இந்தக் கட்டுப்பாட்டை மாற்றினால் இந்தப் பக்கம் தானாக மாற்றப்படும்

iPad சாதனத்தில் இயல்புநிலைப் பயணப் பயன்முறையையும் மேப்ஸ் அலகுகளையும் தேர்வுசெய்தல்

பயணப் பயன்முறை, அலகுகள் ஆகியவை உட்பட, மேப்ஸ் செயலிக்கான அமைப்புகளை நீங்கள் மதிப்பாய்வு செய்து மாற்றலாம்.

இயல்புநிலைப் பயணப் பயன்முறை மற்றும் விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்தல்

வழிகளை வழங்கும்போது, உங்களுக்கு விருப்பமான பயணப் பயன்முறைக்கு மேப்ஸ் இயல்பாக மாறுகிறது. டிரைவிங், நடந்து செல்லுதல், பொதுப் போக்குவரத்துப் பயணம், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை நீங்கள் தேர்வுசெய்யலாம்.

  1. உங்கள் iPad சாதனத்தில் உள்ள மேப்ஸ் செயலிக்குச் செல்லவும்.

  2. தேடல் புலத்திற்கு அடுத்துள்ள உங்கள் படம் அல்லது முதலெழுத்துகளைத் தட்டி, “விருப்பத்தேர்வுகள்” என்பதைத் தட்டிய பிறகு விருப்பங்களைத் தட்டவும்.

    (உங்கள் படம், முதலெழுத்துகள் ஆகிய இரண்டுமே தேடல் புலத்திற்கு அடுத்து காட்டப்படவில்லை என்றால், “ரத்துசெய்” என்பதைத் தட்டவும் அல்லது தேடல் புலத்தைத் தட்டிய பிறகு “ரத்துசெய்” என்பதைத் தட்டவும்.)

  3. கூடுதல் விருப்பங்களைக் கண்டறிய, திரையின் கீழ்ப்பகுதியில் உள்ள மேப்ஸ் அமைப்புகளைத் தட்டவும்.

உங்கள் பயணப் பயன்முறையைப் பொறுத்து, டிரைவ் செய்து செல்லும்போது குறிப்பிட்ட ஒரு வருகை நேரத்தைத் தேர்வுசெய்தல், சைக்கிள் ஓட்டும்போதோ நடந்து செல்லும்போதோ போக்குவரத்து நெரிசல் அல்லது மலைப்பகுதிகளைத் தவிர்த்தல், நீங்கள் விரும்பும் போக்குவரத்து முறையைத் தேர்ந்தெடுத்தல் போன்ற வழித்தடங்களுக்கான மற்ற விருப்பத்தேர்வுகளை உங்களால் தேர்வுசெய்ய முடியும்.

“மேப்ஸ்” செயலியில் பயன்படுத்தப்படும் அலகுகளை மாற்றுதல்

2D மேப்பை நீங்கள் பெரிதாக்கும்போது அதன் மேல் இடதுபுறத்தில் ஓர் அளவுகோல் காட்டப்படும். அளவுகோலுக்குப் பயன்படுத்தப்படும் அலகுகளை நீங்கள் மாற்றலாம்.

  1. iPadஇல் அமைப்புகள்  செயலிக்குச் செல்லவும்.

  2. “பொது அமைப்புகள்” என்பதைத் தட்டி, “மொழி & வட்டாரம்” என்பதைத் தட்டவும்.

  3. “அளவீட்டு முறை” என்பதைத் தட்டி ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.
உதவியாக இருந்ததா?
எழுத்தின் அளவு: 250
அதிகபட்ச எழுத்தின் அளவு: 250
உங்கள் கருத்திற்கு நன்றி.
Morty Proxy This is a proxified and sanitized view of the page, visit original site.