இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் குறிப்புகளைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பணியாற்றுதல்

குறிப்புகள் செயலியில், குறிப்பின் நகலை நண்பருக்கு அனுப்பலாம். iCloudஇல் உள்ள குறிப்பில் அல்லது குறிப்புகளின் கோப்புறையில் நிகழ்நேரத்தில் கூட்டுப்பணியாற்ற பிறரை நீங்கள் அழைக்கலாம், மேலும் அனைவருக்கும் சமீபத்திய மாற்றங்கள் காட்டப்படும்.

புகைப்படக் குறிப்புகளைக் காட்டும் திரை. மெசேஜஸ், Mail போன்ற பகிர்வு விருப்பங்களைக் காட்டும் வலதுபுறத்தில் உள்ள ஓவர்லே.

குறிப்பின் நகலைப் பகிர்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் பகிர விரும்பும் குறிப்பைத் திறக்கவும்.

  3. “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, “கூட்டுப்பணி” என்பதைத் தட்டி, “நகலை அனுப்பு” என்பதைத் தட்டி, குறிப்பை எப்படி அனுப்ப வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும்.

iCloudஐப் பயன்படுத்தி குறிப்பு அல்லது குறிப்புகளின் கோப்புறையில் கூட்டுப்பணியாற்றுதல்

மற்றவர்களுடன் கூட்டுப்பணியாற்ற, iCloudஇல் குறிப்பு அல்லது குறிப்புகளின் கோப்புறையைப் பகிரலாம். பங்கேற்பாளர்களுக்கான அனுமதிகளை நீங்கள் அமைக்கலாம் (குறிப்புகளைத் திருத்த அனுமதிப்பது, இணைப்புகளைச் சேர்ப்பது, துணைக்கோப்புறைகளை உருவாக்குவது போன்றவை), இதன் மூலம் பங்கேற்பாளர்கள் அனைவராலும் நிகழ்நேரத்தில் அனைவரின் மாற்றங்களையும் பார்க்க முடியும். பங்கேற்பாளர்கள் அவர்களுடைய Apple கணக்கில் உள்நுழைந்திருப்பதுடன் iCloud அமைப்புகளில் குறிப்புகள் செயலியையும் ஆன் செய்திருக்க வேண்டும்.

குறிப்பு: லாக் செய்யப்பட்ட குறிப்பிலோ அல்லது லாக் செய்யப்பட்ட குறிப்புகளுடன் கூடிய கோப்புறையிலோ நீங்கள் கூட்டுப்பணியாற்ற முடியாது.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குறிப்பைப் பகிர: நீங்கள் பகிர விரும்பும் குறிப்பைத் திறந்து, “பகிர்” பட்டன்-ஐத் தட்டி, "கூட்டுப்பணி" என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • கோப்புறையைப் பகிர: நீங்கள் பகிர விரும்பும் கோப்புறையைத் திறந்து, “பகிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. அணுகலையும் அனுமதிகளையும் மாற்ற, “அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே திருத்த முடியும்” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை அமைக்கவும்:

    • யார் அணுகலாம்: “அழைக்கப்பட்டவர்கள் மட்டும்” அல்லது “இணைப்பைக் கொண்ட எவரும்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • அனுமதிகள்: “மாற்றங்களைச் செய்ய முடியும்” அல்லது “பார்க்க மட்டும்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • மற்றவர்களை அழைக்க அனுமதிக்க: புதியவர்களை அழைக்க பங்கேற்பாளர்களை அனுமதித்தல் (மாற்றங்களைச் செய்ய அவர்களுக்கு அனுமதி இருந்தால் மட்டுமே கிடைக்கும்) என்பதை ஆன் செய்யவும்.

  4. உங்கள் அழைப்பை அனுப்ப மெசேஜஸ் அல்லது Mailஐத் தேர்வுசெய்யவும். (கூட்டுப்பணியாற்றும் அம்சத்தை AirDrop ஆதரிப்பதில்லை.)

    நீங்கள் மெசேஜஸ் செயலியில் அழைப்பை அனுப்பினால், பகிர்ந்த குறிப்பில் யாரேனும் மாற்றங்களைச் செய்யும்போது மெசேஜஸ் உரையாடலில் செயல்பாட்டுப் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள். பகிர்ந்த குறிப்பிற்குச் செல்ல புதுப்பிப்புகளைத் தட்டவும்.

குறிப்புகள் செயலியில் கூட்டுப்பணியாற்ற முடியாவிட்டால் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பில் செயல்பாட்டைப் பார்த்தல்

குறிப்புகள் பட்டியலில், குறிப்புத் தலைப்பின் இடதுபுறத்தில் உள்ள ஆரஞ்சு நிறப் புள்ளி, நீங்கள் கடைசியாகப் பார்த்ததில் இருந்து குறிப்பு மாறியிருப்பதைக் குறிக்கிறது.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. குறிப்பைத் திறந்து குறிப்பின் வலதுபுறமாக ஸ்வைப் செய்து அல்லது செயல்பாட்டு கார்டில் மேல்நோக்கி ஸ்வைப் செய்து யார் எப்போது மாற்றங்களைச் செய்தார்கள் என்பதைப் பார்க்கவும்.

  3. செயல்பாடு காட்டப்படும் விதத்தைச் சரிசெய்ய, “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

    • புதுப்பிப்புகளைக் காட்டு: குறிப்பை நீங்கள் கடைசியாகத் திறந்ததில் இருந்து செய்யப்பட்ட மாற்றங்களைக் காட்டும்.

    • அனைத்துச் செயல்பாடுகளையும் காட்டு: குறிப்பில் உள்ள அனைத்துச் செயல்பாடுகளையும் காட்டும்.

    • ஹைலைட்ஸைக் காட்டு: ஒவ்வொரு பங்கேற்பாளரின் பெயரையும் அவர் செய்த மாற்றங்கள் மற்றும் தேதிகளையும் காட்டும்.

உதவிக்குறிப்பு: பங்கேற்பாளரைக் குறிப்பிடவும், முக்கியமான புதுப்பிப்புகள் குறித்து அவருக்குத் தெரிவிக்கவும், அவர்களின் பெயரைத் தொடர்ந்து @ குறியீட்டை டைப் செய்யவும்.

கோப்புறையில் செயல்பாட்டைப் பார்த்தல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. கோப்புறையைத் தொட்டுப் பிடித்து “கோப்புறையின் செயல்பாட்டைக் காட்டு” என்பதைத் தட்டவும்.

பகிர்வு அமைப்புகளை மாற்றுதல்

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள குறிப்புகள் செயலிக்குச் செல்லவும்.

  2. பகிர்ந்த குறிப்பு அல்லது கோப்புறையின் உரிமையாளர் பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்வதன் மூலம் பகிர்வு அமைப்புகளை மாற்றலாம்:

    • பகிர்ந்த குறிப்பை நிர்வகித்தல்: “கூட்டுப்பணியாற்றுக” பட்டன்-ஐத் தட்டி “பகிர்ந்த குறிப்பை நிர்வகிக்கவும்” என்பதைத் தட்டவும்.

    • பகிர்ந்த கோப்புறையை நிர்வகித்தல்: “மேலும்” பட்டன்-ஐத் தட்டி “பகிர்ந்த கோப்புறையை நிர்வகியுங்கள்” என்பதைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யுங்கள்:

    • பங்கேற்பாளர்களை அகற்றுதல்: நீங்கள் அகற்ற விரும்பும் பங்கேற்பாளரைத் தட்டி “அணுகலை அகற்று” என்பதைத் தட்டவும்.

    • அணுகல் மற்றும் அனுமதி அமைப்புகளை மாற்றுதல்: அனைத்துப் பங்கேற்பாளர்களுக்குமான அமைப்புகளை மாற்ற, “பகிர்வு விருப்பங்கள்” என்பதைத் தட்டவும். ஒரு நபருக்கான அமைப்புகளை மாற்ற, அவரின் பெயரைத் தட்டவும்.

    • பகிர்வதை நிறுத்துதல்: இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், மற்ற பங்கேற்பாளர்களின் சாதனங்களில் இருந்து பகிரப்பட்ட குறிப்பு அல்லது கோப்புறைகள் நீக்கப்படும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.