இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad தரவுகளை அழித்தல்

உங்கள் iPadஇல் இருந்து உங்கள் தனிப்பட்ட தகவல்கள், உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளை (தனியுரிமை மற்றும் நெட்வொர்க் அமைப்புகள் போன்றவை) பாதுகாப்பாக அழிக்கலாம். உங்கள் iPad தரவை அழிக்கும்போது, அது ஆரம்பநிலை அமைப்புகளுக்கு மீட்டெடுக்கப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட உள்ளடக்கத்தை அழிக்காமல் iPad அமைப்புகளை மீட்டமைக்க விரும்பினால் iPad அமைப்புகளை அவற்றின் இயல்புநிலைக்கு மீட்டமைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

“இந்த iPad தரவுகளை அழி” திரை.

தொடங்கும் முன்

வேறொரு சாதனத்தில் உங்கள் தரவை பின்னர் மீட்டெடுக்கும் வகையில் உங்கள் iPadஐ பேக்-அப் செய்யலாம்.

அமைப்புகளைப் பயன்படுத்தி iPad தரவுகளை அழித்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “iPadஇலிருந்து இடமாற்றவும் அல்லது அதனை மீட்டமைக்கவும்” என்பதைத் தட்டவும்.

  3. “அனைத்து உள்ளடக்கத்தையும் அமைப்புகளையும் அழி” என்பதைத் தட்டவும்.

  4. கேட்கப்பட்டால், உங்கள் iPad பாஸ்கோடு அல்லது Apple கணக்கு பாஸ்வேர்டை உள்ளிடவும்.

  5. உறுதிப்படுத்த “தொடர்க” என்பதைத் தட்டவும்.

    உங்களிடம் eSIM இருந்தால், உங்கள் eSIMஐ அழிக்கவோ அல்லது அதை வைத்திருக்கவோ தேர்வு செய்யலாம். உங்கள் eSIMஐ அழித்துவிட்டால், உங்கள் மொபைல் சேவைத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உங்கள் நெட்வொர்க் வழங்குநரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

உங்கள் Mac அல்லது Windows சாதனத்தைப் பயன்படுத்தி iPad தரவுகளை அழித்தல்

  1. உங்கள் iPadஐ USB அல்லது USB-C கேபிள் மூலம் உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கவும்.

  2. உங்கள் Macஇல், Finder சாளரத்தைத் திறக்க “Finder” ஐகான்-ஐ கிளிக் செய்யவும் அல்லது உங்கள் Windows சாதனத்தில் Apple சாதனங்கள் செயலியைத் திறக்கவும்.

    உங்கள் Macஇல் macOS 10.14 அல்லது அதற்கு முந்தைய பதிப்பு பயன்படுத்தப்படுகிறது என்றால் அல்லது உங்கள் Windows சாதனத்தில் Apple சாதனங்கள் செயலி இல்லையென்றால், iTunesஐத் திறக்கவும்.

  3. Finder சைடுபாரில் (“இருப்பிடங்கள்” என்பதற்குக் கீழ்) உள்ள iPad ஐகானை கிளிக் செய்து, சாளரத்தின் மேற்பகுதியில் உள்ள “பொது அமைப்புகள்” என்பதை கிளிக் செய்யவும்.

  4. “iPadஐ மீட்டமை” என்பதை கிளிக் செய்து, உறுதிப்படுத்த “மீட்டமை” என்பதை கிளிக் செய்யவும்.

    குறிப்பு: “இடம் அறி” செயலியில் நீங்கள் உள்நுழைந்திருந்தால், “மீட்டெடு” என்பதை கிளிக் செய்வதற்கு முன் நீங்கள் அதில் இருந்து வெளியேற வேண்டும்.

சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்ய, உங்கள் iPhone, iPad அல்லது iPodஐ ஆரம்பநிலை அமைப்புகளுக்கு மீட்டமைத்தல் என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.