iPadஇல் “முன்னோட்டம்” செயலியில் படம் அல்லது PDFஇல் விளக்கவுரையைச் சேர்த்தல்

PDF கோப்பில் நீங்கள் உரையை ஹைலைட் செய்யலாம், அடிக்கோடிடலாம் அல்லது குறுக்குக் கோடிடலாம். ஸ்டிக்கர்கள், கையொப்பங்கள், வடிவங்கள், உரை போன்றவற்றைப் பயன்படுத்தி PDF அல்லது படத்தில் விளக்கக் குறிப்பைச் சேர்க்கலாம்.

உரையைத் தேர்ந்தெடுத்து நகலெடுத்தல்

  1. iPadஇல் முன்னோட்டம் செயலிக்குச் செல்லவும்.

  2. PDFஐத் திறக்கவும்.

  3. உரையைத் தேர்ந்தெடுக்க, முதல் வார்த்தையைத் தொட்டுப் பிடித்து, கிராப் புள்ளிகளை நகர்த்தவும்.

  4. தேர்வை நகலெடுக்க, “நகலெடு” என்பதைத் தட்டவும்.

    அதன் பிறகு, உரையை வேறொரு ஆவணத்திலோ செயலியிலோ நீங்கள் ஒட்டலாம். உரையைத் தேர்ந்தெடுத்தல், வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் என்பதைப் பார்க்கவும்.

உரையை ஹைலைட் செய்தல், அடிக்கோடிடுதல் அல்லது குறுக்குக் கோடிடுதல்

முன்னோட்டம் செயலியில் உள்ள ஒரு PDFஇல் ஹைலைட் செய்யப்பட்ட உரை, கிடைக்கக்கூடிய ஹைலைட் நிறங்கள், அடிக்கோடிடுதல் மற்றும் குறுக்குக் கோடிடுதல் கருவிகள் ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
  1. iPadஇல் முன்னோட்டம் செயலிக்குச் செல்லவும்.

  2. PDFஐத் திறக்கவும்.

  3. உரையைத் தேர்ந்தெடுக்க இழுக்கவும், பிறகு “ஹைலைட்” என்பதைத் தட்டவும்.

  4. ஹைலைட் நிறத்தைத் தேர்வுசெய்யவும். இல்லையெனில் “அடிக்கோடிடு” அல்லது “குறுக்குக்கோடிடு” பட்டனைத் தட்டவும்.

விளக்கக் குறிப்பைச் சேர்த்தல்

முன்னோட்டம் செயலியில் ஒரு படம் திறந்து காட்டப்பட்டுள்ளது. ஸ்டிக்கர்கள், உரை போன்றவற்றைச் சேர்ப்பதற்கான விருப்பங்களை மெனு காட்டுகிறது. “மார்க்-அப்”, “தகவல்”, “பகிர்”, “மேலும்” ஆகிய பட்டன்கள் திரையின் மேற்புறத்திலும், விளக்கக் குறிப்புக் கருவிகள் திரையின் கீழ்புறத்திலும் காட்டப்பட்டுள்ளன.
  1. iPadஇல் முன்னோட்டம் செயலிக்குச் செல்லவும்.

  2. PDF அல்லது படத்தைத் திறக்கவும்.

  3. திரையின் மேற்பகுதியில் உள்ள “மார்க்-அப்” பட்டன்-ஐத் தட்டி, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள “சேர்” பட்டன்-ஐத் தட்டி, ஸ்டிக்கர், கையொப்பம், வடிவம், உரை போன்ற விருப்பங்களில் ஒன்றைத் தேர்வுசெய்யவும். படங்களைப் பொறுத்தவரை, நீங்கள் பட விளக்கத்தையோ லூப்பையோ சேர்க்கலாம்.

    உதவிக்குறிப்பு: நீங்கள் Apple Pencilஐ (இணக்கமான iPad உடன்) பயன்படுத்தலாம் அல்லது விரலைப் பயன்படுத்தி வரையலாம். iPad மாடல்களுடனான Apple Pencil இணக்கத்தன்மை என்பதைப் பார்க்கவும்.

மாற்றத்தைச் செயல்தவிர்க்க, விளக்கக் குறிப்புக் கருவிகளுக்கு இடதுபுறத்தில் உள்ள “செயல்தவிர்” பட்டன்-ஐத் தட்டவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.