இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல், VoiceOver அம்சத்தின் மூலம் உங்கள் சுற்றுப்புறம் குறித்த நேரடி விளக்கங்களைப் பெறுதல்

நீங்கள் பார்வையற்றவராகவோ பார்வைக் குறைபாடு உள்ளவராகவோ இருந்தால், iPadஇல் உள்ள “VoiceOver அறிதல்” அம்சத்தைப் பயன்படுத்தி உங்கள் சுற்றுப்புறத்தை ஸ்கேன் செய்யலாம், கேமரா காட்சியில் கண்டறியப்படுபவற்றின் நேரலை விளக்கங்களைப் பெறலாம். அணுகல்தன்மைத் தகவல்களைச் செயலிகள் மற்றும் இணையப் பக்கங்கள் வழங்கவில்லை என்றாலும் திரையில் உள்ள படங்கள் மற்றும் இடைமுகக் கூறுகளின் விளக்கங்களை நீங்கள் பெறலாம்.

முக்கியம்: "VoiceOver அறிதல்" அம்சத்தை உங்களுக்குத் துன்பம் அல்லது விபத்து நேரக்கூடிய சூழல்கள், பேராபத்து நிகழக்கூடிய சூழ்நிலைகளிலோ திசைக்காட்டுதலிலோ மருத்துவச் சிக்கலுக்கான தீர்வைக் கண்டறிவதற்காகவோ பயன்படுத்தக்கூடாது.

உங்கள் சுற்றுப்புறத்தின் நேரடி விளக்கங்களைப் பெறுதல்

  1. VoiceOver ஆன் செய்யப்பட்டுள்ளபோது, “நேரடியாகக் கண்டறிதல்” அம்சத்தைத் தொடங்க திரையில் நான்கு விரல்களால் மூன்று முறை தட்டவும்.

  2. காட்சிகள், நபர்கள், கதவுகள், ஃபர்னிச்சர், உரை போன்று VoiceOver விவரிக்க விரும்பும் காட்சித் தகவல்களைத் தேர்வுசெய்யவும். திரையின் கீழ்ப்பகுதியில் ஒரு வகையைத் தேர்ந்தெடுத்து, அதை ஆன் அல்லது ஆஃப் செய்ய இருமுறை தட்டவும். “சுட்டிக்காட்டுவதை வாசித்தல்” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், உரையை உங்கள் விரலால் சுட்டிக்காட்டும்போது VoiceOver அதை உரக்க வாசிக்கும்.

    குறிப்பு: ஆதரிக்கப்படும் iPad மாடல்களில் மட்டுமே நபர்கள், கதவுகள் மற்றும் ஃபர்னிச்சரைக் கண்டறிவதற்கான அம்சம் கிடைக்கிறது.

  3. உங்களைச் சுற்றி இருப்பவற்றைப் பின்புற கேமரா கண்டறிவதற்கு ஏற்றவாறு iPadஐ வைக்கவும். கண்டறியப்படுவதை VoiceOver விவரிக்கும்.

    VoiceOver பேச்சை இடைநிறுத்தி, அடுத்து கண்டறியப்படும் ஐட்டத்திற்கு நகர்த்த, திரையில் இரண்டு விரல்களால் தட்டவும்.

  4. “நேரடியாகக் கண்டறிதல்” அம்சத்தை ஆஃப் செய்ய, திரையில் நான்கு விரல்களால் மூன்று முறை தட்டவும். இல்லையெனில் “நேரடியாகக் கண்டறிதல்” பயன்முறையில் VoiceOver கர்சர் தொடர்ந்து ஒரே இடைமுகக் கூறு உள்ள இடத்தில் இருந்தால், இரண்டு விரல்களால் ஸ்க்ரப் செய்யவும் (இரண்டு விரல்களை முன்னும் பின்னுமாக மூன்று முறை நகர்த்தி, “z” வடிவத்தை உருவாக்கவும்).

உதவிக்குறிப்பு: “நேரடியாகக் கண்டறிதல்” அம்சத்தை வேகமாகத் தொடங்குவதற்கும் நிறுத்துவதற்கும் நீங்கள் சுருக்கவழியை அமைக்கலாம். “நேரடியாகக் கண்டறிதல்” அம்சத்திற்கான சுருக்கவழிகளை அமைத்தல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

“பெரிதாக்கி” செயலியில் உள்ள “கண்டறிதல்” பயன்முறையைப் பயன்படுத்தியும் நீங்கள் காட்சிகள், நபர்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிந்து விவரிக்கலாம். “பெரிதாக்கி” செயலி மூலம் உங்களைச் சுற்றியுள்ள காட்சித் தகவல்களின் நேரலை விளக்கங்களைப் பெறுதல் என்ற பிரிவைப் பார்க்கவும்.

“நேரடியாகக் கண்டறிதல்” அமைப்புகளை மாற்ற, “பெரிதாக்கி” செயலிக்குச் சென்று, “அமைப்புகள்” பட்டன் என்பதைத் தட்டி “கண்டறிதல்” என்பதைத் தட்டவும். காட்சிகள், நபர்கள், கதவுகள், ஃபர்னிச்சர், உரை அல்லது சுட்டிக்காட்டுவதை வாசித்தல் என்பதைத் தட்டவும்.

செயலிகளிலும் இணையத்திலும் உள்ள படங்களின் விளக்கங்களைப் பெறுதல்

செயலிகள் மற்றும் இணையப் பக்கங்கள் அணுகல்தன்மைத் தகவல்களை வழங்கவில்லை என்றாலும் அவற்றில் இருக்கும் படங்களிலுள்ள நபர்கள், பொருள்கள், உரை ஆகியவற்றின் விளக்கங்களை “VoiceOver அறிதல்” அம்சம் மூலம் நீங்கள் பெறலாம். உங்கள் விரலை நகர்த்தி, ஒரு புகைப்படத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு உங்கள் இருப்பிடத்தைக் கண்டறியலாம் அல்லது பட்டியலிடப்பட்ட ஐட்டங்களுக்கான வரிசையின் அடிப்படையில் ஊட்டச்சத்து லேபிள்கள் மற்றும் ரசீதுகளைப் பார்க்கலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, “VoiceOver” என்பதைத் தட்டி, “VoiceOver அறிதல்” என்பதைத் தட்டி, “பட விளக்கங்கள்” என்பதைத் தட்டி, பின்னர் பட விளக்கங்களை ஆன் செய்யவும்.

  3. படங்களில் உள்ள உரைக்கான விளக்கங்களைப் பெற, “உரையறிதல்” என்பதை ஆன் செய்யவும்.

  4. ஃபோட்டோஸ் அல்லது Safari போன்ற செயலிக்குச் சென்று ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. மேலும் விருப்பங்களைக் கேட்பதற்கு மேல் நோக்கி ஸ்வைப் செய்யவும், பின்னர் “படத்தைத் தேடுங்கள்” எனக் கேட்கும்போது இருமுறை தட்டவும்.

  6. உங்கள் விரலைப் படத்தில் எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி, அந்தப் படத்தில் ஒவ்வொரு பொருளும் இருக்கக்கூடிய இடத்தைக் கண்டறியவும்.

    குறிப்பு: பட விளக்கங்கள் சில மொழிகளில் கிடைப்பதில்லை. கூடுதல் தகவல்களுக்கு iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

ஃபோட்டோஸில் உள்ள படங்களுக்குப் பிரத்தியேக விளக்கங்களைச் சேர்த்தல்

  1. iPadஇல் ஃபோட்டோஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. பிரத்தியேக விளக்கத்தைச் சேர்க்க விரும்பும் படத்தை இருமுறை தட்டவும்.

  3. “திருத்து” பட்டன்-ஐ இருமுறை தட்டிய பிறகு, “மார்க்-அப்” பட்டன்-ஐ இருமுறை தட்டவும்.

  4. “சேர்” பட்டன்-ஐ இருமுறை தட்டி, “படத்தின் விளக்கம்” என்பதை இருமுறை தட்டவும்.

  5. பட விளக்கத்தை உள்ளிடவும்.

  6. “முடிந்தது” பட்டன்-ஐ இருமுறை தட்டி, பிறகு மீண்டும் “இரட்டை” பட்டன்-ஐ இருமுறை தட்டவும்.

ஃபோட்டோஸ் செயலியில் உள்ள ஒரு புகைப்படத்திற்குப் பிரத்தியேக விளக்கத்தைச் சேர்த்த பிறகு, புகைப்படத் தேர்வியில் அந்தப் புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கும்போதும் அதை இருமுறை தட்டும்போதும் அதன் விளக்கம் வாசித்துக் காட்டப்படும்.

இடைமுகக் கூறுகளின் விளக்கங்களைப் பெறுதல்

செயலிகள் மற்றும் இணையப் பக்கங்கள் அணுகல்தன்மைத் தகவல்களை வழங்கவில்லை என்றாலும் அவற்றில் இருக்கும் படங்களிலுள்ள இடைமுகக் கூறுகளின் விளக்கங்களை “VoiceOver அறிதல்” அம்சம் மூலம் நீங்கள் பெறலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “அணுகல்தன்மை” என்பதைத் தட்டி, “VoiceOver” என்பதைத் தட்டி, “VoiceOver அறிதல்” என்பதைத் தட்டி, “திரையில் உள்ளவற்றை அறிதல்” என்பதைத் தட்டி, பின்னர் திரையில் உள்ளவற்றை அறிதலை ஆன் செய்யவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.