இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் வீடியோ கான்ஃபரன்ஸிங் அம்சங்களைப் பயன்படுத்துதல்

FaceTime செயலியில் அல்லது மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலியில் வீடியோ அழைப்பின்போது முழுத்திரை வீடியோ எஃபெக்ட்களைப் பயன்படுத்தலாம், மேலும் கேமரா ஃப்ரேமை 3D எஃபெக்ட்களால் நிரப்பும் கை சைகைகள் மூலம் உணர்வு வெளிப்பாடுகளைச் சேர்க்கலாம்.

FaceTimeஇல் வீடியோ எஃபெக்ட்களைப் பயன்படுத்துதல்

  1. FaceTime செயலியில் வீடியோ அழைப்பின்போது, உங்கள் டைலைத் தட்டவும்.

  2. பின்வரும் ஒன்றைத் தேர்வுசெய்யவும்:

மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளில் வீடியோ எஃபெக்ட்களைப் பயன்படுத்த, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து, செயலியைத் தட்டி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃபெக்ட்களைத் தட்டவும்.

குறிப்பு: மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளில் Memoji கிடைக்காது.

போர்ட்ரெய்ட் பயன்முறைக்கான மங்கலின் அளவு அல்லது ஸ்டூடியோ லைட்டின் ஒளி அளவைச் சரிசெய்ய, கட்டுப்பாட்டு மையத்தைத் திறந்து FaceTime (அல்லது மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலியின் பெயரை) என்பதைத் தட்டவும். “போர்ட்ரெய்ட்” அல்லது “ஸ்டூடியோ லைட்” என்பதைத் தட்டி ஸ்லைடரைச் சரிசெய்யவும்.

வீடியோ அழைப்பில் உணர்வு வெளிப்பாடுகளைச் சேர்த்தல்

FaceTime செயலியில் (மற்றும் மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகள்) உள்ள எளிய கை சைகைகள் மூலம், இதயங்கள், பலூன்கள், வானவேடிக்கைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 3D ஆக்யுமென்டெட் ரியாலிட்டி எஃபெக்ட்களால் கேமரா ஃப்ரேமை வேடிக்கையானதாக மாற்றக்கூடிய உணர்வு வெளிப்பாடுகளைச் சேர்க்கலாம்.

குறிப்பு: கைச் சைகைகளைப் பயன்படுத்த, ஆதரிக்கப்படும் மாடல்களில் FaceTime அழைப்பின் போது உங்கள் டைலைத் தட்டவும் (அல்லது மூன்றாம் தரப்பு வீடியோ கான்ஃபரன்சிங் செயலியில் வீடியோ அழைப்பில் இருக்கும்போது கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்கவும்). சைகைகளைப் பயன்படுத்தும்போது, எஃபெக்ட்டைச் செயல்படுத்த உங்கள் கைகளை முகத்திலிருந்து விலக்கி வைத்து, ஒன்று அல்லது இரண்டு விநாடி வரை அப்படியே இருக்கவும். FaceTimeஇல், அழைப்பின்போது உங்கள் டைலைத் தொட்டுப் பிடித்து, அதில் காட்டப்படும் ஐகான்களைத் தட்டுவதன் மூலமும் ரியாக்‌ஷன்களைச் சேர்க்கலாம்.

உணர்வு வெளிப்பாடு

சைகை

ஐகான்

இதயங்கள்

இதயங்கள் சைகை
“இதயங்கள்” பட்டன்

தம்ப்ஸ்-அப்

தம்ப்ஸ்-அப் சைகை
தம்ப்ஸ்-அப் பட்டன்

தம்ப்ஸ்-டவுன்

தம்ப்ஸ்-டவுன் சைகை
தம்ப்ஸ்-டவுன் பட்டன்

பலூன்கள்

பலூன்கள் சைகை
“பலூன்கள்” பட்டன்

மழை

மழைக்கான சைகை
மழை பட்டன்

கன்ஃபெட்டி

கன்ஃபெட்டி சைகை
“கன்ஃபெட்டி” பட்டன்

லேசர் பர்ஸ்ட்

லேசர் பர்ஸ்ட் சைகை
“லேசர்கள்” பட்டன்

வாணவேடிக்கைகள்

வாணவேடிக்கைகள் சைகை
வாணவேடிக்கைகள் பட்டன்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.