இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் VoiceOver அமைப்புகளை மாற்றுதல்

ஆடியோ விருப்பங்கள், மொழி, குரல், பேச்சு விகிதம் மற்றும் மிகைச்சொற்கள் போன்ற VoiceOver அமைப்புகளைப் பிரத்தியேகமாக்கலாம்.

VoiceOver பேச்சு மற்றும் ஒலிகளின் ஒலியளவை சரிசெய்தல்

  • VoiceOver பேச்சு மற்றும் ஒலிகளின் ஒலியளவு, மற்ற அனைத்து iPad ஆடியோ ஆகியவை உட்பட, iPadஇன் ஒலியளவை அதிகரிக்க அல்லது குறைக்க, iPadஇல் உள்ள ஒலியளவு பட்டன்களை அழுத்தவும்.

  • VoiceOver பேசும்போது மற்ற iPad ஆடியோவைத் தற்காலிகமாகக் குறைக்க, அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > ஆடியோ என்பதற்குச் சென்று, “ஆடியோ டக்கிங்” என்பதைத் தட்டி “பேசும்போது” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். டக்கிங் அளவு ஸ்லைடரை இழுத்து, VoiceOver பேசும்போது மற்ற iPad ஆடியோவில் (எ.கா., மீடியா, அழைப்புகள் போன்றவை) எந்தளவுக்கு ஒலியளவு குறைக்கப்பட வேண்டும் என்பதை அமைக்கலாம்.

  • மற்ற ஆடியோ விருப்பங்களை அமைக்க, அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > ஆடியோ என்பதற்குச் சென்று, பின்வருவன போன்ற விருப்பங்களை அமைக்க:

    • ஒலிகள்: ஒலி எஃபெக்ட்டுகளை மாற்றலாம், அவற்றின் முன்னோட்டங்களைக் கேட்கலாம்.

    • HDMIக்கு அனுப்ப: இசைக்கருவியின் ஆம்ப்ளிஃபயர் அல்லது DJ மிக்சர் போன்ற வெளிப்புறமாக இணைக்கப்பட்ட சாதனங்களுக்கு ஆடியோவை ரூட் செய்யும்.

VoiceOver மொழியை அமைத்தல்

  • முதன்மை மொழியை மாற்ற: iPadக்கு நீங்கள் தேர்வுசெய்துள்ள மொழியையே VoiceOver பயன்படுத்தும். வேறொரு முதன்மை மொழியைத் தேர்வுசெய்ய, அமைப்புகள்  >பொது அமைப்புகள் > மொழி & வட்டாரம் என்பதற்குச் சென்று, “மொழியைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  • ரோட்டரைப் பயன்படுத்தி மொழிகளை மாற்ற: வேறொரு மொழிக்கான குரலுக்கு மாற ரோட்டரைப் பயன்படுத்தவும்.

  • மொழிகளைத் தானாக மாற்ற: VoiceOver மூலம் மற்றொரு மொழியில் உள்ள உரையைக் கண்டறிந்து, அந்த மொழிக்கான குரலுக்குத் தானாகவே மாறலாம். அமைப்புகள் > அணுகல்தன்மை > VoiceOver > பேச்சு என்பதற்குச் சென்று, “மொழிகளைக் கண்டறி” என்பதை ஆன் செய்யவும்.

குறிப்பு: VoiceOver அனைத்து மொழிகளிலும் கிடைக்காது. VoiceOver மூலம் ஆதரிக்கப்பட்ட மொழிகள் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

பேசும் குரலை மாற்றுதல்

நீங்கள் VoiceOver பேசும் குரலை மாற்றலாம் அல்லது மற்றொரு குரலைச் சேர்க்கலாம் மற்றும் தேவைக்கேற்ப குரல்களுக்கு இடையே மாற ரோட்டரைப் பயன்படுத்தலாம்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் செல்லவும்.

  2. “பேச்சு” என்பதைத் தட்டி பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • முதன்மைக் குரலை மாற்ற: தற்போதைய முதன்மைக் குரலின் பெயரைத் தட்டி, “குரல்” என்பதைத் தட்டவும்.

    • மற்றொரு குரலைச் சேர்க்க: “ரோட்டார் குரலைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. குரலைத் தேர்வுசெய்யவும். மேம்படுத்தப்பட்ட குரலைத் தேர்வுசெய்ய, முதலில் “பதிவிறக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

பேசும் குரலைச் சரிசெய்தல்

அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • பேசும் வீதத்தை சரிசெய்ய: பேசும் வீதத்திற்கான ஸ்லைடரை இழுக்கவும்.

  • பிட்சைச் சரிசெய்ய: “பேச்சு” என்பதைத் தட்டி, குரலைத் தட்டவும், பிறகு ஸ்லைடரை இழுக்கவும். ஒரு குழுவின் முதல் ஐட்டத்தைப் பேசும்போது (பட்டியல் அல்லது அட்டவணை போன்றது) உயர்ந்த பிட்சையும், ஒரு குழுவின் கடைசி ஐட்டத்தைப் பேசும்போது குறைந்த பிட்சையும், VoiceOver பயன்படுத்த, “பிட்ச் மாற்றம்” அம்சத்தை நீங்கள் ஆன் செய்யலாம்.

  • குறிப்பிட்ட சில வார்த்தைகளின் உச்சரிப்பைக் குறிப்பிட: “பேச்சு” > “உச்சரிப்புகள்” என்பதைத் தட்டி, “சேர்” பட்டன்-ஐத் தட்டி, ஒரு சொற்றொடரை உள்ளிடவும், பிறகு சொற்றொடர் எப்படிப் பேசப்பட வேண்டும் என சொல்லவும் அல்லது உச்சரிக்கவும்.

    குறிப்பு: அமைப்புகள் > பொது அமைப்புகள் > கீபோர்டுகள் என்பதில் “டிக்டேஷனை இயக்கு” என்பதை ஆன் செய்தால் மட்டுமே உங்களால் டிக்டேட் செய்ய முடியும்.

VoiceOver உங்களுக்கு எவ்வளவு சொல்ல வேண்டும் என்பதை அமைத்தல்

அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > சொல்லும் விதம் என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • VoiceOver நிறுத்தற்குறியீட்டைப் பேசும் விதத்தை மாற்ற: “நிறுத்தற்குறியீடு” என்பதைத் தட்டி, குழுவைத் தேர்வுசெய்யவும். நீங்கள் புதிய குழுக்களையும் உருவாக்கலாம், உதாரணத்திற்கு, “[” என்பது “இடது பிராக்கெட்” என்று சொல்லப்படும் வகையிலான ஒரு புரோகிராமிங் குழுவை நீங்கள் உருவாக்கலாம்.

  • அறிவிப்புகளை VoiceOver எப்படிப் படிக்கிறது என்பதை மாற்ற: “சிஸ்டம் அறிவிப்புகள்” என்பதைத் தட்டவும். iPad பூட்டப்பட்டிருந்தாலும் கூட, நீங்கள் பெறும் மெசேஜ்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை VoiceOver அம்சம் இயல்பாகவே படித்துக் காட்டும். நீங்கள் iPadஐ அன்லாக் செய்யும்போது நீங்கள் திறந்து பார்க்காத அறிவிப்புகள் மீண்டும் காட்டப்படும்.

  • கூடுதல் விருப்பங்களைத் தேர்வுசெய்ய: குறிப்புகள், பெரிய எழுத்துகள், உட்பொதிக்கப்பட்ட இணைப்புகள் மற்றும் பல குறித்து பேச VoiceOverஐப் பயன்படுத்தவும். VoiceOverஆல் ரோட்டார் செயல்களை உறுதிசெய்யவும் ஃபிளாஷ்லைட் ஆன் செய்யப்படும்போதும் உங்களுக்குத் தெரிவிக்கவும் முடியும்.

செயல்பாட்டிற்காக, VoiceOver அமைப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்

புரோகிராமிங் போன்ற செயல்பாட்டிற்காக, VoiceOver அமைப்புகளின் குழுவை நீங்கள் பிரத்தியேகமாக்கலாம். பிறகு, சில செயலிகளைத் திறக்கும்போதோ ரோட்டரைச் சரிசெய்யும்போதோ, பேச்சு, ஆடியோ, மிகைச்சொற்கள், டைப்பிங், வழிசெலுத்தல் மற்றும் பிரெயில் ஆகியவற்றுக்கான அமைப்புகள் தானாகப் பயன்படுத்தப்படும்.

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > செயல்பாடுகள் என்பதற்குச் செல்லவும்.

  2. ஏற்கனவே உள்ள செயல்பாட்டைத் தேர்வுசெய்யவும் அல்லது “செயல்பாட்டைச் சேர்” என்பதைத் தட்டவும்.

  3. அமைப்புகளைச் சரிசெய்து, “தன்னியக்க மாற்றம்” எனபதற்குக் கீழே, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • குறிப்பிட்ட செயலிகளுக்கு அமைப்புகளைப் பயன்படுத்த: “செயலிகள்” என்பதைத் தட்டி, இந்த அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    • குறிப்பிட்ட சூழல்களுக்கு அமைப்புகளைப் பயன்படுத்த: “சூழல்” என்பதைத் தட்டி, வார்த்தைச் செயலாக்கம், மெசேஜிங் அல்லது கான்சோல் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூழல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சமமான அல்லது குழுவாக்கப்பட்ட வழிசெலுத்தலைப் பயன்படுத்துதல்

அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > வழிச்செலுத்தல் ஸ்டைல் என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • சமம்: அடுத்த நகர்வையும் முந்தைய கட்டளைகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது திரையில் உள்ள ஒவ்வொரு ஐட்டத்தையும் VoiceOver தொடர்ச்சியாக அடுத்தடுத்து நகர்த்தும்.

  • குழுவாக்கப்பட்டது: திரையில் உள்ள ஐட்டங்களின் குழுக்கள் மற்றும் ஐட்டங்களை VoiceOver நகர்த்தும். குழுவிற்கு நகர்த்த, இரு விரல்களால் வலதுபுறம் ஸ்வைப் செய்யவும். குழுவிலிருந்து நகர்த்த, இரு விரல்களால் இடதுபுறம் ஸ்வைப் செய்யவும்.

திரையைத் தொடுவதற்கும் ஐட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் இடையில் தாமதத்தை அமைத்தல்

நீங்கள் திரையைத் தொடுவதற்கும், நீங்கள் தொட்டதை VoiceOver தேர்ந்தெடுப்பதற்கும் இடையில் உள்ள கால அளவை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த மதிப்பை அதிகரிப்பது தற்செயலான தொடுதல்களைக் குறைக்க உதவும்.

அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் சென்று, “தேர்ந்தெடுப்பதற்கு முன்பான தாமதம்” என்பதைத் தட்டி, தாமதத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ “அதிகரி" பட்டன் அல்லது “குறை” பட்டன்-ஐத் தட்டவும்.

VoiceOver காட்சிகளைச் சரிசெய்தல்

அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver என்பதற்குச் சென்று, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றை ஆன் செய்யவும்:

  • பெரிய கர்சர்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐட்டத்தைச் சுற்றியுள்ள அவுட்லைனைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால், நீங்கள் அவுட்லைனைப் பெரிதாக்கலாம், தடிமனாக்கலாம்.

  • தலைப்பு பேனல்: VoiceOver வாசிக்கும் வார்த்தைகள் திரையின் கீழ்ப்பகுதியில் காட்டப்படும்.

விரைவு அமைப்புகளைப் பயன்படுத்தி iPadஇல் VoiceOver அமைப்புகளை விரைவாக மாற்றுதல்

VoiceOver ஆன் செய்யப்படும்போது, இரண்டு விரல்களால் நான்கு முறை தட்டுவதன் மூலம் விரைவு அமைப்புகளை அணுகலாம்.

“விரைவு அமைப்புகள்” அம்சத்தைப் பிரத்தியேமாக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:

  1. அமைப்புகள்  > அணுகல்தன்மை > VoiceOver > “விரைவு அமைப்புகள்” என்பதற்குச் செல்லவும்.

  2. அமைப்புகளை மறுவரிசைப்படுத்த, நீங்கள் விரும்பும் அமைப்புகளைத் தேர்வுசெய்யவும் அல்லது "மறுவரிசைப்படுத்து" பட்டன்-ஐ இழுக்கவும்.

VoiceOver அமைப்புகளை மீட்டமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி VoiceOver என்பதைத் தட்டவும்.

  3. “VoiceOver அமைப்புகளை மீட்டமை” என்பதைத் தட்டவும். (நீங்கள் கீழே ஸ்க்ரால் செய்ய வேண்டியிருக்கலாம்.)

VoiceOver கட்டளைகளை மீட்டமைத்தல்

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, “VoiceOver” என்பதைத் தட்டி, பிறகு “கட்டளைகள்” என்பதைத் தட்டவும்.

  3. “VoiceOver கட்டளைகளை மீட்டமை” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.