇல் iPhone தரவின் பேக்-அப்பைச் சேமிக்கலாம்.

  1. iPhone மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைக்கவும்.

  2. உங்கள் Macஇல் உள்ள Finder சைடுபாரில் உள்ள உங்கள் iPhoneஐத் தேர்ந்தெடுக்கவும்.

    iPhoneஐ பேக்-அப் செய்ய Finderஐப் பயன்படுத்துவதற்கு, macOS 10.15 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு தேவை. macOSஇன் முந்தைய பதிப்புகளில், iPhoneஐ பேக்-அப் செய்ய, iTunesஐப் பயன்படுத்தவும்.

  3. Finder சாளரத்தின் மேற்புறத்தில் உள்ள “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்யவும்.

  4. “உங்கள் iPhoneஇல் உள்ள அனைத்துத் தரவையும் இந்த Macஇல் பேக்-அப் செய்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. உங்கள் பேக்-அப் தரவை என்கிரிப்ட் செய்து பாஸ்வேர்டு மூலம் அதைப் பாதுகாக்க, “சாதனத்தில் உள்ள பேக்-அப்பை என்கிரிப்ட் செய்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. “இப்போதே பேக்-அப் செய்” என்பதை கிளிக் செய்யவும்.

குறிப்பு: iPhoneஐ உங்கள் கம்ப்யூட்டருடன் வயர்லெஸ் முறையிலும் இணைக்கலாம். iPhoneஐ மற்ற சாதனங்களுடன் ஒத்திசைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

உங்கள் Windows சாதனத்தைப் பயன்படுத்தி iPhoneஐ பேக்-அப் செய்தல்

  1. iPhone மற்றும் உங்கள் கம்ப்யூட்டரை கேபிள் மூலம் இணைக்கவும்.

  2. உங்கள் Windows சாதனத்தில் உள்ள iTunes செயலியில், iTunes சாளரத்தின் மேல் இடதுபுறத்தில் உள்ள iPhone பட்டனை கிளிக் செய்யவும்.

  3. சுருக்கவிவரத்தை கிளிக் செய்யவும்.

  4. “இப்போதே பேக்-அப் செய்” (பேக்-அப்களுக்குக் கீழே இருக்கும்) என்பதை கிளிக் செய்யவும்.

  5. உங்கள் பேக்-அப்களை என்கிரிப்ட் செய்ய, “சாதனத்தில் உள்ள பேக்-அப்களை என்கிரிப்ட் செய்” என்பதைத் தேர்ந்தெடுத்து பாஸ்வேர்டை டைப் செய்து “பாஸ்வேர்டை அமை” என்பதை கிளிக் செய்யவும்.

உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் பேக்-அப்களைப் பார்க்க, திருத்து > முன்னுரிமைகள் என்பதைத் தேர்வுசெய்து “சாதனங்கள்” என்பதை கிளிக் செய்யவும். என்கிரிப்ட் செய்யப்பட்ட பேக்-அப்களின் பட்டியலில் பூட்டு ஐகான் இருக்கும்.

குறிப்பு: iPhoneஐ உங்கள் கம்ப்யூட்டருடன் வயர்லெஸ் முறையிலும் இணைக்கலாம். iPhoneஐ மற்ற சாதனங்களுடன் ஒத்திசைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.