இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் Siriஐப் பயன்படுத்துவது எப்படி?

iPadஇல் உள்ளமைக்கப்பட்டுள்ள அறிவார்ந்த உதவியாளரான Siri மூலம் நீங்கள் பல பணிகளைச் செய்து முடிக்கலாம். Siriஐ ஆன் செய்த பிறகு, அதைப் பயன்படுத்தி உங்கள் குரல் மூலமோ டைப் செய்தோ Siriக்குக் கோரிக்கைகளை விடுத்து அன்றாடப் பணிகளை நீங்கள் செய்து முடிக்கலாம். நீங்கள் Siriஐ எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உங்களுக்குத் தேவையானதை அது அறிந்துகொள்ளும்.

நீங்கள் Siriஐப் பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் உதாரணங்கள் வழிகாட்டி முழுவதும் காட்டப்படும். மேலும் உதாரணங்கள் வேண்டுமா? Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்ற எதையேனும் சொல்லுங்கள்: “What can I do here?”

iPad திரையில், கணக்கீடு வடிவில் திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

தகவலைப் பெறுதல்

“Siriஐக் கேளுங்கள்” அம்சத்தைப் பயன்படுத்தி வார்த்தைகளுக்கான ஸ்பெல்லிங்கைக் கேட்கலாம் அல்லது அவற்றை மொழிபெயர்க்கலாம், கணக்கீடுகளைச் செய்யலாம், இணையத்தில் இருந்து தகவல்களைப் பெறலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி தகவலைப் பெறலாம்

iPad திரையில், அனுப்புவதற்குத் தயாராக உள்ள மெசேஜைப் போன்று திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

அழைத்தல், மெசேஜ் செய்தல் மற்றும் மின்னஞ்சல் அனுப்புதல்

ஃபோன், FaceTime, மெசேஜஸ், Mail ஆகிய செயலிகளுடன் Siriஐப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் அருகிலும் தொலைவிலும் உள்ள நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கலாம்.

Siri மூலம் அழைக்கலாம், மெசேஜ் செய்யலாம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பலாம்

iPad திரையில், திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

இசை மற்றும் பாட்காஸ்ட்களை பிளே செய்தல்

உங்களுக்கு பிடித்த இசை மற்றும் பாட்காஸ்ட்களை பிளே செய்யவும் ஆடியோ பிளேபேக்கைக் கட்டுப்படுத்தவும் Siriஐக் கேளுங்கள். உதாரணத்திற்கு, பாடல்களை பிளே செய்ய, இடைநிறுத்த அல்லது தவிர்க்க Siriஐக் கேளுங்கள்.

Siri மூலம் இசை மற்றும் பாட்காஸ்ட்களை பிளே செய்யலாம்

iPad திரையில், ஓர் அமைப்பு ஆன் செய்யப்படுவதைப் போன்று திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

Apple சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் ஆக்சஸரிகளைக் கட்டுப்படுத்துதல்

iPad மற்றும் பிற Apple சாதனங்களை உங்கள் குரலைப் பயன்படுத்தியே கட்டுப்படுத்தலாம். ஹோம் செயலியில் நீங்கள் அமைத்த ஸ்மார்ட் ஹோம் ஆக்சஸரிகளையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

Siri மூலம் Apple சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் ஆக்சஸரிகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம்

iPad திரையில், திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் பிற பாதைகளில் பயண வழிகள்

Siri இடம் கோருவதன் மூலம் நீங்கள் பயண வழிகளைப் பெறலாம், போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவிக்கலாம், உங்கள் கணக்கிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) பகிரலாம், அருகிலுள்ள இடங்களைக் கண்டறியலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

வழிகளைப் பெற, Siriஐப் பயன்படுத்துதல்

iPad திரையில், அலாரம் ஆன் செய்யப்படுவதைப் போன்று திரையின் மேல்பகுதியில் Siriஇன் பதில் காட்டப்பட்டுள்ளது.

செயலிகளுடன் Siriஐப் பயன்படுத்துதல்

உங்கள் அன்றாடப் பணிகளை முடிக்க உதவும் வகையில் செயலிகளில் செயல்களை நிறைவுசெய்ய Siriஐக் கேளுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் இரவு உணவைத் தயார் செய்துகொண்டிருக்கும்போது, மளிகைப் பொருள் பட்டியலில் வாங்க வேண்டியவற்றைச் சேர்க்கும்படி Siriஐக் கேளுங்கள்.

செயலிகளுடன் Siriஐப் பயன்படுத்துதல்

iPadஇன் பூட்டுத் திரையில் கீபோர்டு காட்டப்பட்டுள்ளது. கீபோர்டின் மேலே Siri கோரிக்கை காட்டப்பட்டுள்ளது.

Apple Intelligence மூலம் பலவற்றைச் செய்தல்

Apple Intelligence* மூலம், Siriக்கான கோரிக்கைகளை நீங்கள் டைப் செய்யலாம், Apple தயாரிப்புகள் பற்றிய கேள்விகளுக்குப் பதில்களைப் பெறலாம், ChatGPT நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

Siri உடன் Apple Intelligenceஐப் பயன்படுத்துதல்

Siri உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்னென்ன தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். மேலும் அறிய, Siri, டிக்டேஷன் & தனியுரிமை இணையதளத்தைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வேஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானியம், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைப்பதில்லை. மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.