இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் செயலிகளில் உள்ள தகவல்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல்

தொடர்புகள், ஃபோட்டோஸ், கேலண்டர் மற்றும் பிற செயலிகளில் உள்ள தகவல்களை மூன்றாம் தரப்புச் செயலிகள் அணுகலாமா என்பதை நீங்களே கட்டுப்படுத்துவீர்கள்.

செயலிகளில் உள்ள தகவல்களுக்கான அணுகலை மறுஆய்வு செய்தல் அல்லது மாற்றுதல்

ஒரு செயலி மற்றொரு செயலியில் இருந்து தகவலை முதல் முறையாகப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் விளக்கத்துடன் கோரிக்கையைப் பெறுவீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரே செயலியைப் பயன்படுத்தும் நண்பர்களைக் கண்டறிய உங்கள் தொடர்புகளுக்கான அணுகலை ஒரு மெசேஜிங் செயலி கோரலாம். அணுகலை நீங்கள் அனுமதித்த அல்லது மறுத்த பிறகு, நீங்கள் பின்னர் அணுகலை மாற்றலாம்.

  1. அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் செல்லவும்.

  2. கேலண்டர்கள், நினைவூட்டல்கள், மோஷன் மற்றும் ஃபிட்னஸ் போன்ற தகவல்களின் வகையைத் தட்டவும்.

பட்டியல் அணுகலைக் கோரிய செயலிகலைக் காட்டுகிறது. பட்டியலில் உள்ள எந்தவொரு செயலிக்கும் அணுகலை நீங்கள் ஆன் அல்லது ஆஃப் செய்யலாம்.

நீங்கள் செயலிகளுக்கு வழங்கும் அனுமதிகளை அவை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை மறுஆய்வு செய்தல்

அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு என்பதற்குச் சென்று “செயலித் தனியுரிமை அறிக்கை” என்பதைத் தட்டவும்.

செயலிகளுக்கு நீங்கள் வழங்கிய அனுமதிகளைச் செயலிகள் எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதைச் செயலித் தனியுரிமை அறிக்கை காட்டுகிறது, மேலும் அவற்றின் நெட்வொர்க் செயல்பாட்டையும் காட்டுகிறது.

அறிக்கையை ஆஃப் செய்து அதன் தரவுகளை நீக்க, அமைப்புகள்  > தனியுரிமை & பாதுகாப்பு > செயலித் தனியுரிமை அறிக்கை என்பதற்கு சென்று “செயலித் தனியுரிமை அறிக்கையை ஆஃப் செய்” என்பதைத் தட்டவும். அறிக்கையை மீண்டும் ஆன் செய்ய இந்த அமைப்புகளின் திரைக்குச் செல்லலாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.