இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇன் Safari உலாவியில் டிஜிட்டல் சான்றிதழ்கள் மற்றும் என்கிரிப்ட் செய்யப்பட்ட இணையதளங்கள்

“டிஜிட்டல் சான்றிதழ்” அல்லது “பொது குறியீட்டுச் சான்றிதழ்” என்றும் அழைக்கப்படும் சான்றிதழ், இணையத் தகவல்தொடர்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் ஒரு கோப்பாகும்.

VeriSign, Inc., RSA Security, Inc. போன்ற நம்பகமான நிறுவனங்களால் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் பேங்கிங் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட இணையதளத்திற்கு நீங்கள் செல்லும்போது, இணையதளத்தின் சான்றிதழ் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை Safari சரிபார்க்கும். அது சட்டப்பூர்வமானது இல்லை எனில், Safari உங்களை எச்சரிக்கும்.

ஒரு தளத்துடன் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களை என்கிரிப்ட் செய்ய, என்கிரிப்ட் செய்யப்பட்ட இணையதளமும் Safari செயலியும் இணைந்து செயல்படும். தளத்தின் பாதுகாப்புச் சான்றிதழில் என்க்ரிப்ஷனுக்குப் பயன்படுத்தப்படும் கீ இருக்கும். இது உங்கள் உள்நுழைவுத் தகவல், கிரெடிட் கார்டு எண்கள், முகவரிகள் மற்றும் பிற பாதுகாப்பான தரவைப் பாதுகாக்கும்.

தனிப்பட்ட சான்றிதழ் தேவைப்படும் இணையதளத்துடன் இணைக்க வேண்டியிருந்தால், அதை நிறுவுவதற்கான வழிமுறைகளும் ஒரு சான்றிதழும் உங்களுக்கு வழங்கப்படும். அது நிறுவப்பட்ட பிறகு, இணையதளத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட அணுகலைத் தானாகவே பெறுவீர்கள். உங்களால் அதை அணுக முடியவில்லை எனில், இணையதள நிர்வாகியைத் தொடர்புகொள்ளவும்.

முக்கியம்: HTTPS புரோட்டோகாலை இணையதளம் பயன்படுத்தவில்லை என்றாலோ, டிஜிட்டல் அடையாளச் சான்றிதழ் அல்லது என்கிரிப்ட் தகவல் அதில் இல்லை என்றாலோ, “பாதுகாப்பானது அல்ல” என்று தேடல் புலத்தில் காட்டப்படும். என்கிரிப்ட் செய்யப்படாத இணையதளத்தில் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களை உள்ளிட வேண்டாம். நீங்கள் பார்வையிடும் இணையதளம் அசல் இணையதளமாக இல்லாமல் போகலாம் என்பதால் நீங்கள் உள்ளிடும் தகவல்கள் திருடப்படுவதற்கான அபாயம் உள்ளது. அதற்குப் பதிலாக, நீங்கள் உள்நுழைந்த இணையப் பக்கத்திற்குச் சென்று, தளத்தின் வேறொரு பதிப்பிற்கான இணைப்பு (என்கிரிப்ட் செய்யப்பட்டது) உள்ளதா எனப் பார்க்கவும். எடுத்துக்காட்டாக, “எங்கள் பாதுகாப்பான தளத்தைப் பயன்படுத்துங்கள்.” இணைப்பு இருந்தால், நீங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பார்க்கவோ வழங்கவோ போவதில்லை என்றாலும் அதையே பயன்படுத்துங்கள்.

ஓர் இணையதளத்திற்கான உங்கள் இணைப்பு பாதுகாப்பானது என்பதை என்கிரிப்ஷன் உறுதிசெய்யும், ஆனால் அந்த இணையதளம் நம்பகமானது என்பதற்கு என்கிரிப்ஷன் உத்தரவாதம் எதையும் அளிக்காது. முகவரி சரியாக இருப்பதை எப்போதுமே Safari டூல்பாரில் உறுதிப்படுத்திக் கொள்ளவும். சில மோசடி இணையதளங்கள், அசல் இணையதளத்தின் முகவரியில் ஒன்றிரண்டு எழுத்துகளை மாற்றுவதன் மூலம் நம்பகமான இணையதளங்களைப் போன்று காட்டிக்கொள்ளும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.