இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் குடும்பப் பகிர்வுக் குழுவிலிருந்து வெளியேறுதல் அல்லது ஒரு உறுப்பினரை அகற்றுதல்

குடும்பப் பகிர்வுக் குழுவில், ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர்களை அகற்றலாம் அல்லது குழுவைக் கலைக்கலாம், மேலும் குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோரின் கட்டுப்பாடு கொண்ட பதின்ம வயதினர் அல்லது பிள்ளைகள் தவிர) தங்களை அகற்றிக்கொள்ளலாம்.

குடும்பப் பகிர்வு உறுப்பினர்களின் வகைகள் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

குடும்பக் குழுவிலிருந்து உறுப்பினரை அகற்றுதல்

குடும்பப் பகிர்வு குழுவின் ஒருங்கிணைப்பாளர் மற்ற உறுப்பினர்களை அகற்ற முடியும். ஒரு குடும்ப உறுப்பினர் அகற்றப்படும்போது, அவர்கள் பகிரப்பட்ட சந்தாக்களுக்கான அணுகலையும் பிற உறுப்பினர்களால் வாங்கப்பட்ட உள்ளடக்கத்தையும் உடனடியாக இழப்பார்கள்.

  1. அமைப்புகள் >குடும்பம் என்பதற்குச் செல்லவும்.

  2. [உறுப்பினரின் பெயர்] என்பதைத் தட்டி, பகிர்வுக் குழுவில் இருந்து “[உறுப்பினரின் பெயர்]-ஐ அகற்று” என்பதைத் தட்டவும்.

உங்கள் குடும்பப் பகிர்வு குழுவிலிருந்து பிள்ளைகளை அகற்ற முடியாது. இருப்பினும், அவர்களை வேறு குழுவிற்கு நகர்த்தலாம் அல்லது அவர்களின் Apple கணக்கை நீக்கலாம். குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தி பிள்ளையை மற்றொரு குழுவிற்கு நகர்த்துதல் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

நீங்கள் பதின்ம வயதினருக்கான ஸ்கிரீன் டைமை ஆன் செய்தால், குழுவிலிருந்து அவர்களை அகற்றுவதற்கு முன்பு ஸ்கிரீன் டைம் அமைப்புகளை ஆஃப் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினருக்கான ஸ்கிரீன் டைமை அமைத்தல் கட்டுரையைப் பார்க்கவும்.

குடும்பப் பகிர்வுக் குழுவிலிருந்து வெளியேறுதல்

குடும்பப் பகிர்வுக் குழுவிலிருந்து வெளியேறும்போது, உங்கள் வாங்குதல்களையும் சந்தாக்களையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வதை நிறுத்திவிட்டு, அவர்கள் பகிர்ந்த அனைத்து உள்ளடக்கத்திற்கான அணுகலையும் உடனடியாக இழப்பீர்கள்.

குறிப்பு: குடும்பப் பகிர்வுக் குழுவிலிருந்து ஒருங்கிணைப்பாளரால் வெளியேற முடியாது. நீங்கள் ஒருங்கிணைப்பாளரை மாற்ற விரும்பினால் குழுவைக் கலைத்து மற்றொரு வயது வந்தோரைப் புதிய குழுவை உருவாக்கச் செய்ய வேண்டும்.

  1. அமைப்புகள் >குடும்பம் என்பதற்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, “குடும்பப் பகிர்வைப் பயன்படுத்துவதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

குடும்பப் பகிர்வை நிறுத்துதல்

குடும்ப ஒருங்கிணைப்பாளர் குடும்பப் பகிர்வை ஆஃப் செய்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குழுவிலிருந்து அகற்றப்படுவார்கள். குடும்பப் பகிர்வு அம்சத்தை ஆஃப் செய்தால், பகிரப்பட்ட உள்ளடக்கம் மற்றும் சந்தாக்களுக்கான அணுகலை அனைத்து உறுப்பினர்களும் உடனடியாக இழக்க நேரிடும்.

குறிப்பு: ஒரு குழந்தை குடும்பப் பகிர்வுக் குழுவில் இருந்தால், குழுவைக் கலைப்பதற்கு முன்பு ஒருங்கிணைக்கப்பாளர் குழந்தையை மற்றொரு குழுவிற்கு நகர்த்த வேண்டும் அல்லது அவரின் Apple கணக்கை நீக்க வேண்டும். குடும்பப் பகிர்வைப் பயன்படுத்தி பிள்ளையை மற்றொரு குழுவிற்கு நகர்த்துதல் குறித்த Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.

  1. அமைப்புகள் >குடும்பம் என்பதற்குச் செல்லவும்.

  2. [உங்கள் பெயர்] என்பதைத் தட்டி, “குடும்பப் பகிர்வைப் பயன்படுத்துவதை நிறுத்து” என்பதைத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.