இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadஇல் FaceTime அழைப்புக்கான இணைப்பை உருவாக்குதல்

FaceTimeஇல் FaceTime அழைப்பிற்கான இணைப்பை உருவாக்கி, நண்பர் அல்லது குழுவிற்கு (Mail அல்லது மெசேஜஸ் மூலம்) அதை அனுப்பலாம். இணைப்பைப் பயன்படுத்தி அவர்கள் அழைப்பில் இணையலாம் அல்லது அழைப்பைத் தொடங்கலாம்.

  1. iPadஇல் FaceTime  செயலிக்குச் செல்லவும்.

  2. “புதிது” என்பதைத் தட்டி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்குத் தொடர்புத் தகவலை உள்ளிடவும்.

  3. “இணைப்பு” பட்டன்-ஐத் தட்டவும்.

  4. இணைப்பை அனுப்புவதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும் (எடுத்துக்காட்டாக, மெசேஜஸ் அல்லது Mail).

கேலண்டரில், சந்திப்பிற்கான இடமாக FaceTime இணைப்பைச் சேர்த்து ரிமோட் வீடியோ சந்திப்பைத் திட்டமிடலாம்.

குறிப்பு: Apple சாதனம் இல்லாத நபர்களிடம் சமீபத்திய Chrome அல்லது Edge பதிப்பு இருக்கும் பட்சத்தில், அவர்களைக்கூட உங்கள் FaceTime அழைப்பில் சேரும்படி நீங்கள் அழைக்கலாம். அவர்கள் தங்கள் உலாவியிலிருந்து ஒருவருக்கொருவர் மற்றும் குழு FaceTime அழைப்புகளில் உங்களுடன் இணையலாம், அதற்கு அவர்கள் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை. வீடியோவை அனுப்புவதற்கு H.264 வீடியோ என்கோடிங் ஆதரவு தேவை.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.