இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுடன் பாஸ்வேர்டுகள் மற்றும் பாஸ்கீக்களைப் பகிர்தல்

“பகிரப்பட்ட பாஸ்வேர்டு குழுக்கள்” என்பது உங்கள் குடும்பத்தினர் மற்றும் நம்பகமான தொடர்புகளுடன் பாஸ்வேர்டுகள் மற்றும் பாஸ்கீக்களைப் பகிர்வதற்கான ஒரு சுலபமான மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

குழுவில் உள்ள அனைவரும் பாஸ்வேர்டுகளையும் பாஸ்கீக்களையும் சேர்க்கலாம். பகிரப்பட்ட பாஸ்வேர்டு மாற்றப்படும்போது, அது அனைவரின் சாதனத்திலும் மாறும்.

குழுவை உருவாக்குதல்

குறிப்பு: பகிரப்பட்ட பாஸ்வேர்டு குழுவை உருவாக்க, உங்கள் Apple கணக்கில் நீங்கள் உள்நுழைந்திருக்க .

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. “புதிய பகிரப்பட்ட குழு” பட்டன்-ஐத் தட்டவும்.

  3. குழுவிற்கான பெயரை உள்ளிட்டு, “நபர்களைச் சேர்” என்பதை கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் சேர்க்க விரும்பும் நபரின் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது ஃபோன் எண்ணை டைப் செய்து, “சேர்” என்பதைத் தட்டவும்.

    குறிப்பு: உங்கள் குழுவில் ஒரு நபரைச் சேர்க்க, அவர் உங்கள் தொடர்புகள் செயலியில் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும் iOS 17, iPadOS 17, macOS 14 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்பு உள்ள iPhone, iPad அல்லது Macஐ வைத்திருக்க வேண்டும். குழுவில் அவர்களைச் சேர்க்க முடிந்தால், அவர்களின் தொடர்புத் தகவல்கள் நீல நிறத்தில் தோன்றும். அது சாம்பல் நிறத்தில் தோன்றினால், அவர் iPad, iPhone அல்லது Mac சாதனங்கள் பகிரப்பட்ட பாஸ்வேர்டு குழுக்களை ஆதரிக்காமல் இருக்கக்கூடும்.

  5. “உருவாக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

  6. குழுவுடன் நீங்கள் பகிர விரும்பும் பாஸ்வேர்டுகளைத் தேர்ந்தெடுத்து, மேல் வலது மூலையில் உள்ள “நகர்த்து” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் இப்போதைக்கு எந்தவொரு பாஸ்வேர்டுகளையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றால், மேல் இடது மூலையில் உள்ள “இப்போது இல்லை” என்பதைத் தட்டவும்.

    நீங்கள் குழுவில் சேரும்படி அழைத்த நபர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம், மேலும் அவர்கள் அழைப்பை பாஸ்வேர்டுகள் > குழு அழைப்புகள் என்பதிலும் பார்க்கலாம்.

உங்கள் பகிரப்பட்ட பாஸ்வேர்டுகள் iCloud கீசெயினில் சேமிக்கப்படும். பிற சேமிக்கப்பட்ட பாஸ்வேர்டுகளைப் போலவே அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

குழுவிற்கு வேறு யாராவது அழைக்கப்படும் போதெல்லாம் அறிவிப்பைப் பெறுவீர்கள்.

குழுவை நிர்வகித்தல்

நீங்கள் குழுவை உருவாக்கினால், பிற உறுப்பினர்களைச் சேர்க்கலாம், அகற்றலாம் அல்லது குழுவை நீக்கலாம். குழுவின் பிற உறுப்பினர்களுக்கு இந்த வசதிகள் இல்லை. ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் குழுவிலிருந்து வெளியேறலாம்.

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. உங்கள் குழுவின் பெயரைத் தட்டவும்.

  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • குழுவில் உறுப்பினரைச் சேர்த்தல்: உங்கள் பெயரைத் தட்டி “நபர்களைச் சேர்” என்பதைத் தட்டவும்.

    • குழுவில் இருந்து ஓர் உறுப்பினரை அகற்றுதல்: உறுப்பினரின் பெயரைத் தட்டி “குழுவிலிருந்து அகற்று” என்பதைத் தட்டவும்.

    • பகிர்ந்த பாஸ்வேர்டு அல்லது பாஸ்கீயைக் குழுவிலிருந்து அகற்றுதல்: “தேர்ந்தெடு” என்பதைத் தட்டி, பகிர்ந்த பாஸ்வேர்டு அல்லது பாஸ்கீயுடன் கூடிய பகிர்ந்த கணக்கைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் “நீக்கு” பட்டன்-ஐத் தட்டவும்.

    • குழுவை நீக்க: உங்கள் பெயரைத் தட்டி “குழுவை நீக்கு” என்பதைத் தட்டவும்.

  4. மாற்றங்களைச் செய்து முடித்ததும், “முடிந்தது” பட்டன்-ஐத் தட்டவும்.

குழுவில் சேர்வதற்கான அழைப்புக்குப் பதிலளித்தல்

  1. உங்கள் iPadஇல் உள்ள பாஸ்வேர்டுகள் செயலிக்குச் செல்லவும்.

  2. அழைப்பைத் தட்டி, குழுவில் சேர “ஏற்கிறேன்” என்பதைத் தட்டவும். அழைப்பை நீங்கள் நிராகரிக்கலாம்.

முக்கியம்: அனுப்புபவரை உங்களால் அடையாளம் காணமுடியவில்லை என்றால் அழைப்பை ஏற்க வேண்டாம்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.