இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad உடன் Apple Pencilஐ (1ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்

இணக்கமான iPadஇல் உள்ள Lightning அல்லது USB-C கனெக்டரில் Apple Pencilஐ (1ஆம் தலைமுறை) பிளக் செய்வதன் மூலம் அதை இணைக்கலாம் சார்ஜ் செய்யலாம்.

Apple Pencil (1ஆம் தலைமுறை).

முகப்பு பட்டனைக் கொண்ட iPad உடன் Apple Pencilஐ (1ஆம் தலைமுறை) இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்

  1. மூடியை அகற்றி Apple Pencilஐ உங்கள் iPadஇல் உள்ள Lightning கனெக்டருக்குள் பிளக் செய்யவும்.

    iPadஇல் உள்ள Lightning கனெக்டருக்குள் பிளக் செய்யப்பட்டிருக்கும் முனையைக் காட்டும் வகையில், மூடி அகற்றப்பட்ட நிலையில் இருக்கும் Apple Pencil (1ஆம் தலைமுறை).
  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Apple Pencilஐ இணைத்தல்: “இணை” பட்டன் காட்டப்படும்போது அதைத் தட்டவும்.

      Apple Pencilஐ இணைத்த பிறகு, அதை iPadஇல் இருந்து எடுக்கவும். iPadஐ மீண்டும் தொடங்கும் வரையிலோ Bluetooth®ஐ ஆஃப் செய்யும் வரையிலோ மற்றொரு iPad உடன் இணைக்கும் வரையிலோ Apple Pencil இணைக்கப்பட்டே இருக்கும். Apple Pencilஐ மீண்டும் இணைத்தால் போதும் அதைப் பயன்படுத்தலாம்.

    • Apple Pencilஐ சார்ஜ் செய்தல்: iPadஇல் பொருத்தப்பட்டிருக்கும்போது Apple Pencil சார்ஜ் செய்யப்படும்.

      உங்கள் பென்சில் உடன் Apple Pencil சார்ஜிங் அடாப்டர் வழங்கப்பட்டிருந்தால், உங்கள் iPad உடன் வழங்கப்பட்ட Lightning கேபிள் மற்றும் பவர் அடாப்டரைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம்.

iPad (10ஆம் தலைமுறை) மற்றும் iPad (A16) மூலம் Apple Pencilஐ இணைத்தல் மற்றும் சார்ஜ் செய்தல்

  1. மூடியை அகற்றி, Apple Pencilஐ USB-Cஇல் இருந்து Apple Pencil அடாப்டரில் பிளக் செய்யவும்.

  2. உங்கள் iPad உடன் வழங்கப்பட்ட USB-C சார்ஜிங் கேபிளைப் பயன்படுத்தி அடாப்டரின் மறுமுனையை iPad உடன் இணைக்கவும்.

    USB-Cஇல் இருந்து Apple Pencil அடாப்டருடன் இணைக்கப்பட்டுள்ள Apple Pencil (1ஆம் தலைமுறை) இங்கே காட்டப்பட்டுள்ளது. அடாப்டரின் மற்றொரு முனை USB-C சார்ஜ் கேபிளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  3. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • Apple Pencilஐ இணைத்தல்: “இணை” பட்டன் காட்டப்படும்போது அதைத் தட்டவும்.

      Apple Pencilஐ இணைத்த பிறகு, அதை iPadஇல் இருந்து எடுக்கவும். iPadஐ மீண்டும் தொடங்கும் வரையிலோ Bluetoothஐ ஆஃப் செய்யும் வரையிலோ மற்றொரு iPad உடன் இணைக்கும் வரையிலோ Apple Pencil இணைக்கப்பட்டே இருக்கும். Apple Pencilஐ மீண்டும் இணைத்தால் போதும் அதைப் பயன்படுத்தலாம்.

    • Apple Pencilஐ சார்ஜ் செய்தல்: iPadஇல் பொருத்தப்பட்டிருக்கும்போது Apple Pencil சார்ஜ் செய்யப்படும்.

உதவிக்குறிப்பு: iPad உடன் வரும் USB-C சார்ஜிங் கேபிள் மற்றும் பவர் அடாப்டரைப் பயன்படுத்தியும் Apple Pencilஐ சார்ஜ் செய்யலாம்.

Apple Pencilஇன் பேட்டரி அளவைச் சரிபார்த்தல்

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.