iPadஇல் வழிகளைப் பெற, Siriஐப் பயன்படுத்துதல்

Siri இடம் கோருவதன் மூலம் நீங்கள் பயண வழிகளைப் பெறலாம், போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவிக்கலாம், உங்கள் கணக்கிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) பகிரலாம், அருகிலுள்ள இடங்களைக் கண்டறியலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம். இருப்பிடச் சேவைகள் ஆன் செய்யப்பட்டிருக்கும்போது, இருப்பிடம் சார்ந்த தகவல்களையும் (எ.கா. குறிப்பிட்ட இடத்தில் இருந்து வெளியேறும்போது உங்களுக்கு நினைவூட்டுதல்) Siri வழங்கும்.

பயண வழிகளைப் பெறுதல்

வழிகளைப் பெறும்போது Siriஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் பாதையில் கவனத்துடன் செல்லலாம். சொல்லப்படும் படிப்படியான வழிகளுக்கான அறிவிப்புகளைக் கேட்பதன் மூலம் iPadஐப் பார்க்காமலே டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடந்து செல்லுதல் ஆகியவற்றுக்கான வழிகளை நீங்கள் பின்பற்றலாம்.

Siri: iPadஇல், Siriஐக் கேளுங்கள் அம்சத்தைப் பயன்படுத்தி இதுபோன்று எதையேனும் சொல்லவும்: “Give me directions home,” இல்லையெனில் நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகளைக் கீழே பார்க்கவும்.

டிரைவிங் வழிகளைப் பெறுதல்

  • “Give me driving directions home”

நடந்து செல்வதற்கான வழிகளைப் பெறுதல்

  • “Give me walking directions home”

பொதுப் போக்குவரத்து வழிகளைப் பெறுதல்

  • “Give me transit directions to the Ferry Building”

சைக்கிளிங் வழிகளைப் பெறுதல்

  • “Give me cycling directions home”

உதவிக்குறிப்பு: Siriஐப் பயன்படுத்தும்போது அல்லது மேப்ஸ் செயலியில் தேடும்போது உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரிக்கான வழிகளைக் கேட்கலாம். உங்கள் வீடு, பணியிடம் அல்லது பள்ளி முகவரியை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.

Siriஐப் பயன்படுத்தி சாலையில் பயணித்தல்

நீங்கள் சாலையில் பயணிக்கும்போது, போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவிக்கலாம், குறிப்பிட்ட நாடுகள் அல்லது வட்டாரங்களில் நடந்த நிகழ்வுகளின் நிலையைத் தெரிவிக்கலாம், உங்கள் கணக்கிடப்பட்ட வருகை நேரத்தை (ETA) பகிரலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.

Siri: iPadஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

உங்கள் ETAஐப் பகிர்தல்

  • “Share my ETA”

போக்குவரத்து நிகழ்வுகள் குறித்துத் தெரிவித்தல்

  • “Report an accident”

  • “There’s something on the road”

  • “There’s a speed check here”

விபத்து அல்லது அபாயத்தின் நிலை குறித்துத் தெரிவித்தல்

  • “The hazard is gone”

  • “Clear the accident”

சேருமிடத்தை அடைவதற்கு முன்பே வழிகள் காட்டப்படுவதை நிறுத்துதல்

  • “Stop navigating”

அருகிலுள்ள பிரபலமான இடங்கள், உணவகங்கள் அல்லது சேவைகளைக் கண்டறிதல்

Siri: iPadஇல் Siriஐச் செயல்படுத்துங்கள், நீங்கள் செய்யக்கூடிய கோரிக்கைகளுக்கான யோசனைகள் கீழே காட்டப்படும்.

  • “Find coffee near me”

  • “Find a gas station”

  • “Find a charging station”

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.