இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் “இடம் அறி” செயலியில் AirTag அல்லது பிற ஐட்டத்தைக் கண்டறிதல்

உங்கள் Apple கணக்கில் பதிவுசெய்துள்ள AirTag அல்லது மூன்றாம் தரப்பு ஐட்டம் தொலைந்துபோனால் அவற்றைக் கண்டறிய “இடம் அறி” செயலியைப் பயன்படுத்தலாம்.

AirTag அல்லது மூன்றாம் தரப்பு ஐட்டத்தைப் பதிவுசெய்வது எப்படி என்று அறிக.

ஓர் ஐட்டத்தின் இருப்பிடத்தைக் கண்டறிதல்

திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, கண்டறிய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  • ஐட்டத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய முடிந்தால்: சாதனம் எங்கே இருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கும் வகையில் இது மேப்பில் காட்டப்படும். ஐட்டத்தின் பெயருக்குக் கீழே இருப்பிடமும் டைம்ஸ்டாம்ப்பும் காட்டப்படும். “இடம் அறி” நெட்வொர்க்குடன் இணைக்கப்படும்போது ஐட்டத்தின் இருப்பிடம் புதுப்பிக்கப்படும்.

  • இருப்பிடத்தைக் கண்டறிய முடியாவிட்டால்: அது கடைசியாக எங்கு, எப்போது இருந்தது என்பது காட்டப்படும். அறிவிப்புகளுக்குக் கீழே, “கண்டறியப்படும்போது தெரிவித்தல்” என்பதை ஆன் செய்யவும். மீண்டும் கண்டறியப்படும்போது உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

    முக்கியம்: “இடம் அறி” செயலிக்கு அறிவிப்புகளுக்கான அனுமதியை வழங்கியிருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். iPadஇல் அறிவிப்பு அமைப்புகளை மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

ஒலியை பிளே செய்தல்

ஐட்டம் அருகில் இருந்தால், அதைக் கண்டறிய உங்களுக்கு உதவும் வகையில் அதில் ஒலியை பிளே செய்யலாம்.

குறிப்பு: ஐட்டத்தில் ஒலியை பிளே செய்ய முடியாது எனில், “ஒலியை பிளே செய்” பட்டன் உங்களுக்குக் காட்டப்படாது.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, ஒலியை பிளே செய்ய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. “ஒலியை பிளே செய்” என்பதைத் தட்டவும்.

    பிளே செய்தல் தானாகவே முடிவடைவதற்கு முன்பாக அதை நிறுத்த, “ஒலியை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

ஐட்டத்தின் இருப்பிடத்திற்கான வழிகளைப் பெறுதல்

ஓர் ஐட்டத்தின் தற்போதைய இருப்பிடம் அல்லது கடைசி இருப்பிடத்திற்கான வழிகளை மேப்ஸ் செயலியில் நீங்கள் பெறலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள “இடம் அறி” செயலிக்குச் செல்லவும்.

  2. திரையின் கீழ் இடதுபுறத்தில் உள்ள “ஐட்டங்கள்” என்பதைத் தட்டி, இருப்பிடத்திற்கான வழிகளை அறிய விரும்பும் ஐட்டத்தைத் தட்டவும்.

  3. மேப்ஸைத் திறக்க “வழிகள்” என்பதைத் தட்டவும்.

வழிகளைப் பெறுதல் என்பதைப் பார்க்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.