இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

உங்கள் இருப்பிடம் மாறும்போது iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலியில் நண்பர்களுக்குத் தெரிவித்தல்

உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பர்களுக்குத் தெரிவிக்க “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் நண்பரின் இருப்பிடம் மாறும்போதும் நீங்கள் அறிவிப்பைப் பெறலாம். iPhoneஇல் “இடம் அறி” செயலியில் ஒரு நண்பரின் இருப்பிடம் மாறும்போது அறிவிப்பைப் பெறுதல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பருக்குத் தெரிவித்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “நபர்கள்” என்பதைத் தட்டி, நீங்கள் தெரிவிக்க விரும்பும் நபரின் பெயரைத் தட்டவும்.

  3. அறிவிப்புகளுக்குக் கீழே, “சேர்” என்பதைத் தட்டி, “[உங்கள் நண்பரின் பெயர்]-க்குத் தெரிவி” என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்திற்கு வரும்போது தெரிவிக்க வேண்டுமா அல்லது அங்கிருந்து வெளியேறும்போது தெரிவிக்க வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யவும்.

  5. இருப்பிடத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது புதிய இருப்பிடத்தை உருவாக்க “புதிய இருப்பிடம்” என்பதைத் தட்டி சுற்றளவை அமைக்கவும்.

    அதிகச் சுற்றளவை அமைத்தால், நீங்கள் அந்த இருப்பிடத்தில் இருக்கும்போது தெரிவிப்பதற்குப் பதிலாக இருப்பிடத்திற்கு அருகில் இருக்கும்போது உங்கள் நண்பருக்குத் தெரிவிக்கப்படும்.

  6. உங்கள் நண்பருக்கு ஒருமுறை மட்டும் தெரிவிக்க வேண்டுமா அல்லது ஒவ்வொரு முறையும் தெரிவிக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.

  7. “சேர்” என்பதைத் தட்டவும்.

உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பர்களுக்குத் தெரிவிக்கும் அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நிறுத்தலாம். நீங்கள் அமைத்த அறிவிப்பை மாற்றுதல் அல்லது ஆஃப் செய்தல் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உங்களைப் பற்றிய அறிவிப்புகள் அனைத்தையும் பார்த்தல்

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்பகுதியில் உள்ள ”நான்” என்பதைத் தட்டவும்.

    “உங்களைப் பற்றிய அறிவிப்புகள்” என்பதற்குக் கீழே, உங்கள் இருப்பிடம் மாறும்போது தெரிவிக்கப்படும் நபர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

    “உங்களைப் பற்றிய அறிவிப்புகள்” பிரிவு காட்டப்படவில்லை என்றால், உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பர்கள் எவருக்கும் நீங்கள் தெரிவிக்கவில்லை என்று அர்த்தம்.

  3. மேலும் விவரங்களைப் பார்க்க ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களைப் பற்றிய அறிவிப்புகளை ஆஃப் செய்தல்

உங்களைப் பற்றிய எந்தவொரு இருப்பிட அறிவிப்பையும் நீங்கள் ஆஃப் செய்யலாம். நீங்கள் அமைத்துள்ள அறிவிப்புகளும் உங்கள் நண்பர்கள் உருவாக்கும் அறிவிப்புகளும் இதில் அடங்கும்.

  1. உங்கள் iPhoneஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ்பகுதியில் உள்ள ”நான்” என்பதைத் தட்டவும்.

    “உங்களைப் பற்றிய அறிவிப்புகள்” என்பதற்குக் கீழே, உங்கள் இருப்பிடம் மாறும்போது தெரிவிக்கப்படும் நபர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

    “உங்களைப் பற்றிய அறிவிப்புகள்” பிரிவு காட்டப்படவில்லை என்றால், உங்கள் இருப்பிடம் மாறும்போது நண்பர்கள் எவருக்கும் நீங்கள் தெரிவிக்கவில்லை என்று அர்த்தம்.

  3. பெயரைத் தேர்ந்தெடுத்து, அறிவிப்பைத் தட்டவும்.

  4. “அறிவிப்பை நீக்கு” என்பதைத் தட்டி, மீண்டும் “அறிவிப்பை நீக்கு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.