இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadOSஇன் அங்கீகரிக்கப்படாத மாற்றம்

உங்கள் சாதனத்தை நீங்கள் ஆன் செய்யும் தருணத்திலிருந்து நம்பகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும் வகையில் iPadOS வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து பாதுகாக்கவும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கார்ப்பரேட் தரவுகளுக்கான பயனர் அணுகலைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. iPadOSஇல் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைச் செய்வதால் (“ஜெயில்பிரேக்கிங்” என்றும் அழைக்கப்படுகிறது) பாதுகாப்பு அம்சங்கள் மீறப்படுவதுடன், ஹேக் செய்யப்பட்ட iPadக்குப் பாதுகாப்புச் சிக்கல்கள், நிலையற்றதன்மை, குறைந்த பேட்டரி ஆயுள் போன்ற பல சிக்கல்கள் ஏற்படலாம்.

  • பாதுகாப்புப் பாதிப்புகள். உங்கள் சாதனத்தை ஜெயில்பிரேக்கிங் செய்வது உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் உங்கள் iPadOS சாதனத்தையும் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு அடுக்குகளை நீக்குகிறது. உங்கள் iPadOS சாதனத்தில் இருந்து இந்தப் பாதுகாப்பு அகற்றப்பட்டால், ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடலாம், உங்கள் சாதனத்தைச் சேதப்படுத்தலாம், உங்கள் நெட்வொர்க்கைத் தாக்கலாம் அல்லது மால்வேர், ஸ்பைவேர் அல்லது வைரஸ்களைப் புகுத்தலாம்.

  • நிலையற்றதன்மை. அங்கீகரிக்கப்படாத மாற்றங்களால் சாதனம் அடிக்கடி மற்றும் எதிர்பாராத வகையில் செயலிழத்தல், உள்ளமைக்கப்பட்ட செயலிகள் மற்றும் மூன்றாம் தரப்புச் செயலிகள் செயலிழத்தல் மற்றும் பிரீஸ் ஆகுதல் மற்றும் தரவு இழப்பு ஏற்படலாம்.

  • பேட்டரி ஆயுள் குறைதல். ஹேக் செய்யப்பட்ட மென்பொருளால் பேட்டரி ஆயுள் விரைவாகக் குறையக்கூடும். இதனால் ஒருமுறை சார்ஜ் செய்த பிறகு கிடைக்கும் ஆற்றலை iPadஐச் செயல்படுத்தும்போது, முழுவதுமாகப் பயன்படுத்த முடியாமல் போகக்கூடும்.

  • வாய்ஸ் மற்றும் டேட்டாவின் நம்பகத்தன்மை இழப்பு. அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் காரணமாக அழைப்புகள் துண்டிக்கப்படலாம், டேட்டா இணைப்புகள் மெதுவாகவோ நம்பகத்தன்மையற்றதாகவோ மாறலாம் மற்றும் இருப்பிடத் தரவுகள் தாமதமாகவோ துல்லியமற்றதாகவோ இருக்கலாம்.

  • சேவைகளில் இடையூறு. iCloud, iMessage, FaceTime, Apple Pay, விஷுவல் வாயிஸ்மெயில், வானிலை, பங்குகள் போன்ற சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது சாதனத்தில் வேலை செய்யாமல் போகலாம். கூடுதலாக, Apple Push அறிவிப்புச் சேவையைப் பயன்படுத்தும் மூன்றாம் தரப்புச் செயலிகள் அறிவிப்புகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படலாம் அல்லது வேறு சாதனத்திற்கான அறிவிப்புகளைப் பெறலாம். iCloud மற்றும் Exchange போன்ற push அடிப்படையிலான பிற சேவைகள் அவற்றின் அந்தந்த சர்வர்களுடன் தரவை ஒத்திசைப்பதில் சிக்கல்களைச் சந்திக்கலாம்.

  • எதிர்கால மென்பொருள் புதுப்பிப்புகளைப் பயன்படுத்த முடியாமை. சில அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள், சரிசெய்ய முடியாத சேதத்தை iPadOSஇல் ஏற்படுத்தக்கூடும். எதிர்காலத்தில் Apple வழங்கும் iPadOS புதுப்பிப்பு நிறுவப்படும்போது ஹேக் செய்யப்பட்ட iPad நிரந்தரமாகச் செயல்படாமல் போவதற்கு இது வழிவகுக்கலாம்.

iPadOSஐ மாற்றியமைக்கும் எந்தவொரு மென்பொருளையும் நிறுவக்கூடாது என Apple கடுமையாக எச்சரிக்கிறது. iPadOSஇன் அங்கீகரிக்கப்படாத மாற்றம் என்பது iOS மற்றும் iPadOS மென்பொருள் உரிம ஒப்பந்தத்தின் மீறலாகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், இதன் காரணமாக ஏதேனும் அங்கீகரிக்கப்படாத மென்பொருள் நிறுவப்பட்டிருக்கும் iPadக்கான சேவையை Apple வழங்க மறுக்கலாம்.

Appleஆல் உற்பத்தி செய்யப்படாத தயாரிப்புகள் அல்லது Appleஆல் கட்டுப்படுத்தப்படாத அல்லது பரிசோதிக்கப்படாத சுயாதீன இணையதளங்கள் பற்றிய தகவல்கள் எந்தவித பரிந்துரையோ ஏற்பிசைவோ இல்லாமல் வழங்கப்படுகின்றன. மூன்றாம் தரப்பு இணையதளங்கள் அல்லது தயாரிப்புகளின் தேர்வு, செயல்திறன் அல்லது பயன்பாடு குறித்து Apple எந்தப் பொறுப்பும் ஏற்காது. மூன்றாம் தரப்பு இணையதளத்தின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு ஆதரவாக Apple எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. கூடுதல் தகவல்களுக்கு விற்பனையாளரைத் தொடர்புகொள்ளவும்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.