இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உள்ள செயலி லைப்ரரியில் உங்கள் செயலிகளைக் கண்டறிந்து பயன்படுத்துதல்

பணிச் செயல்திறன் & நிதி, படைப்புத்திறன், தகவல் & வாசிப்பு போன்ற வகைப்பிரிவுகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள செயலிகள் “செயலி லைப்ரரி” பிரிவில் காட்டப்பட்டுள்ளன. நீங்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள் திரையின் மேற்புறத்திலும் அவற்றின் வகைகளில் முதல் நிலையிலும் இருக்கும் என்பதால் அவற்றை நீங்கள் எளிதாகக் கண்டறிந்து திறக்கலாம்.

வகைப்பிரிவின்படி (பொழுதுபோக்கு, பணிச் செயல்திறன் & நிதி மற்றும் பல) ஒழுங்கமைக்கப்பட்டுள்ள செயலிகள் iPadஇல் உள்ள “செயலி லைப்ரரி” பிரிவில் காட்டப்பட்டுள்ளன.

குறிப்பு: உங்கள் செயலிகளை நீங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து, செயலி லைப்ரரியில் உள்ள செயலிகள் வகைகளாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. நீங்கள் செயலி லைப்ரரியில் உள்ள செயலிகளை முகப்புத் திரையில் சேர்க்கலாம், ஆனால் அவற்றை செயலி லைப்ரரியில் உள்ள மற்றொரு வகைக்கு நகர்த்த முடியாது.

செயலி லைப்ரரியில் ஒரு செயலியைக் கண்டறிந்து திறத்தல்

  1. முகப்புத் திரைக்குச் சென்று உங்கள் முகப்புத் திரை பக்கங்கள் அனைத்தையும் இடது பக்கமாக ஸ்வைப் செய்து செயலி லைப்ரரிக்குச் செல்லவும்.

    திரையின் அடிப்பகுதியில் உள்ள Dockஇல் வலதுபுறத்தில் இருக்கும் “செயலி லைப்ரரி" பட்டன் பட்டனைத் தட்டியும் “செயலி லைப்ரரி” பிரிவை விரைவாகத் திறக்கலாம்.

  2. திரையின் மேலே உள்ள தேடல் புலத்தைத் தட்டி நீங்கள் தேடும் செயலியின் பெயரை உள்ளிடவும்.

    இல்லையெனில், அகரவரிசைப் பட்டியலைப் பார்க்க ஸ்க்ரால் செய்யவும்.

  3. ஒரு செயலியைத் திறக்க, அதைத் தட்டவும்.

செயலி லைப்ரரியில் உள்ள ஒரு வகையானது சிறிய செயலி ஐகான்களைக் கொண்டிருந்தால், அதைத் தட்டி அந்த வகையை விரிவுபடுத்தி அதில் உள்ள அனைத்துச் செயலிகளையும் பார்க்கலாம்.

முகப்புத் திரைப் பக்கங்களை மறைத்தல் அல்லது காட்டுதல்

அனைத்துச் செயலிகளையும் செயலி லைப்ரரியில் நீங்கள் கண்டறியலாம் என்பதால், செயலிகளுக்குப் பல முகப்புத் திரைப் பக்கங்கள் உங்களுக்குத் தேவைப்படாமல் போகலாம். நீங்கள் சில முகப்புத் திரைப் பக்கங்களை மறைக்கலாம், இது செயலி லைப்ரரியை உங்கள் முதல் முகப்புத் திரைப் பக்கத்திற்கு அருகில் கொண்டுவரும். (மறைக்கப்பட்ட பக்கங்களை மீண்டும் பார்க்க விரும்பினால், அவற்றைக் காட்டலாம்.)

  1. முகப்புத் திரைக்குச் சென்று செயலி ஐகான்கள் ஜிகிள் ஆகும் வரை முகப்புத் திரை வால்பேப்பரைத் தொட்டுப் பிடிக்கவும்.

  2. திரையின் அடிப்பகுதியில் உள்ள புள்ளிகளைத் தட்டவும்.

    உங்கள் முகப்புத் திரைப் பக்கங்களின் சிறுபடங்கள் அவற்றுக்குக் கீழே டிக்மார்க்குகளுடன் காட்டப்படும்.

  3. பக்கங்களை மறைப்பதற்கு டிக்மார்க்குகளை அகற்ற தட்டவும்.

    மறைக்கப்பட்ட பக்கங்களைக் காட்டுவதற்கு டிக்மார்க்குகளைச் சேர்க்க தட்டவும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

கூடுதல் முகப்புத் திரைப் பக்கங்கள் மறைக்கப்பட்டிருந்தால், ஒன்று அல்லது இரண்டு ஸ்வைப்களிலேயே முகப்புத் திரையின் முதல் பக்கத்திலிருந்து செயலி லைப்ரரிக்குச் செல்லலாம் (மீண்டும் திரும்பலாம்).

குறிப்பு: முகப்புத் திரைப் பக்கங்கள் மறைக்கப்படும்போது, App Storeஇல் இருந்து நீங்கள் பதிவிறக்கும் புதிய செயலிகள் முகப்புத் திரைக்கு பதிலாக செயலி லைப்ரரியில் சேர்க்கப்படக்கூடும்.

முகப்புத் திரைப் பக்கங்களை மீண்டும் வரிசைப்படுத்துதல்

உங்களிடம் பல முகப்புத் திரைப் பக்கங்கள் இருந்தால், நீங்கள் அவற்றின் வரிசையை மாற்றலாம். உதாரணமாக, ஒரு முகப்புத் திரைப் பக்கத்தில் உங்களுக்குப் பிடித்த செயலிகளைச் சேர்த்து, அதை உங்கள் முதல் முகப்புத் திரைப் பக்கமாக மாற்றலாம்.

  1. முகப்புத் திரைக்குச் சென்று செயலி ஐகான்கள் ஜிகிள் ஆகும் வரை முகப்புத் திரைப் பின்னணியைத் தொட்டுப் பிடிக்கவும்.

  2. திரையின் அடிப்பகுதியில் உள்ள புள்ளிகளைத் தட்டவும்.

    உங்கள் முகப்புத் திரைப் பக்கங்களின் சிறுபடங்கள் அவற்றுக்குக் கீழே டிக்மார்க்குகளுடன் காட்டப்படும்.

  3. ஒவ்வொரு முகப்புத் திரைப் பக்கத்தையும் நகர்த்த, அதைத் தொட்டுப் பிடித்து புதிய நிலைக்கு இழுக்கவும்.

  4. “முடிந்தது” என்பதைத் தட்டவும்.

புதிய செயலிகள் பதிவிறக்கப்படும் இடத்தை மாற்றுதல்

App Storeஇல் இருந்து புதிய செயலிகளைப் பதிவிறக்கும்போது, அவற்றை முகப்புத் திரை மற்றும் செயலி லைப்ரரியிலோ அல்லது செயலி லைப்ரரியில் மட்டுமோ சேர்க்கலாம்.

  1. அமைப்புகள்  > முகப்புத் திரை & செயலி லைப்ரரி என்பதற்குச் செல்லவும்.

  2. “முகப்புத் திரையில் சேர்” அல்லது “செயலி லைப்ரரியில் மட்டும்” என்பதைத் தேர்வுசெய்யவும்.

குறிப்பு: செயலி லைப்ரரியில் உள்ள செயலிகளில் செயலி அறிவிப்பு பேட்ஜ்கள் காட்டப்படுவதை அனுமதிக்க, “செயலி லைப்ரரியில் காட்டு” என்பதை ஆன் செய்யவும்.

செயலி லைப்ரரியில் இருந்து முகப்புத் திரைக்குச் செயலியை நகர்த்துதல்

ஒரு செயலியை முகப்புத் திரையில் இருந்து செயலி லைப்ரரிக்கு நீங்கள் நகர்த்தியிருந்தால், அதை முகப்புத் திரைக்கு மீண்டும் எளிதாக நகர்த்தலாம்.

  1. செயலி லைப்ரரிக்குச் செல்லவும்.

  2. செயலி ஐகான்கள் ஜிகிள் ஆகும் வரை செயலியைத் தொட்டுப் பிடித்து செயலியை முகப்புத் திரைக்கு நகர்த்தியதும் உங்கள் விரலை எடுக்கவும்.

இவற்றையும் பாருங்கள்iPadஇல் செயலியைத் திறத்தல்
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.