இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள Mail செயலியில் மின்னஞ்சல்களைக் கொடியிடுதல் அல்லது தடுத்தல்

முக்கியமான மின்னஞ்சல்களை நீங்கள் கொடியிடலாம், “கொடியிட்டவை” மெயில்பாக்ஸ்களை உருவாக்கலாம், VIP தொடர்புகளின் மெசேஜ்களைக் கொடியிடலாம். குறிப்பிட்ட அனுப்புநர்களின் மெசேஜ்களைத் தடுக்கவும் செய்யலாம்.

மின்னஞ்சலைக் கொடியிடுதல்

முக்கியமான மின்னஞ்சலைப் பின்னர் எளிதாகக் கண்டறியும் வகையில் அதற்குக் கொடியிடலாம். நீங்கள் கொடியிடும் மெசேஜ் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும், அத்துடன் “கொடியிட்டவை” மெயில்பாக்ஸிலும் காட்டப்படும்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. பின்வரும் ஒன்றைச் செய்யவும்:

    • முதன்மை மெசேஜைக் கொடியிட: முதன்மை மெசேஜில் இடதுபக்கம் ஸ்வைப் செய்து “கொடியிடு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • ஓர் அனுப்புநரின் பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தையும் கொடியிடுதல்: பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மின்னஞ்சல் பட்டியலில் உள்ள ஒரு மின்னஞ்சலின் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “கொடியிடு” என்பதைத் தேர்வுசெய்யவும்.

    • பரிவர்த்தனைகள், அறிவிப்புகள் அல்லது விளம்பரங்கள் மின்னஞ்சல்களில் ஒரே ஒரு மின்னஞ்சலை மட்டும் கொடியிடுதல்: ஒரு மின்னஞ்சலைத் தட்டி அதை அனுப்புநரின் டைஜஸ்ட் காட்சியில் திறந்து, அந்த மின்னஞ்சல் மீது இடதுபுறமாக ஸ்வைப் செய்து, “மின்னஞ்சலைக் கொடியிடு” பட்டன்-ஐத் தட்டவும்.

    கொடியை மாற்ற அல்லது அகற்ற, மெசேஜைத் திறந்து, மின்னஞ்சலின் கீழ் வலது மூலையில் உள்ள “மேலும் செயல்கள்” பட்டன்-ஐத் தட்டி, “கொடியிடு” என்பதைத் தட்டி, வேறொரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது “கொடிநீக்கு” என்பதைத் தட்டவும்.

ஒரு மெசேஜில் சேர்க்கும் கொடிகள், அதே Apple கணக்கு மூலம் நீங்கள் உள்நுழைந்திருக்கும் உங்களின் அனைத்து Apple சாதனங்களிலும் உள்ள Mail செயலியில் இருக்கும் அந்த மெசேஜில் காட்டப்பட்டும்.

உதவிக்குறிப்பு: Mail டூல்பாரில் கொடியிடு பட்டனைச் சேர்த்து அதை எளிதாக அணுகலாம். Mail டூல்பாரைப் பிரத்தியேகமாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

ஒரு மின்னஞ்சல் திறந்து காட்டப்பட்டுள்ளது. கொடியைச் சேர்ப்பதற்கான அல்லது அகற்றுவதற்கான விருப்பங்களுடன் வலதுபுறத்தில் மெனு காட்டப்பட்டுள்ளது.

“கொடியிட்டவை” மெயில்பாக்ஸை உருவாக்குதல்

“கொடியிட்டவை” மெயில்பாக்ஸைச் சேர்த்து, கொடியிட்ட மின்னஞ்சல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாக அணுகலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. மேல் இடது மூலையில் உள்ள “சைடுபாரைக் காட்டு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. “திருத்து” என்பதைத் தட்டி, “கொடியிட்டவை” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் VIPகளிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களைக் கொடியிடுதல்

முக்கியமான நபர்களை உங்கள் VIP பட்டியலில் சேர்க்கலாம், அவர்களின் மின்னஞ்சல்கள் VIP கொடியுடனும் VIP மெயில்பாக்ஸிலும் காட்டப்படும். உங்கள் தொடர்புகளில் ஒருவரைச் சேர்த்தல் அல்லது அவர்களை VIPஆக மாற்றுதல் என்பதைப் பார்க்கவும்.

குறிப்பிட்ட அனுப்புநர்களிடமிருந்து வரும் மின்னஞ்சலைத் தடுத்தல்

ஒரு குறிப்பிட்ட அனுப்புநர் எதிர்காலத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதைத் தடுக்க, நீங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தடுக்கலாம்.

  1. iPadஇல் உள்ள Mail செயலிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் தடுக்க விரும்பும் அனுப்புநரின் மெசேஜைத் தட்டவும்.

  3. அவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டி, “தொடர்பு கார்டைக் காட்டு” என்பதைத் தட்டி, “இந்தத் தொடர்பைத் தடு” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.