இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல், Apple Intelligence மூலம் அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தைப் பெறுதல் மற்றும் இடையூறுகளைக் குறைத்தல்

Apple Intelligence* மொழியைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருப்பதால் உங்களுக்கு மிகவும் முக்கியமான தகவல்களைச் சுருக்கிக் காட்ட உதவும். அறிவிப்புகள் சுருக்கப்படும்போது அவற்றின் முக்கியமான விவரங்களை நீங்கள் பெறலாம். குறிப்பாக, குழு உரையாடல் செயலில் இருத்தல் போன்ற சூழலில் இது உங்களுக்கு உதவும். மற்ற அறிவிப்புகளை விட எந்தெந்த அறிவிப்புகளெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் iPad தீர்மானிக்க முடியும். மேலும் பகல்நேரக் காப்பகத்தில் இருந்து முன்கூட்டியே பிக்-அப் செய்தல் தொடர்பான மெசேஜ் போன்ற உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய அறிவிப்புகளை மட்டுமே “குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸ் உங்களுக்குக் காட்டும்.

குறிப்பு: Apple Intelligence அம்சம் அனைத்து iPad மாடல்களிலும் கிடைப்பதில்லை. அத்துடன் சில மொழிகள் மற்றும் வட்டாரங்களிலும் கிடைப்பதில்லை. ** கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய அம்சங்களை அணுக வேண்டுமெனில், நீங்கள் iPadOSஇன் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துவதையும் Apple Intelligence ஆன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.

அறிவிப்புச் சுருக்கவிவரங்களைப் பிரத்தியேகமாக்குதல்

நீண்ட அல்லது தொடர்ச்சியான அறிவிப்புகளை ஒரே பார்வையில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் சுருக்கவிவரத்தை iPad வழங்கும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “அறிவிப்புகளைச் சுருக்கு” என்பதைத் தட்டி, “அறிவிப்புகளைச் சுருக்கு” என்பதை ஆன் செய்து, “சுருக்கவிவரத்தை உருவாக்க அறிவிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்” என்பதைத் தட்டவும்.

  4. சுருக்கவிவரத்தைப் பெற விரும்பும் அறிவிப்புகளைத் தட்டி “தேர்ந்தெடுத்த அறிவிப்புகளின் சுருக்கவிவரத்தை உருவாக்கு” என்பதைத் தட்டவும்.

எந்தெந்த அறிவிப்புகளுக்குச் சுருக்கவிவரத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை மாற்ற, செயலிக்கு அடுத்து உள்ள பட்டனைத் தட்டவும்.

அறிவிப்புச் சுருக்கவிவரங்களை ஆன் அல்லது ஆஃப் செய்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “அறிவிப்புகளைச் சுருக்கு” அம்சத்தைத் தட்டி, “அறிவிப்புகளைச் சுருக்கு” அம்சத்தை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.

“அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” அம்சத்தை ஆன் செய்தல்

மற்ற அறிவிப்புகளை விட எந்தெந்த அறிவிப்புகளெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை iPad தீர்மானிக்க முடியும். “அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” மேல்பகுதியில் காட்டப்படும் என்பதால் நீங்கள் தவறவிட்ட அறிவிப்புகளை உங்களால் பார்க்க முடியும்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும்.

  3. “அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” என்பதைத் தட்டி, “அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” என்பதை ஆன் செய்யவும்.

    “அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” என்பதை ஆஃப் செய்ய “அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளித்தல்” அம்சத்தை ஆஃப் செய்யவும்.

எந்தெந்த அறிவிப்புகளுக்கு முன்னுரிமையளிக்க விரும்புகிறீர்கள் என்பதை மாற்ற, செயலிக்கு அடுத்து உள்ள பட்டனைத் தட்டவும்.

பூட்டுத் திரையில் முன்னுரிமை அறிவிப்பைப் பெறும்போதும் நீங்கள் அமைப்புகளையும் மாற்றலாம். முன்னுரிமை அறிவிப்பு காட்டப்படும்போது, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • குறிப்பிட்ட செயலிக்கு முன்னுரிமை அறிவிப்புகளை ஆஃப் செய்தல்: இடதுபுறமாக ஸ்வைப் செய்து, விருப்பங்கள் என்பதைத் தட்டி “அனைத்து [செயலி] அறிவிப்புகளையும் ஆஃப் செய்" என்பதைத் தட்டவும்.

  • முன்னுரிமை அறிவிப்புகள் அனைத்தையும் ஆஃப் செய்தல்: இடதுபுறமாக ஸ்வைப் செய்து “விருப்பங்கள்” என்பதைத் தட்டி “முன்னுரிமை அளிப்பதை ஆஃப் செய்” என்பதைத் தட்டவும்.

“குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸைப் பயன்படுத்துதல்

உங்கள் அறிவிப்புகளின் உள்ளடக்கத்தைக் “குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸ் புரிந்துகொண்டு மிகவும் முக்கியமானவற்றைக் காட்டும், ஆனால் முக்கியத்துவம் குறைவானவற்றை அமைதியாக்கும்.

“குறுக்கீடுகளைக் குறைத்தல்” ஃபோகஸை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “ஃபோகஸ்” என்பதைத் தட்டவும்.

  3. மேல் வலதுபுறத்தில் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி “குறுக்கீடுகளைக் குறைத்தல்” என்பதைத் தட்டவும்.

  4. “ஃபோகஸைப் பிரத்தியேகமாக்கு” என்பதைத் தட்டி, “நபர்கள்” அல்லது “செயலிகள்” என்பதைத் தட்டவும்.

குறிப்பு: ஏதேனும் ஃபோகஸிற்கு “அறிவார்ந்த கண்டறிதல் & அமைதியாக்குதல்” அம்சத்தை ஆன் செய்தால், பிரத்தியேகமாக அனுமதிக்கப்பட்ட அல்லது அமைதியாக்கப்பட்ட அறிவிப்புகள் எப்போதுமே அனுமதிக்கப்படும் அல்லது அமைதியாக்கப்படும்.

*Apple Intelligence ஜெனரேட்டிவ் மாடல்களைப் பயன்படுத்துவதால் அது வழங்கும் தகவல்கள் மாறுபடலாம். முக்கியமான தகவல்களின் துல்லியத்தைச் சரிபார்க்கவும்.
**பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் Apple Intelligence கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், துருக்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜாப்பனீஸ், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.