இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPhoneஇல் உள்ள FaceTimeஇல் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து மீடியாவை பார்க்க, கேட்க, கேம் விளையாட SharePlayஐப் பயன்படுத்துதல்

FaceTime செயலியில் உள்ள SharePlay மூலம், FaceTime அழைப்பின்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் இசையை ஸ்ட்ரீம் செய்யலாம். FaceTime அழைப்பின்போது, ஆதரிக்கப்படும் மல்டிபிளேயர் கேம்களை Game Centerஇல் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம். மேலும், ஆதரிக்கப்படும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒன்றாகச் சேர்ந்து பார்க்கலாம்.

குறிப்பு: இரண்டு iPhoneகளை ஒன்றாக இணைத்து SharePlayஐ உடனடியாகத் தொடங்கலாம். இரண்டு iPhoneகளை அருகருகில் பிடித்து SharePlay அமர்வைத் தொடங்குதல் என்பதைப் பார்க்கவும்.

FaceTime அழைப்பின்போது SharePlayஐ மற்ற செயலிகளிலும் பயன்படுத்தலாம். எந்தெந்தச் செயலிகள் ஆதரிக்கப்படுகின்றன என்பதைப் பார்க்க, “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, SharePlayஐத் தட்டி, செயலிகளை ஸ்க்ரால் செய்து பார்க்கலாம்.

குறிப்பு: Apple TV (பழைய பெயர்: Apple TV+, இதில் வெள்ளி இரவு நடைபெறும் பேஸ்பால் விளையாட்டு, ஞாயிறு இரவு நடைபெறும் கால்பந்து விளையாட்டு அல்லது இரண்டுமே சில நாடுகள் மற்றும் வட்டாரங்களில் கிடைக்கும்) மற்றும் MLS Season Passக்கு (இதில் ஞாயிறு இரவு நடைபெறும் கால்பந்து விளையாட்டு கிடைக்கும்) Apple TV சேனல்கள் மற்றும் SharePlayஐ ஆதரிக்கும் சில செயலிகள் ஆகியவற்றுக்குச் சந்தா தேவை. திரைப்படம், டிவி நிகழ்ச்சி அல்லது நேரலை விளையாட்டு நிகழ்ச்சியை மற்றவர்களுடன் சேர்ந்து பார்க்க, ஒவ்வொரு பங்கேற்பாளரும் குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தங்கள் சாதனத்தில் அந்த உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கொண்டிருக்க வேண்டும், அதாவது, அவற்றுக்குச் சந்தா சேர்ந்தோ அவற்றை வாங்கியோ அவற்றுக்கான அணுகலைப் பெறலாம். சில திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் அல்லது நேரடி விளையாட்டு நிகழ்வுகளைப் பகிர்வதை வேறு சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் SharePlay ஆதரிக்காமல் போகலாம். FaceTime, குழு FaceTime, சில FaceTime அம்சங்கள் மற்றும் பிற Apple சேவைகள் குறிப்பிட்ட நாடுகள் அல்லது வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

FaceTime அழைப்பின்போது வீடியோவை ஒன்றிணைந்து பார்த்தல்

FaceTime அழைப்பின்போது உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடன் ஒத்திசைந்து திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். ஆதரிக்கப்படும் நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நீங்கள் பார்க்கலாம்.

  1. FaceTime அழைப்பு அல்லது குழு FaceTime அழைப்பைத் தொடங்கவும்.

  2. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, SharePlayஐத் தட்டவும். பிறகு “இணைந்து கேளுங்கள் & பிளே செய்யுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள செயலிகளில் ஒன்றைத் தட்டவும் (எடுத்துக்காட்டாக, Apple TV செயலி).

    மாற்றாக, நீங்கள் முகப்புத் திரைக்குச் சென்று, SharePlayஐ ஆதரிக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் செயலியைத் திறக்கலாம்.

  3. நீங்கள் பார்க்க விரும்பும் நிகழ்ச்சி, திரைப்படம் அல்லது நேரலை விளையாட்டு நிகழ்வைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. பிளே பட்டனைத் தட்டி, அழைப்பில் உள்ள அனைவருடனும் சேர்ந்து பார்க்க SharePlayஐ (அது தோன்றினால்) தேர்ந்தெடுக்கவும். (அழைப்பில் உள்ள மற்றவர்கள் வீடியோவைப் பார்க்க, “SharePlayஇல் இணை” என்பதைத் தட்ட வேண்டியிருக்கும்.)

    உள்ளடக்கத்தை அணுகக்கூடிய அழைப்பில் உள்ள அனைவருக்கும் வீடியோ ஒரே நேரத்தில் பிளே செய்யப்படத் தொடங்கும். அணுகல் இல்லாதவர்கள் அணுகலைப் பெறும்படி கேட்கப்படுவார்கள் (சந்தாசேர்தல், பரிவர்த்தனை அல்லது இலவச ட்ரையலின் மூலம்).

உள்ளடக்கத்தைப் பார்க்கும் ஒவ்வொரு நபரும் பிளேபேக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி மீடியாவை பிளே செய்யலாம், இடைநிறுத்தலாம், ரீவைண்டு செய்யலாம், ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்யலாம். (காட்சி விளக்கம், ஒலியளவு போன்ற அமைப்புகளை ஒவ்வொரு நபரும் தனித்தனியாகக் கட்டுப்படுத்தலாம்.)

வேறொரு செயலியைப் பயன்படுத்தும்போது வீடியோவைப் பார்த்துக்கொண்டே இருக்க பிக்சர்-இன்-பிக்சர் பயன்முறையைப் பயன்படுத்தலாம், அதாவது வீடியோவைப் பார்த்துக்கொண்டே உணவை ஆர்டர் செய்யலாம், உங்கள் மின்னஞ்சலைப் பார்க்கலாம் அல்லது அந்தத் திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியின் ஒலியைக் குறுக்கிடாமல் அந்த வீடியோவைப் பற்று மெசேஜ் மூலம் விவாதிக்க மெசேஜஸ் செயலிக்குச் செல்லலாம்.

FaceTime அழைப்பின்போது ஆதரிக்கப்படும் செயலியில் இருந்து ஒன்றாக வீடியோவைப் பார்க்க நண்பர்களை அழைத்தல்

குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் iPhoneஇல் நீங்கள் உலாவும்போதோ வீடியோ உள்ளடக்கத்தைப் பார்க்கும்போதோ Apple TV செயலியில் (அல்லது ஆதரிக்கப்படும் பிற வீடியோ செயலியில்) FaceTime அழைப்பைத் தொடங்கலாம், மேலும் SharePlayஐப் பயன்படுத்தி மற்றவர்களுடன் ஒத்திசைவில் ஐட்டத்தைப் பகிரலாம். அழைப்பில் உள்ள அனைவரும் சந்தாசேர்தல் அல்லது வாங்குதல் மூலம் தங்கள் சாதனத்தில் உள்ள உள்ளடக்கத்திற்கு ஒரே வகையான அணுகலைப் பெற வேண்டும்.

  1. Apple TV செயலியில் (அல்லது ஆதரிக்கப்படும் வேறொரு வீடியோ செயலியில்), நீங்கள் பகிர விரும்பும் நிகழ்ச்சி, திரைப்படம் அல்லது நேரலை விளையாட்டு நிகழ்வைக் கண்டறியவும்.

  2. ஐட்டத்தின் விவரங்களைப் பார்க்க அதைத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, SharePlay பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நீங்கள் பகிர விரும்பும் தொடர்புகளை பெறுநர் புலத்தில் உள்ளிட்டு FaceTime மீது தட்டவும்.

  4. FaceTime அழைப்பு இணைக்கப்படும்போது, SharePlayஐப் பயன்படுத்த, “தொடங்குக” அல்லது “பிளே செய்” என்பதைத் தட்டவும்.

    பார்க்கத் தொடங்க, பெறுநர்கள் “திற” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: உள்ளடக்கத்திற்குச் சந்தா தேவைப்பட்டால், சந்தா சேராதவர்கள் அதனைப் பார்ப்பதற்கு முன்பு சந்தா சேரலாம்.

வீடியோ பிளே ஆகத் தொடங்கிய பிறகு, அதை Apple TV 4Kக்கு ஸ்ட்ரீம் செய்யலாம். SharePlayஇல் நீங்கள் பார்ப்பதை Apple TV 4Kக்கு அனுப்புதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் பார்ப்பதை SharePlayஇல் Apple TV 4Kக்கு அனுப்புதல்

நீங்கள் ஏற்கெனவே iPhoneஇல் பிறருடன் சேர்ந்து வீடியோ பார்க்கத் தொடங்கியிருந்தால், அதைப் பெரிய திரையில் கண்டு மகிழ Apple TV 4Kக்கு அனுப்பலாம்.

iPhoneஇல் பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

வீடியோ Apple TV 4Kஇல் ஒத்திசைத்து பிளே செய்யப்படும், iPhoneஇல் நீங்கள் உரையாடலைத் தொடரலாம்.

Apple TV 4K பயனர் வழிகாட்டியில் உள்ள SharePlayஐப் பயன்படுத்தி ஒன்றிணைந்து பார்த்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

FaceTime அழைப்பின்போது ஒன்றிணைந்து இசையைக் கேட்டல்

FaceTime அழைப்பில் மற்றவர்களுடன் சேர்ந்து ஆல்பம் அல்லது பிடித்த பிளேலிஸ்ட்டைக் கேட்கலாம். குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சாதனத்தில் இசையை அணுகக்கூடிய (உதாரணமாக, சந்தாசேர்தல், பரிவர்த்தனை அல்லது இலவச ட்ரயல் மூலம்), அழைப்பில் உள்ள எவரும் ஒன்றுசேர்ந்து உள்ளடக்கத்தைக் கேட்கலாம், அடுத்து என்ன என்பதைப் பார்க்கலாம், பகிரப்பட்ட வரிசையில் பாடல்களைச் சேர்க்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

  1. FaceTime அழைப்பு அல்லது குழு FaceTime அழைப்பைத் தொடங்கவும்.

  2. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, SharePlayஐத் தட்டவும். பிறகு “இணைந்து பிளே செய்து கேளுங்கள்” என்பதற்குக் கீழே உள்ள செயலிகளில் இசை ஸ்ட்ரீமிங் செயலியைத் தட்டவும் (எடுத்துக்காட்டாக, இசைச் செயலி).

    மாற்றாக, நீங்கள் முகப்புத் திரைக்குச் சென்று, SharePlayஐ ஆதரிக்கும் இசை ஸ்ட்ரீமிங் செயலியைத் திறக்கலாம்.

  3. இசையை ஒன்றிணைந்து கேட்க, நீங்கள் கேட்க விரும்பும் இசையைத் தேர்ந்தெடுத்து பிளே பட்டனைத் தட்டவும். (அழைப்பில் உள்ள மற்றவர்கள் இசையைக் கேட்க “SharePlayஇல் இணை” என்பதைத் தட்ட வேண்டியிருக்கும்.)

    உள்ளடக்கத்தை அணுகக்கூடிய அழைப்பில் உள்ள அனைவருக்கும் இசை ஒரே நேரத்தில் பிளே செய்யத் தொடங்கும். அணுகல் இல்லாதவர்கள் அணுகலைப் பெறும்படி கேட்கப்படுவார்கள் (சந்தாசேர்தல், பரிவர்த்தனை அல்லது இலவச ட்ரையலின் மூலம்).

ஒவ்வொரு நபரும் இசைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி பாடலை இடைநிறுத்தலாம், ரீவைண்டு செய்யலாம், ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்யலாம், பாடலின் வெவ்வேறு பகுதிக்கு ஸ்க்ரப் செய்யலாம் அல்லது அடுத்த பாடலுக்குச் செல்லலாம். அழைப்பில் உள்ள எவரும் பாடல்களைப் பகிரப்பட்ட வரிசையில் சேர்க்கலாம்.

FaceTime அழைப்பின்போது ஆதரிக்கப்படும் செயலியில் இருந்து ஒன்றிணைந்து இசையைக் கேட்க நண்பர்களை அழைத்தல்

குறைந்தபட்ச சிஸ்டம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் iPhoneஇல் உள்ள இசை செயலியில் (அல்லது பிற ஆதரிக்கப்படும் இசை செயலியில்) FaceTime அழைப்பைத் தொடங்கலாம் மற்றும் அழைப்பில் உள்ள மற்றவர்களுடன் இசையை ஒத்திசைக்க SharePlayஐப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நபரும் பாடலை இடைநிறுத்த, ரீவைண்டு செய்ய, ஃபாஸ்ட் ஃபார்வர்டு செய்ய அல்லது பாடலின் வெவ்வேறு இடத்திற்கு ஸ்க்ரப் செய்ய இசைக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம். SharePlayஐப் பயன்படுத்தும் எவரும் பாடல்களைப் பகிரப்பட்ட வரிசையில் சேர்க்கலாம். நீங்கள் பகிர விரும்பும் நபர்களுக்கு அந்த இசைக்கான அணுகல் இருக்க வேண்டும் (உதாரணமாக, சந்தாசேர்தல் மூலம்).

  1. இசை செயலிக்கு (அல்லது ஆதரிக்கப்படும் பிற இசை செயலிக்கு) சென்று, நீங்கள் பகிர விரும்பும் இசையைத் தட்டவும்.

  2. “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, பிறகு SharePlay பட்டன்-ஐத் தட்டவும்.

  3. நீங்கள் பகிர விரும்பும் தொடர்புகளை பெறுநர் புலத்தில் உள்ளிட்டு FaceTime மீது தட்டவும்.

  4. FaceTime அழைப்பு இணைக்கப்பட்டதும், “தொடங்குக” என்பதைத் தட்டவும்.

    கேட்கத் தொடங்க, பெறுநர்கள் FaceTime கட்டுப்பாடுகளின் மேலே உள்ள பாடல் தலைப்பு மீது தட்டி, “திற” என்பதைத் தட்டவும். உள்ளடக்கத்தை அணுகக்கூடிய அழைப்பில் உள்ள அனைவருக்கும் இசை ஒரே நேரத்தில் பிளே செய்யத் தொடங்கும்.

குறிப்பு: நீங்கள் பகிரும் உள்ளடக்கத்திற்கான அணுகல் இல்லாதவர்களிடம் அணுகலைப் பெறக் கேட்கப்படும்.

FaceTime அழைப்பின்போது நண்பர்களுடன் Game Centerஇல் கேம்களை விளையாடுதல்

FaceTime அழைப்பில் Game Center மூலம் நண்பர்களுடன் ஆதரிக்கப்படும் மல்டிபிளேயர் கேம்களை விளையாடலாம். முதலில் உங்கள் Game Center சுயவிவரத்தை அமைப்புகள்  செயலியில் அமைத்து நிர்வகித்து, நண்பர்களை நீங்கள் சேர்க்க வேண்டும். அதன் பிறகு App Storeஇல் Game Centerக்கான ஆதரிக்கப்படும் மல்டிபிளேயர் கேமைக் கண்டுபிடித்துப் பதிவிறக்க வேண்டும்.

FaceTime அழைப்பின்போது கேமைத் திறந்து “SharePlayஐத் தொடங்குக” என்பதைத் தட்டி, திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

iPhoneஇல் உள்ள Apple Games செயலியில் நண்பர்களுடன் விளையாடலாம் என்பதைப் பார்க்கவும்.

Apple Fitness+ஐப் பயன்படுத்தி மற்றவர்களுடன் உடற்பயிற்சி செய்ய SharePlay உங்களை அனுமதிக்கும். உங்கள் iPhone, iPad அல்லது Apple TVஇல் Apple Fitness+ உடன் SharePlayஐப் பயன்படுத்துதல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

உரையாடலின்போது செயலிகள், இணையப் பக்கங்கள் மற்றும் பலவற்றைக் காட்ட உங்கள் திரையைப் பகிரலாம். FaceTime அழைப்பில் உங்கள் திரையைப் பகிர்தல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.