iPadஇல் அழைப்பில் இருக்கும்போது

iPadஇல் நீங்கள் ஃபோன் அழைப்பில் இருக்கும்போது, ஆடியோவை ஸ்பீக்கர் அல்லது Bluetooth® சாதனத்திற்கு மாற்றலாம்.

அழைப்பின்போது ஆடியோவைச் சரிசெய்தல்

ஒலியளவை மாற்ற, iPad பக்கவாட்டில் உள்ள ஒலியளவு பட்டன்களை அழுத்தவும். அல்லது அழைப்பு பேனரைக் கீழே ஸ்வைப் செய்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

  • ஒலிமுடக்குதல்: “ஒலிமுடக்கு” பட்டனைத் தட்டவும்.

  • அழைப்பை ஹோல்டு செய்ய: “ஒலி முடக்கு” பட்டனைத் தொட்டுப் பிடிக்கவும்.

  • ஹேண்ட்ஸ்:ப்ரீ பேச்சுக்கு: “ஆடியோ” பட்டனைத் தட்டி, ஆடியோ இலக்கைத் தேர்வுசெய்யவும்.

அழைப்பில் இருக்கும்போது மற்றொரு செயலியைப் பயன்படுத்துதல்

  1. முகப்புத் திரைக்குச் சென்று, செயலியைத் திறக்கவும்.

  2. அழைப்புக்குத் திரும்ப, திரையின் மேலே உள்ள பச்சை அழைப்பு இண்டிகேட்டரைத் தட்டவும்.

ஹோல்டில் இல்லாதபோது அறிவிப்பைப் பெறுதல்

ஓர் அழைப்பின்போது நீங்கள் ஹோல்டில் வைக்கப்பட்டால், நேரலை ஏஜென்ட் இணைப்பிற்கு வருவதை உங்களுக்கு அறிவிக்க ஹோல்டு அசிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்தலாம், இதனால் அழைப்பில் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.

குறிப்பு: iPad Pro 12.9-அங்குலம் (5ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை), iPad Pro 11-அங்குலம் (3ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை), iPad Air (4ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை), iPad (10ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை), iPad mini (6ஆம் தலைமுறை அல்லது அதற்குப் பிந்தையவை) ஆகியவற்றில் கிடைக்கும். சில நாடுகள் அல்லது வட்டாரங்களில் “ஹோல்டு அசிஸ்ட்” அம்சம் கிடைப்பதில்லை. iOS மற்றும் iPadOS அம்சங்களின் கிடைக்கும்தன்மை குறித்த இணையதளத்தைப் பார்க்கவும்.

  1. iPadஇல் உள்ள ஃபோன் செயலிக்குச் செல்லவும்.

  2. ஓர் அழைப்பில் உள்ளபோது அது ஹோல்டில் வைக்கப்பட்டிருந்தால், “மேலும்” பட்டன்-ஐத் தட்டி, “ஹோல்டு அசிஸ்ட்” என்பதைத் தட்டவும்.

    முக்கியம்: அழைப்பில் இருந்து வெளியேறுவதற்கு முன் உங்கள் ரிங் அமைப்புகளைச் சரிபார்த்துக்கொள்ளவும். iPhoneஇல் அமைதிப் பயன்முறை அல்லது “தொந்தரவு செய்யாதே” அம்சம் ஆன் செய்யப்பட்டிருந்தால், ஏஜென்ட் இணைப்பிற்கு வரும்போது உள்வரும் அழைப்பின் ஒலி உங்களுக்குக் கேட்காது. iPad ஒலிகளை மாற்றுதல் அல்லது ஆஃப் செய்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

  3. ஏஜென்ட் பேசத் தயாராக இருக்கும்போது ஹோல்டு அசிஸ்ட் உங்களுக்குத் தெரிவிக்கும் மற்றும் நீங்கள் தவறவிட்ட அழைப்பின் பகுதியை டிரான்ஸ்கிரைப் செய்யும். அழைப்பில் மீண்டும் சேர “அழைப்புக்குப் பதிலளி” பட்டன்-ஐத் தட்டவும்.

குறிப்பு: இசை ஹோல்டு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் ஃபோன் தானாகவே கண்டறிந்து, “ஹோல்டு அசிஸ்ட்” அம்சத்தைத் தொடங்குமாறு உங்களிடம் கேட்கும். அமைப்புகள் > செயலிகள் > ஃபோன் என்பதற்குச் சென்று “ஹோல்டு அசிஸ்ட் கண்டறிதல்” அம்சத்தை ஆன் செய்யவும்.

இரண்டாவது அழைப்புக்கு அதே லைனில் பதிலளித்தல்

நீங்கள் அழைப்பில் இருந்த, இரண்டாவது அழைப்பைப் பெற்றால், பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

  • அழைப்பைப் புறக்கணித்து அதை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்ப: “புறக்கணி” என்பதைத் தட்டவும்.

  • முதல் அழைப்பை முடித்து புதிய அழைப்புக்குப் பதிலளிக்க: GSM நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்போது, “துண்டி & ஏற்றுக்கொள்” என்பதைத் தட்டவும். CDMA நெட்வொர்க்கில், “வெளியேறு” என்பதைத் தட்டவும். இரண்டாம் அழைப்பு மீண்டும் ரிங் ஆகும்போது “ஏற்றுக்கொள்” என்பதைத் தட்டவும் அல்லது iPad லாக் செய்யப்பட்டிருந்தால் ஸ்லைடரை இழுக்கவும்.

  • முதல் அழைப்பை ஹோல்டு செய்து, புதிய அழைப்புக்குப் பதிலளிக்க: “ஹோல்டு செய் & ஏற்றுக்கொள்” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் அழைப்பை ஹோல்டில் வைத்திருக்கும்போது அழைப்புகளுக்கு இடையே மாற, “அழைப்புகளுக்கு இடையே மாற இடமாற்று” என்பதைத் தட்டவும் அல்லது இரு தரப்பினருடனும் ஒரே நேரத்தில் பேச “அழைப்புகளை ஒன்றிணை” என்பதைத் தட்டவும். கான்ஃபரன்ஸ் அல்லது மூன்று வழி அழைப்பைத் தொடங்குதல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

குறிப்பு: CDMA மூலம், இரண்டாவது அழைப்பு வெளிச்செல்வதாக இருந்தால் அழைப்புகளுக்கு இடையே மாற முடியாது, ஆனால் நீங்கள் அழைப்புகளை ஒன்றிணைக்கலாம். இரண்டாவது அழைப்பு உள்வருவதாக இருந்தால் உங்களால் அழைப்புகளை ஒன்றிணைக்க முடியாது. இரண்டாவது அழைப்பையோ ஒன்றிணைக்கப்பட்ட அழைப்பையோ நீங்கள் முடித்தால், இரண்டு அழைப்புகளும் முடிவடையும்.

நேரலை மொழிபெயர்ப்பு அம்சத்தைப் பயன்படுத்துதல்

Apple Intelligence* ஆன் செய்யப்பட்டிருந்தால், ஃபோன் அழைப்புகளுக்கான பேச்சு மொழிபெயர்ப்புகளைப் பெற அதைப் பயன்படுத்தலாம். மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை மொழிபெயர்த்தல் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

*Apple Intelligence அம்சம், பின்வரும் மொழிகளுக்கான ஆதரவுடன் பீட்டா பதிப்பில் கிடைக்கிறது: ஆங்கிலம், டேனிஷ், டச்சு, ஃபிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், நார்வீஜியன், போர்ச்சுகீஸ், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், டர்க்கிஷ், சீனம் (எளிமைப்படுத்தப்பட்டது), சீனம் (பாரம்பரியம்), ஜப்பானியம், கொரியன் மற்றும் வியட்நாமீஸ். குறிப்பிட்ட சில மொழிகள் அல்லது வட்டாரங்களில் சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம். மொழி மற்றும் அம்சத்தின் கிடைக்கும்தன்மை மற்றும் சிஸ்டம் தேவைகள் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள, Apple Intelligenceஐப் பெறுவது எப்படி? என்ற Apple உதவிக் கட்டுரையைப் பார்க்கவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.