இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPadக்கான பவர் அடாப்டர் மற்றும் சார்ஜ் கேபிள்

தயாரிப்புடன் வரும் USB-C பவர் அடாப்டர் மற்றும் சார்ஜிங் கேபிளைப் பயன்படுத்தி iPadஐ ஒரு பவர் அவுட்லெட்டுடன் இணைத்து பேட்டரியை சார்ஜ் செய்யலாம். அடாப்டரின் அளவு, வகை ஆகியவை iPad மாடல், நாடு அல்லது வட்டாரம் ஆகியவற்றைப் பொறுத்தது. சார்ஜ் கேபிளின் வகை உங்கள் iPad மாடலைப் பொறுத்தது.

சார்ஜிங் கேபிளைப் பயன்படுத்தி உங்கள் iPadஐ கம்யூட்டருடன் இணைக்கலாம், சார்ஜ் செய்யலாம், கோப்புகளைப் பரிமாற்றலாம், Macஇன் இரண்டாவது டிஸ்ப்ளேவாக iPadஐப் பயன்படுத்தலாம், மேலும் பலவற்றைச் செய்யலாம்.

USB-C பவர் அடாப்டர்

USB-C பவர் அடாப்டர்.

நீங்கள் மூன்றாம் தரப்பு பவர் அடாப்டரைப் பயன்படுத்தினால், அது இந்தப் பரிந்துரைக்கப்படும் விவரக்குறிப்புகளின்படி இருக்கவேண்டும்:

  • அதிர்வெண்: 50 முதல் 60 Hz வரை, சிங்கிள் ஃபேஸ்

  • வழங்கப்படவேண்டிய மின்னழுத்தம்: 100 முதல் 240 VAC வரை

  • அவுட்புட் மின்னழுத்தம்/மின்சாரம்: 5 to 15 V / 3 A

  • குறைந்தபட்ச பவர் அவுட்புட்: 15 W

  • அவுட்புட் போர்ட்: USB-C

USB-C சார்ஜிங் கேபிள்

USB-C சார்ஜிங் கேபிள்.

Lightningஇல் இருந்து USB-C கேபிள்

Lightningஇல் இருந்து USB-C கேபிள்.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.