இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhone சாதனத்தில் iCloudஇல் உங்கள் உடல்நலம் செயலியின் தரவுகளை பேக்-அப் எடுத்தல்

உங்கள் Apple கணக்கு மூலம் உள்நுழைந்தால், உடல்நலம் செயலியில் உள்ள உங்கள் உடல்நலம் மற்றும் ஃபிட்னஸ் தகவல்கள் iCloudஇல் தானாகவேச் சேமிக்கப்படும். உங்கள் தகவல் iCloudஇல் சேமிக்கப்பட்டு, iCloudக்கும் உங்கள் சாதனத்திற்கும் இடையே பரிமாற்றப்படும்போது, என்கிரிப்ட் செய்யப்படும்.

மேலும் நீங்கள் iCloudஐப் பயன்படுத்தினாலும் அல்லது iCloudஐப் பயன்படுத்தாமல் இருந்தாலும், கம்ப்யூட்டர் பேக்-அப்பை என்கிரிப்ட் செய்வதன் மூலம் உங்கள் உடல்நலத் தரவை பேக்-அப் செய்யலாம். iPhoneஐ பேக்-அப் செய்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: உடல்நலம் செயலியின் தரவுகள் உங்களின் எல்லாச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்பட, உங்கள் சாதனங்கள் ஒரே Apple கணக்கில் உள்நுழைந்துள்ளதையும், இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும், சமீபத்திய OS பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்யவும்.

iCloudஇல் உங்கள் உடல்நலத் தரவை நிர்வகித்தல்

உங்கள் உடல்நலத் தரவுகள் உங்கள் அனைத்துச் சாதனங்களிலும் ஒத்திசைக்கப்படுவதை உறுதிசெய்யலாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் தரவைச் சேமிப்பதை நிறுத்தலாம்.

  1. உங்கள் iPhoneஇல் அமைப்புகள் செயலிக்குச் செல்லவும்

  2. உங்கள் பெயரைத் தட்டி iCloud என்பதைத் தட்டவும்.

  3. “அனைத்தையும் காட்டு” என்பதைத் தட்டி, “உடல்நலம்” என்பதைத் தட்டி, “iPhone உடன் ஒத்திசை” என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.